இன்றைய பலன்கள் 16-06-2012 by Kalapam.com

மேஷம்:
இன்று, வரவுகளை எதிர்பார்த்து செலவுகளைச் செய்வீர்கள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பிவந்து சேரலாம். சில வேலைகளை முடிக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்வீர்கள். நண்பர்கள் சிலர் உங்களுக்காக செலவு செய்யலாம். திடீரென ஏற்படும் வேலையால் வழக்கத்திற்கு, மாறாக அதிக நேரம் பணிபுரியலாம். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

ரிஷபம்:
இன்று, மனதில் உயர்வான சிந்தனைகள் குடிகொள்ளும் நாள். சக ஊழியர் ஒருவரின் செயல்பாடுகளைப் பற்றி மற்றொருவரிடம் விமர்சிப்பீர்கள். குறைந்த அளவில் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்த காரியம் ஒன்றில், பெரிய அளவில் ஆதாயம் கிடைக்கலாம். உறவினர் ஒருவருக்காக, மற்றொருவரிடம் உத்தரவாதம் கொடுப்பீர்கள்.

மிதுனம்:
இன்று, தர்ம, புண்ணிய காரியங்களை செய்வீர்கள். ஒருவருக்கு கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரும், சில காரியங்களில் ஆரம்பத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும், பின்னர் முடிவுக்கு வரும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். உறவினர் வழியில் முக்கிய செய்தி ஒன்றைக் கேட்கலாம். தண்டச் செலவுகள் நேரும்.

கடகம்:
இன்று, உதவியாக இருந்த ஒருவரே தொல்லையாக மாறலாம். குடும்ப பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாகலாம். உடன் பிறப்புக்கள் தொடர்பான விஷயங்களில், பட்டும் படாமல் நடந்துகொள்ள வேண்டும். பிறருக்காக செலவுகள் செய்யலாம்.இல்லற துணையின் வார்த்தைகள் யோசிக்க வைத்தபோதும் வெளிகாட்டிக் கொள்ளாதீர்கள்.

சிம்மம்:
இன்று, விமர்சித்த சிலரே உங்களைப் பாராட்டுவர், செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிப்பதில் நாட்டம் செல்லும், வெளிவட்டாரத்தொடர்பு விரிவடையும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரும். காலை முதல் மாலை வரை பம்பரமாக கழன்று பணியாற்றுவீர்கள். சில விஷயங்களில் கர்வம், திமிராக நடந்து கொள்வீர்கள்.

கன்னி:
இன்று, கோவில்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். உங்களின் திட்டம் ஒன்றை, மற்றவர்களிடம் சொல்லாமல் ரகசியமாக வைப்பீர்கள். உங்களின் சொந்த விவகாரங்களில், மற்றவர்களை தலையிட அனுமதிக்க வேண்டாம். கொடுக்கல், வாங்கல்களில் குளறுபடிகளைச் சந்திக்கலாம்.

துலாம்:
இன்று, நல்ல காரியங்களைச் செய்யும் நாள். நீண்ட தூர பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். பெண்கள் வழியில் பெருமைப்படும் வகையிலான உதவி கிடைக்கும். பணத்தேவைகளை சரி செய்ய, சிலரிடம் கைமாத்து வாங்குவீர்கள். கடந்த காலத்தில் செய்த தவறு ஒன்றை நினைத்து, இன்று வருத்தம் அடைவீர்கள். வேலைப்பளுவால் அவதிகளுக்கு ஆளாகலாம்

விருச்சிகம்:
இன்று, வழக்கமாக செய்யும் வேலைஒன்றை செய்யமுடியாமல் போகலாம். வழக்கத்திற்கு மாறாக கூடுதல் நேரம் தூங்கலாம். சிலர் கேட்ட உதவியைச் செய்யாமல், அவர்களின் அதிருப்திக்கு ஆளாகலாம். தாயார் அல்லது உறவுப் பெண்கள் வழியில் அன்புத்தொல்லைகளைச் சந்திக்கலாம். பணிபுரிவோர் வேறு வேலை காரணமாக விடுப்பு எடுக்க நேரிடலாம்.

தனுசு:
இன்று, மனதில் இனம்புரியாத, மகிழ்ச்சி குடிகொள்ளும் நாள். எந்த விஷயத்திலும், மற்றவர்களை முந்திக்கொண்டு செய்லபடுவதை தவிர்க்க வேண்டும். சகோதரர்கள் உங்களுக்கு நல்ல யோசனை சொல்லலாம். நீங்கள் குறைவாக மதிப்பிட்ட ஒருவர் மூலம், பெரிய அளவில் உதவி கிடைக்கலாம். உறவினர் விஷயங்களில் பட்டும் படாமல் நடக்கவும்.

மகரம்:
இன்று, நீண்ட நாட்களாக செல்ல நினைத்த உறவினர் ஒருவரின் வீட்டிற்கு செல்லலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்களைப் புரிந்துகொள்ளாமல், ஏட்டிக்குப் போட்டியாக செயல்படலாம். சில வேலைகளை செய்ய திட்டமிட்டு, கடைசி நேரத்தில் அதில் மாற்றம் செய்யலாம். குறைந்த செலவில் முடியும் என நினைத்த வேலை ஒன்றுக்கு, அதிகமாக செலவாகலாம்.

கும்பம்:
இன்று, நண்பர் ஒருவர் உங்களுக்கு நல்ல யோசனை சொல்லலாம். பலத்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என, நினைத்த விஷயம் ஒன்று சுலபமாக முடிவுக்கு வரும். பயணங்கள் சந்தோஷம், மகிழச்சி தருவதாக அமையும். மனைவி, குழந்தைகளுடன் ஜாலியாக பொழுது போக்குவதில் நாட்டம் செல்லும். மற்றவர்கள் கடினமாக நினைக்கும் வேலை ஒன்றை, நீங்கள் எளிதாக செய்வீர்கள்.

மீனம்:
இன்று நடக்குமோ, நடக்காதோ என, சந்தேகத்தில் இருந்த காரியம் ஒன்று நல்ல விதமாக நடந்துவிடலாம். நீண்ட நாட்களாக வராத உறவினர் ஒருவர், உங்களின் வீட்டிற்கு வரலாம். வரவேண்டிய கடன் பாக்கி ஒன்றை, கண்டிப்புடன் கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில், அக்கறை காட்டுவீர்கள். நல்லது நடக்கும் நாள்.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *