இன்றைய பலன்கள் 18-05-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, தற்பெருமை குணம் உள்ள ஒருவர், வீண் பேச்சுக்களினால், உங்களின் பொன்னான நேரத்தை விரயமாக்குவர். முக்கிய பணியை கவனத்தில் கொண்டு, அவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை, புதிய யுக்தியினால் சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். ஆடம்பர பணச்செலவு தவிர்க்கவும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, பொது விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி, சிறு அளவில் தொந்தரவு தரும். பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவது அவசியம். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். – கலாபம்

மிதுனம்:
இன்று, உங்கள் வாழ்வில் கூடுதல் வளம்பெற, புதிய வாய்ப்பு வரும். மதி நுட்பத்துடன் செயல்பட்டு, அதிக நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். அன்புக்கு உரியவர் பரிசுப்பொருள் தருவார். – கலாபம்

கடகம்:
இன்று, உங்கள் நலம் விரும்புவரின், நல்ல ஆலோசனையை ஏற்பது நன்மை பெற உதவும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீர் பெற, அதிக அளவில் பணிபுரிவீர்கள். முக்கிய செலவுக்கான பணம் கிடைக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பதால், உடல்நலம் சீராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் உணர்ந்து செயல்படுவது நல்லது. – கலாபம்

சிம்மம்:
இன்று, உருவாகிற குழப்பமான சூழ்நிலையை சரிசெய்வீர்கள். முன்னர் பெற்ற உதவிக்கு, நண்பர் உரிய வகையில் நன்மை புரிவார். தொழில், வியாபார நடைமுறை சீரான வளர்ச்சி பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். – கலாபம்

கன்னி:
இன்று, முன் யோசனையுடன் செயல்படுவது அவசியமாகும். பணி நிறைவேற காலஅவகாசம் தேவைப்படும். சக தொழில் சார்ந்தவரிடம் சச்சரவு கூடாது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். – கலாபம்

துலாம்:
இன்று, ஒருமுகத்தன்மையுடன் பணிபுரிவீர்கள். அக்கம்பக்கத்தவருடன் கூடுதல் அன்பு பாராட்டுவீர்கள். தொழிலில் திட்டமிட்ட உற்பத்தி, விற்பனை இலக்கு நிறைவேறும். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, இளமைக்கால இனிய நினைவை எண்ணி மகிழ்வீர்கள். செயல்கள் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். குடும்பத்தில், மங்கல நிகழ்வு உண்டாகும். உத்தியோகஸ்தர் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். – கலாபம்

தனுசு:
இன்று, கூடுதல் வேலைப்பளுவால் மனதில் சோர்வு அடைவீர்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற, கால அவகாசம் தேவைப்படும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். இயந்திர தொழிற்சாலை பணியாளர் பாதுகாப்பு நடைமுறையில், அதிக கவனம் பின்பற்றவும். தெய்வ வழிபாடு, தியானம் மனதில் சாந்த குணம் உருவாக்கும். – கலாபம்

மகரம்:
இன்று, முன்னர் தாமதமான செயல்களின் புதிய திருப்பம் ஏற்படும். எதிர்மனப்பான்மை உள்ளவரிடம் விலகுவது நல்லது. அதிக உழைப்பால் தொழில், வியாபார நடைமுறை சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும். – கலாபம்

கும்பம்:
இன்று, செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். வெகுநாள் விருப்பம் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகும். ஆதாய பணவருமானம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். – கலாபம்

மீனம்:
இன்று, நண்பர் உறவினரிடம் இனிமையாக பேசுவீர்கள். வாழ்வில் கூடுதல் வளம்பெற, புதிய திட்டம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் உருவான இடையூறு விலகும். சராசரி பணவரவுடன் நிலுவை பணம் வசூலாகும். அரசியல்வாதிகள், பொறுப்பான பதவிபெற அனுகூலம் உருவாகும். – கலாபம்

Related Posts:

«