இன்றைய பலன்கள் 18-06-2012 by Kalapam.com

மேஷம்:
இன்று செய்ய வேண்டாம் என தள்ளி வைத்த சில வேலைகளை, மீண்டும் செய்வீர்கள். உத்தியோக சூழ்நிலை ஆறுதல் தருவதாக அமையும். அண்டை அயலாரிடம் வீண் பேச்சுக்கள் பேசி நேரத்தை வீணடிப்பீர்கள். உறவினர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வர். உணவருந்தக் கூட நேரமில்லாமல் சில வேலைகளை செய்ய நேரிடும்.

ரிஷபம்:
இன்று நீங்கள் எதிர்பாராத சில தரப்பிலிருந்து உங்களுக்கு உதவி கிடைக்க வாய்ப்புண்டு. குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அடுத்த சில நாட்களுக்குப் பின் வரும் என நினைத்த பணவரவு ஒன்று இன்றே வந்து சேரும். நண்பர்கள் சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

மிதுனம்:
இன்று தந்தை வழியில் மனஸ்தாபம் வராமல் இருக்க, விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். சில விஷயங்களில், முன்னெச்சரிக்கையுடன் செயல்படாததன் மூலம் இழப்புகளைச் சந்திப்பீர்கள். வெளியூரில் இருக்கும் ஒருவரை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முற்பட்டு, அவர்கள் இல்லாமல் போகலாம். மற்றவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம்.

கடகம்:
இன்று வீட்டில் வசதி, வாய்ப்புகளை அதிகரிக்க முற்படுவீர்கள். மற்றவர்கள் மதிக்கும் வகையில் எந்த காரியத்தையும் செய்ய நினைப்பீர்கள். உங்களின் கடந்த கால செயல்பாடு ஒன்றை, மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களுக்கு வேண்டிய காரியம் ஒன்றைச் சாதிக்க மற்றவர்களை நாடுவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம்:
இன்று நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர், உங்களை தேடி வருவார். தொழில், வியாபார ரீதியாக வரவேண்டிய பண வரவுகளைப் பெறுவீர்கள். குழந்தைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர் ஒருவர், ஆதாயம் பெற, நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். சில வேலைகளுக்காக நீண்ட நேரம் காத்திருப்பீர்கள்.

கன்னி :
இன்று சில விஷயங்கள் குறித்து பெரிய அளவில் மனக்கோட்டை கட்டி, அது நடக்காமல் போகும். உங்களுக்கு வேண்டிய ஒருவருக்காக மற்றொருவரிடம் உதவி கேட்பீர்கள். இறை வழிபாடுகளில் நாட்டம் செல்லும். சுபகாரிய நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளி வைத்த வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

துலாம்:
இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தள்ளிப் போகலாம். உறவினர்கள் வருகையால் வழக்கமான வேலைகளில் தடைகள் ஏற்படலாம். புதிய காரியம் ஒன்றை துவக்க முற்படுவீர்கள். அலுவலக பணிகளில் முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். இல்லறத் துணையின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள்.

விருச்சிகம்:
இன்று மதிப்பு, கவுரவம் பார்த்து சில காரியங்களைச் செய்வீர்கள். சில விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவதன் மூலம், கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்பீர்கள். அலைச்சல் இல்லாமல் சில வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள்.

தனுசு :
இன்று மற்றவர்களை நம்பி எந்தக்காரியத்திலும் இறங்க வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் போது, நண்பர் ஒருவரை எதிர்பாராமல் பார்க்க நேரிடும். சில வேலைகளுக்காக நீண்ட நேரம் காத்திருப்பீர்கள். உடல் நிலையில் அசவுகரியங்கள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், சில வேலைகளைச் செய்ய நேரிடும்.

மகரம் :
இன்று வேலை நெருக்கடிகளால் வெறுப்பு, விரக்தி உண்டாகும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு, சில கரியங்களில் இறங்கிவிட்டு, அவதிப்படுவீர்கள். கடன் பாக்கி ஒன்றை கண்டிப்புடன் வசூலிப்பீர்கள். வெளியிடங்களுக்கு செல்லும் போது, உடனுக்குடன் வாகனங்கள் கிடைத்து சந்தோஷம் அடைவீர்கள். மற்றவர்களுக்காக செலவிடுவீர்கள்.

கும்பம்:
இன்று எடுத்த காரியங்களில் எதிர்பாராத வெற்றி கிடைக்கலாம். இரண்டு மூன்று நாட்களாக எதிர்பார்த்த பணவரவு ஒன்று இன்று கைக்கு வரும். மற்றவர்கள் பாராட்டும் வகையில், எந்தக் காரியத்தையும் செய்ய முற்படுவீர்கள். உறவினர் ஒருவர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கலாம். பெண்கள் விஷயங்களில், பட்டும் படாமல் நடந்து கொள்ளுங்கள்.

மீனம் :
இன்று பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிலரிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வீர்கள். நண்பர்கள் சிலர் உங்களுக்காக செலவு செய்யலாம். வெளியூரில் வசிக்கும் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு முக்கிய விஷயமாகப் பேசுவீர்கள். வீட்டுக்குத் தேவைகளுக்காக கணிசமாக செலவிடலாம். வீண் ஜம்பங்களால் அவதிக்கு ஆளாகலாம்.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *