இரட்டை கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை


தங்காலை கடற்கரையில் இடம்பெற்ற இரண்டு கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு பேருக்கு தங்காலை உயர் நீதிமன்றம் நேற்று மரணத் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

இந்த கொலை சம்பவம் 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உனக்குருவ பகுதியை சேர்ந்த 52 மற்றும் 61 வயதுடைய சகோதரர்களே குறித்த இருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி மற்றும் துப்பாக்கி பயன்படுத்தி சுட்டுக்கொலை செய்துள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் நான்கு பேர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர், ஆனால் அதில் இருவர் மீனவர்கள் என்றும் குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்களை நீதிமன்றம் விடுதலை

செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது.

எஞ்சிய இரு சகோதரர்களினதும் குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டது எனவே அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தங்காலை உயர் நீதிமன்றம் தீர்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«