இயேசுவின் பிறந்த வருடம் தவறாகக் கணிக்கப் பட்டுள்ளது : போப்பாண்டவர்

தற்போது பரவலாக நம்பப் பட்டு வரும் இயேசுவின் பிறந்த வருடம் அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது எனவும் வத்திக்கானிலிருந்து போப்பாண்டவர் அறிவித்துள்ளார்.


நிகழ்காலத்தில் பெரும்பாலான மக்களால் பாவிக்கப்பட்டு வரும் கலெண்டர் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான Dionysius Exiguus என்பவரால் உருவாக்கப் பட்டதுடன் இவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள இயேசுவின் பிறந்த வருடம் பல வருடங்கள் முன்னதாகவும் காட்டப் பட்டுள்ளது. இத்தகவலை போப் பெனெடிக்ட் XVI தான் எழுதி நேற்று நவம்பர் 21 ஆம் திகதி பிரசுரமான ‘Jesus of Nazareth: The Infancy Narratives’ எனும் இயேசுவின் வாழ்க்கை பற்றிக் கூறும் புத்தகத்தில் உள்ள மூன்று பாகங்களில் கடைசிப் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் கூட இயேசுவின் பிறந்த தினம் குறித்து கிறித்தவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. இதில் பெரும்பாலான கிறித்தவர்கள் இயேசு கி,மு 6 தொடக்கம் கி.மு 4 இடையிலான காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர்.

உலகில் வாழும் சுமார் ஒரு பில்லியன் கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான 85 வயதுடைய போப்பாண்டவர் பெனெடிக்ட் XVI இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள மற்றுமொரு கருத்து அத்தனை பேரினதும் கண் புருவங்களை உயர்த்தியுள்ளது. அத்தகவல் எதுவெனில் கிறித்தவ மதத்தில் கழுதைகள் உட்பட ஏனைய விலங்குகள் இயேசுவின் பாரம்பரிய பிறப்பு வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்விலங்குகளுக்கும் கிறித்தவ மதத்துக்கும் துளிக் கூட சம்பந்தம் இல்லையென்றும் கூறியிருப்பது தான்.

இது மட்டுமல்லாமல், கிறித்தவ மதத்தில் குறிப்பிடப்படும் தேவதைகள், ஆடு மேய்ப்பவர்களுக்கு இயேசு பிறக்கப் போகிறார் என்று முன்னறிவிப்பு செய்து ஏதும் பாடவில்லை எனவும் போப்பாண்டவர் கூறியுள்ளார்.

‘Jesus of Nazareth: The Infancy Narratives’ எனும் புத்தகம் நேற்று சுமார் 50 நாடுகளில் புத்தக நிலையங்களைச் சென்று சேர்ந்துள்ளதுடன் இன்னமும் மில்லியன் பிரதிகள் திட்டமிடப்பட்டும் உள்ளன. இப்புத்தகத்தில் போப்பாண்டவர் இறையருள் பெற்றவர்களான மத்தீவ் மற்றும் லூக்கே பற்றியும் கூறியுள்ளார். இதில் இயேசுவின் பிறப்புக்கு சில மாதங்கள் முன்னரும், பின்னரும் என்ன நடந்தது என்பது பற்றிய விளக்கம் உள்ளது.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *