இன்றைய பலன்கள் 27-04-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, உங்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் வேண்டும். செயல் நிறைவேற, கால அவகாசம் தேவைப்படும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணச்செலவில், சிக்கனம் பின்பற்றுவீர்கள். பெண்கள் நகை இரவல், கொடுக்க வாங்க வேண்டாம். – கலாபம்

ரிஷபம்:
இன்று, நீங்கள் முன்னர் சிலரிடம் கேட்ட உதவி கிடைக்கும். மனம் செயலில், உற்சாகம் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிப் பணி இனிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

மிதுனம்:
இன்று, உங்கள் மனதில் நற்சிந்தனை வளரும். புதியவர்களின் அறிமுகம், நட்பு கிடைக்கும். திறமைமிகு செயலால் தொழிலில், வியாபாரத்தில் திருப்திகர வளர்ச்சி உருவாகும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

கடகம்:
இன்று, உங்களின் வெளிவட்டார தொடர்பு, சிறுஅளவில் தொந்தவு தரும். குடும்ப பொறுப்பை உணர்ந்து, செயல்படுவது அவசியம். தொழிலில், அளவான மூலதனம் போதும். சராசரி பணவரவு கிடைக்கும். காலமுறை உணவுப்பழக்கம், உடல்நலம் பாதுகாக்க உதவும். – கலாபம்

சிம்மம்:
இன்று, உங்களிடம் எதிர்மறையாக பேசுபவரிடம் விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம். வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபார நடைமுறையில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. பிறர் பார்வையில், அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். தியானம்,தெய்வ வழிபாடு மனஅமைதி தரும். – கலாபம்

கன்னி:
இன்று, உங்கள் செயல்களில் மதிநுட்பம் நிறைந்திருக்கும். உழைப்பிற்கான பலன், அதிக அளவில் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து சமூக அந்தஸ்து கூடும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

துலாம்:
இன்று, உங்களின் துன்பம் பிறரிடம் சொல்ல வேண்டாம். இஷ்டதெய்வ அனுகூலத்தினால், நன்மை வந்து சேரும். தொழில், வியாபார நடைமுறையில் சிறுமாற்றம் செய்வீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, உங்கள் நண்பர் ஒருவர் உதவி கேட்பார். இயன்ற அளவில் உதவி புரிந்து, நட்பை வளர்ப்பீர்கள். தொழிலில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். – கலாபம்

தனுசு:
இன்று, உங்களின் அன்பை பெற்றவர், மாறுபட்ட குணத்துடன் நடந்து கொள்வர். பெருந்தன்மையுடன் சொந்தப் பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபார நடைமுறை சீராகும். தாராள அளவில் பணம் செலவு செய்வீர்கள். காலமுறை உணவுப்பழக்கம், உடல்நலம் பாதுகாக்க உதவும். – கலாபம்

மகரம்:
இன்று, உங்கள் மனதில் தன்மான சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்திற்கான தேவையை பூர்த்தி செய்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர, கூடுதல் வாய்ப்பு வரும். பணவரவில் முன்னேற்றம் உண்டு. வெகுநாள் தேடிய பொருள் கைவந்து சேரும். – கலாபம்

கும்பம்:
இன்று, உங்கள் பணியில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர் உதவிகரமாக செயல்படுவர். தொழில் வளர்ச்சிப் பணி, குறித்த காலத்தில் நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். – கலாபம்

மீனம்:
இன்று, உங்களின் நற்செயலை சிலர் பரிகசித்து பேசுவர். மனதில் கூடுதல் நம்பிக்கையுடன் பணிபுரிவது அவசியம். தொழில், வியாபாரம் செழிக்க சில சீர்திருத்தம் பின்பற்றுவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். சுற்றுச்சூழல் தொந்தரவினால் நித்திரை கெடலாம். – கலாபம்

Related Posts:

«