இரட்டை வேஷமிடும் தமிழ் அரசியல் வாதிகள் – அம்பலப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சி


தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் மிகவும் மோசமான முறையில் இனவாத செயற்பாடுகளை தூண்டுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், போலிவேடமிட்டு தமிழ் அரசியல் வாதிகள் தென்னிலங்கையில் நல்லிணக்க முகத்தை காண்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இனவாத அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்திற்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார், இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கில் தமிழ் அப்பாவி மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மிகவும் மோசமான முறையில் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர்.

அந்த மக்கள் இனவாதமாக செயற்படுவதில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் இனவாதத்திற்கு உயிர் கொடுத்து வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, வடக்கிலிருந்து சிங்களவர்கள் விரட்டியடிக்கப்படும் அதேவேளை, விகாரைகளை அகற்றுமாறும் கோரிவருகின்றனர்.

மேலும், வடக்கு பகுதிக்கு சுற்றுலா செல்லும் சிங்களவர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதனை இனவாத ரீதியில் விமர்சிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts:

«