இன்றைய பலன்கள் 20-05-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, உங்கள் நலம் விரும்புவரின் ஆலோசனை, மனதில் நம்பிக்கை தரும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, சமரசபேச்சு வார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, சிலர் பொறாமை குணத்தால், உங்கள் நற்செயலை குறை சொல்வர். தொடர்பில்லாத பணியில் ஈடுபட வேண்டாம். தொழிலில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு நல்லது. சீரான ஓய்வு, உடல்நலம் பாதுகாக்க உதவும். – கலாபம்

மிதுனம்:
இன்று, முக்கிய செயலை, அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபார நடைமுறையில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது அவசியம். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவினால், நித்திரை கெடலாம். தாயின் ஆறுதல் வார்த்தை, நம்பிக்கை தரும். – கலாபம்

கடகம்:
இன்று, உற்சாக நிலையால், சந்தோஷ முகத்தோற்றம் பெறுவீர்கள். எதிர்கால வாழ்வில், நம்பிக்கை வளரும். தொழிலில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். அதிக பணவரவில், கொஞ்சம் சேமிப்பீர்கள். நண்பருடன், விருந்தில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

சிம்மம்:
இன்று, உங்கள் செயலில் தகுந்த நிதானம் பின்பற்றுவது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைக்கிற வாய்ப்பை, தவறாமல் பயன்படுத்த வேண்டும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். சொத்து ஆவணம் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். – கலாபம்

கன்னி:
இன்று, முன்னர் ஒதுக்கி வைத்த பணி ஒன்றை, ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உங்களின் தனித்திறமையை, நண்பர் பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். – கலாபம்

துலாம்:
இன்று, உங்களின் சுதந்திரத்தில் சிலர் குறுக்கிடுவர். மனதில் பொறமை வளர்ப்பதால், தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபார நடைமுறை சீராகும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். ஓய்வு நேரத்தில், இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, வாழ்வில் கூடுதல் வளம்பெற, புதிய வாய்ப்பு உருவாகும். நம்பிக்கையுடன் பயன்படுத்தி, தகுந்த நன்மை பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

தனுசு:
இன்று, நியாய, தர்ம குணம் அதிக அளவில் பின்பற்றுவீர்கள். அறிமுகம் இல்லாதவரும், உங்களுக்கு மனமுவந்து உதவுவர். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்பதிகரமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு, தாமதமான சலுகைப்பயன் எளிய முயற்சியால் கிடைக்கும். – கலாபம்

மகரம்:
இன்று, குடும்ப பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு, நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற, கால அவகாசம் தேவைப்படும். முக்கிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். வெளியூர் பயணம் பயன் கருதி மேற்கொள்ளலாம். காலக்கெடு தவறிய உணவுப் பொருள், கவனக்குறைவால் வாங்க நேரிடலாம். – கலாபம்

கும்பம்:
இன்று, அவசரப்பணி உருவாகி, சிரமம் தரலாம். பணியின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சீர்பெற புதிய யுக்தி உதவும். அளவான பணவரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில், தகுந்த கவனம் வேண்டும். – கலாபம்

மீனம்:
இன்று, மனதில் அன்பும், கருணையும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகும். பொறுப்புடன் பணிபுரிந்து, ஆதாய பணவரவு பெறுவீர்கள். குடும்பத்துடன் உறவினர் இல்லம் சென்று வருவீர்கள். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். – கலாபம்

Related Posts:

«