இன்றைய பலன்கள் 28-06-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, சிறு செயலையும் நேர்த்தியுடன் மேற்கொள்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். தாராள பணவரவு பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, தன்னைச் சார்ந்தவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க புதிய வாய்ப்பு வரும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு, சலுகைப்பயன் கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். – கலாபம்

மிதுனம்:
இன்று, உங்கள் மனதில் அலட்சியத்தன்மை ஏற்படலாம். முன்னர் உதவி புரிந்தவர்களுக்கு, உரிய மரியாதை தருவது, நற்பெயரை பாதுகாக்க உதவும். தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். காலக்கெடு தவறிய உணவுப் பொருள், கவனக் குறைவால் வாங்க நேரிடலாம். – கலாபம்

கடகம்:
இன்று, அவசரப்பணி உருவாகி, மனதில் பதற்றம் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர், தேவையான உதவி வழங்குவர். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். அத்தியாவசிய செலவுக்கு, கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். – கலாபம்

சிம்மம்:
இன்று, உங்களின் இஷ்ட தெய்வ அனுக்கிரகம் துணை நின்று உதவும். முக்கியமான பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். உபரி பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

கன்னி:
இன்று, உண்மை, நேர்மை நிறைந்த செயலுக்கு உரிய மதிப்பு தருவீர்கள். புதியவர்களின் அறிமுகம் நன்மை கிடைக்க உதவும். தொழிலில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் வசூலாகும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

துலாம்:
இன்று, உங்கள் மனதில் இனம் புரியாத வருத்தம் ஏற்படலாம். செயல்களில் குளறுபடி வராமல், பணிபுரிவது நல்லது. தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும். குறைந்த அளவில், பணவரவு கிடைக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி, அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, உங்களை அறியாதவரிடம், குடும்ப சிரமம் பற்றி பேச வேண்டாம். தொழிலில் எதிர்பார்த்ததை விட உற்பத்தி, விற்பனையின் அளவு குறையலாம். பணச்செலவில் சிக்கனம் நல்லது. வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள். ஓய்வு நேரத்தில், இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும். – கலாபம்

தனுசு:
இன்று, உங்கள் பணிகளில் அனுபவ அறிவு பரிமளிக்கும். மனதில் பெருமிதம் கொள்வீர்கள். தொழிலில் அதிக மூலதனத்தில், அபிவிருத்தி செய்வீர்கள். உற்பத்தி, விற்பனையின் அளவு கூடும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். – கலாபம்

மகரம்:
இன்று, நற்குணம் உள்ள நண்பரை, தகுதிக் குறைவாக கருதுகிற மனப்பான்மை கொள்வீர்கள். பொறுமையும், பெருந்தன்மையும் குணமும், நட்பை பாதுகாக்க உதவும். கூடுதல் உழைப்பு தொழிலில் உற்பத்தி, விற்பனையை சீராக்கும். குடும்பத்தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். – கலாபம்

கும்பம்:
இன்று, திட்டமிட்ட உழைப்பினால், வாழ்வில் முன்னேற்ற பாதையை அறிவீர்கள். நண்பரின் ஆதரவு கூடுதல் நம்பிக்கையை தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் புதிய வளர்ச்சிப் பரிமாணம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். – கலாபம்

மீனம்:
இன்று, முரண்பட்ட குணம் உள்ளவர்களை, சந்திக்கின்ற நிலைமை ஏற்படலாம். சூழ்நிலை உணர்ந்து விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். அத்தியாவசிய செலவுகளுக்கு, சேமிப்பு பணம் பயன்படும். பெண்களுக்கு, தாய்வீட்டு உதவி கிடைக்கும். – கலாபம்

Related Posts:

«