இன்றைய பலன்கள் 21-05-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, உங்கள் எண்ணத்திலும், செயலிலும் உறுதி நிறைந்திருக்கும். சில மாற்றம் பின்பற்றி, அதிக நன்மை பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். உபரி பணவருமானம் உண்டு. எதிரியால் இருந்த தொல்லை குறையும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, சிலரது அர்த்தமற்ற பேச்சு மனதை சங்கடப்படுத்தும். கடின பணியில், தகுந்த பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது. – கலாபம்

மிதுனம்:
இன்று, உங்கள் தன்மானத்திற்கு சோதனை வரலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். – கலாபம்

கடகம்:
இன்று, அன்பு நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். உங்களின் தொழில் நுணுக்கத்தை பார்த்து, மற்றவர் வியப்படைவர். பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

சிம்மம்:
இன்று, உங்களின் சிரம சூழ்நிலையை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை சிறக்க, கூடுதல் நேரம் பணிபுரிவது அவசியம். பணவரவை காட்டிலும் அதிக பணம் செலவாகும். உடல்நலத்திற்கு சத்து நிறைந்த உணவு உண்பது நல்லது. அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். – கலாபம்

கன்னி:
இன்று, குடும்ப பெரியவர்களின் கருத்துக்களை மதித்து செயல்படுவீர்கள். பூர்வ சொத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். இல்லறத்துணையின் அன்பில் மகிழ்வீர்கள். – கலாபம்

துலாம்:
இன்று, சுற்றுப்புற சூழ்நிலை, உங்கள் மனதுக்கு தொந்தரவாக இருக்கும். அவப்பெயர் வராத அளவுக்கு செயல்படுவது நல்லது. தொழிலில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில், பணம் செலவு செய்ய நேரிடலாம். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, உறவினர் முன்னர் செய்த உதவிக்கு மறு உபகாரம் செய்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில், நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சு வார்த்தை சுமுக தீர்வை உருவாக்கும். – கலாபம்

தனுசு:
இன்று, உங்களின் புதிய எண்ணங்களை செயல்வடிவமாக உருவாக்குவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். – கலாபம்

மகரம்:
இன்று, சிறு பணியையும், பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். மாமன், மைத்துனர் ஆதரவாக செயல்படுவர். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும். – கலாபம்

கும்பம்:
இன்று, நீங்கள் சிலரது விமர்சனத்தால், மனவருத்தம் கொள்கிற நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது அவசியம். அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும். பெண்கள், தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். – கலாபம்

மீனம்:
இன்று, எதிர்வரும் பணிகளுக்காக, தகுந்த முன்னேற்பாடு செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

Related Posts:

«