இன்றைய பலன்கள் 17-06-2012 by Kalapam.com

மேஷம்:
இன்று தொழில் ரீதியாக சிலரின் விமர்சனங்களை, பாராட்டுக்களை எதிர்கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய ஒருவருக்காக, மற்றவர்களிடம் உதவி கேட்பீர்கள். ஒரு விஷயம் குறித்து பெரிய அளவில் மனக்கோட்டை கட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிந்த ஒருவர் உங்களுக்கும் அறிமுகமாகலாம். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் செல்லும்.

ரிஷபம்:
இன்று சக ஊழியர்கள், நண்பர்களின் விமர்சனங்களைச் சந்திக்கலாம். வழக்கத்தை விட கூடுதல் வேலைப்பளுவை எதிர்கொள்ளலாம். ஒரு வேலையை செய்ய திட்டமிட்டு, மற்றொரு வேலை காரணமாக அதை நிறுத்தி வைக்கலாம். உங்களின் மனம் நோகும் வகையில் சிலர் பேசலாம். மற்றவர்கள் செய்த தவறுக்கு, நீங்கள் பொறுப்பேற்க நேரிடலாம்.

மிதுனம்:
இன்று முரண்பாடுகள் கொண்ட சிலரிடம், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு செல்லலாம். நீங்கள் எதிர்பார்த்த நேரத்தில் வராத பணவரவு ஒன்று, இன்று திடீரென வரலாம். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒற்றுமையை ஏற்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். புதிய அனுபவம் பெறலாம்.

கடகம்:
இன்று சிலர் மீது கோபம் வந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக நடந்து கொள்வீர்கள். மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக சில காரியங்களைச் செய்வீர்கள். தொழில் ரீதியான உங்களின் செயல்பாடுகளை சிலர் பாராட்டலாம். நெடுநாட்களாக மனதை குடைந்துகொண்டிருந்த பிரச்னை ஒன்று முடிவுக்கு வரலாம்.

சிம்மம்:
இன்று அவசரமாக முடிக்க வேண்டிய வேலை ஒன்றால் அவதிப்படலாம். நண்பர்களுடன் பார்ட்டி, கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். வெளியிடங்களுக்கு செல்லும் போது, அங்கு உறவினர் ஒருவரை எதிர்பாராமல் சந்திக்கலாம். மற்றவர்களுக்காக பொறுப்பேற்று நீங்கள் சில காரியங்களைச் செய்யலாம். கணவன் மனைவி இடையே சிறு சச்சரவுகள் ஏற்படலாம்.

கன்னி:
இன்று புதியவர்கள் சிலரின் சந்திப்பு நிகழும். உங்களின் செயல்பாடுகளில் சிலர் சந்தேகம் கொள்ளலாம். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த காரியம் ஒன்று, கடைசி நேரத்தில் முடிவடையாமல் போகலாம். மற்றவர்கள் மத்தியில் உங்களை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள முற்படுவீர்கள். உறவினர்களுக்காக உங்கள் பணத்தை செலவிடலாம்.

துலாம்:
இன்று எந்த வேலையையும் பிறகு என தள்ளி வைக்காமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உங்களைப் பயன்படுத்தி, சிலர் காரியம் சாதிக்கலாம். பெண்களால் சந்தோஷமான அனுபவங்களைப் பெறலாம். கூட்டுத் தொழில் விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். கடனாக, கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரலாம். ஊக்கம், உற்சாகம் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்:
இன்று நாடி வந்தவர்களுக்கு, இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வீர்கள். பிரியமான சிலருடன், தொலைபேசியில் பேசி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கல்களில் நாணயமாக நடந்து கொள்வீர்கள். பதவி உயர்வை, பணவரவை எதிர்பார்ப்போர் நல்ல தகவல்களை கேட்கலாம். வழக்கு விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். பெண்களால் செலவு நேரும்.

தனுசு:
இன்று உங்களிடம் கடனுதவி கேட்ட, சிலரிடம் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். மற்றவர்களின் சொந்த விஷயங்களை அறிந்து கொள்வதில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்களின் செயல்பாடு யோசிக்க வைத்த போதும், பெரிது படுத்திக் கொள்ளாதீர்கள். சிறிய பிரச்னை ஒன்றுக்காக பெரிய அளவில் வாக்குவாதம் செய்யலாம். குடும்பச் செலவு கூடும்.

மகரம்:
இன்று நினைத்ததை எந்த வழியிலாவது சாதிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். அடுக்கடுக்காக குவியும் வேலைகளால் பரபரப்பாக செயல்படலாம். நண்பர்கள் உங்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வர். எந்த விஷயத்திலும் முந்திக் கொண்டு செயல்படுவதை தவிர்க்கவும். புதியவர்கள் சிலரின் உதவி கிடைக்கலாம்.

கும்பம்:
இன்று குடும்ப விஷயங்கள் அல்லது தொழில் ரீதியான விஷயங்களை நினைத்து, அதிக பயம் கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பு உண்டாகும். இல்லற துணையின் வகையில் ஆதாயங்கள் கிடைக்கப் பெறும். சிறிய வேலை ஒன்றுக்கு பலமுறை அலைய நேரிடலாம். மறதியால் அவதியுண்டு.

மீனம்:
இன்று கனிவான பேச்சுக்களால் காரியம் சாதிக்கும் நாள். உறவினர்கள் சிலர் உங்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்கலாம். வியாபாரிகளுக்கு, கடன் பாக்கிகள் வசூலாகும். கூட்டுத் தொழிலில் பிரச்னை வராமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டு பெருமை சேர்ப்பீர்கள். சந்தோஷ அனுபவம் உண்டு.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *