இன்றைய பலன்கள் 26-04-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, மகிழ்ச்சியுடன் பணிபுரிவீர்கள். பூர்வ புண்ணிய நற்பலன் துணை நின்று, அதிக நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி வியத்தகு முன்னேற்றம் பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். முக்கிய வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

ரிஷபம்:
இன்று, உங்கள் குடும்ப பெரியவர்களின் ஆலோசனை நல்வழி காட்டும். உத்வேகமுடன், புதிய பாதையில் நடைபோடுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து, வாழ்க்கைத்தரம் உயரும். ஆதாய பணம் வரவில், கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். – கலாபம்

மிதுனம்:
இன்று, உங்களுக்கு இடையூறு செய்பவரை உணர்ந்து கொள்வீர்கள். புதிய முயற்சியை, பின் ஒரு அனுகூல நாளில் துவங்கலாம். தொழிலில், அளவான மூலதனம், தகுந்த உழைப்பு என்கிற நடைமுறை பின்பற்றுவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வகை தவிர்ப்பது நல்லது. – கலாபம்

கடகம்:
இன்று, சம்பந்தமில்லாத பணி ஒன்று, குறுக்கிடுவதால் சஞ்சலம் கொள்வீர்கள். தேவை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும். சேமிப்பு பணம், அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். சீரான ஓய்வு, உடல்நலம் பாதுகாக்க உதவும். – கலாபம்

சிம்மம்:
இன்று, உங்களின் திறமையை சிறப்பாக பயன்படுத்துவீர்கள். முயற்சிக்கு உரிய பலன், முழுமையாக கிடைக்கும். தொழில் வளர்ச்சி இலக்கு நிறைவேறி, உபரி பணவரவைத் தரும். நண்பருக்கு தேவையான உதவி வழங்குவீர்கள். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

கன்னி:
இன்று, உங்கள் பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் சிறுஅளவில் குறுக்கீடு வரலாம். நல்முயற்சியினால் சரியாகும். தாராள மனதுடன் பணம் செலவு செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின், ஆறுதல் வார்த்தை மனதுக்கு நம்பிக்கை தரும். – கலாபம்

துலாம்:
இன்று, உங்கள் செயல்களில் நேர்த்தியும், கலை ரசனையும் நிறைந்திருக்கும். நண்பர், உறவினர் பாராட்டுவர். தொழில் வளர்ச்சி இலக்கு, குறித்த காலத்தில் நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, சிலர் உங்களிடம் எதிர்மறை எண்ணத்துடன் பேசுவர். அவர்களிடம் விலகி, சொந்தப்பணியில் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். கூடுதல் பணச்செலவு ஏற்படும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். – கலாபம்

தனுசு:
இன்று, உங்கள் மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல செயல்களால், பலரது நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். – கலாபம்

மகரம்:
இன்று, உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அதிக பாசம் கொள்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி, குதூகலம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் வாய்ப்பு வரும். தாராள பணவரவில், சேமிப்பை அதிகரிப்பீர்கள். பணியாளர்களுக்கு, எதிர்பார்த்த சலுகைப்பயன் கிடைக்கும். – கலாபம்

கும்பம்:
இன்று, <உங்கள் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். அடுத்தவர் நம்பிக்கையுடன் தருகிற, தொடர்பில்லாத பணியை ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சராசரி நிலை இருக்கும். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள். – கலாபம்

மீனம்:
இன்று, உங்களின் பதற்ற சூழ்நிலையால், நல்ல குணம் உள்ளவரையும் தவறாக கருதுவீர்கள். தொழிலில், நிலுவைப் பணி நிறைவேற்றுவது அவசியம். பணவரவை விட புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். உடல்நலம் சீர் பெற, தகுந்த சிகிச்சை பெறுவீர்கள். அரசியல்வாதிகள், சமரச பேச்சை பின் ஒரு அனுகூல நாளில் துவங்கலாம் – கலாபம்

Related Posts:

«