இன்றைய பலன்கள் 22-04-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, உங்களுக்கு சிலர் இடையூறு செய்ய முயற்சிப்பர். செயல்களில் தற்காப்பு பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபார இலக்கு கூடுதல் கால அவகாசத்தில் நிறைவேறும். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, ஞாபக மறதியினால், முக்கிய செயல் நிறைவேறுவது விடுபட்டு போகலாம். பணி சிறக்க, அதிக பொறுப்புணர்வு அவசியம். தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். குறைவான அளவில் பணம் கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. – கலாபம்

மிதுனம்:
இன்று, உங்கள் மனதில் இருந்த சஞ்சலம் குறையும். குடும்ப உறுப்பினர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகும். உபரி பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

கடகம்:
இன்று, உங்களின் திறமையை, தன்னைச் சார்ந்த பாராட்ட வேண்டும் என, எண்ணுவீர்கள். குடும்பத்தின் தேவை அதிகரிக்கும். தொழிலில் மாறுபட்ட தன்மை இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் தங்க நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். – கலாபம்

சிம்மம்:
இன்று, உங்களின் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் கூடுதல் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். – கலாபம்

கன்னி:
இன்று, கூடுதல் அன்பு மனப்பான்மையுடன் செயல்படுவது அவசியமாகும். உறவினர் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். தொழிலில் அதிக மூலதனம் தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது நல்லது. சுற்றுச்சூழலை தொந்தரவினால், நித்திரை கெடலாம். – கலாபம்

துலாம்:
இன்று, உங்கள் மனதில் நேர்மறை சிந்தனை உருவாகும். உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, இஷ்டதெய்வ அருள் பலம் துணை நிற்கும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள், குடும்ப பணவசதிக்கேற்ப ஆடை, ஆபரணம் வாங்குவர். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, இனிய எண்ணங்களால், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நண்பர், உறவினர் உதவிகரமாக நடந்து கொள்வர். தொழிலில், அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சில் அனுகூலம் உருவாகும். – கலாபம்

தனுசு:
இன்று, சிலரது பேச்சு, உங்கள் மனதை கஷ்டப்படுத்தலாம். பெருந்தன்மையுடன் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். அதிக விலை உள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும். – கலாபம்

மகரம்:
இன்று, மாறுபட்ட நிகழ்வுகளை பார்த்து, மனதில் விரக்தி கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர் ஆதரவாக நடந்து கொள்வர். அதிக உழைப்பால், தொழில் வளர்ச்சி சீராகும். தவிர்க்க இயலாத வகையில், பணச்செலவு ஏற்படலாம். போக்குவரத்தில் கவனநடை நல்லது. – கலாபம்

கும்பம்:
இன்று, லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். நிலுவைப் பணி குறிப்பிடத்தக்க அளவில் நிறைவேறும். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாக இருக்கும். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். – கலாபம்

மீனம்:
இன்று, உங்கள் மனதில் கூடுதல் தைரியம் ஏற்படும். சிறு செயலையும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் இருந்த இடையூறு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

Related Posts:

«