இரண்டாவது சர்வதேச சினிமா விழா யாழில்!


முதலாவது தமிழ் திரைப்படம் கீசகவதம் வெளியிடப்பட்டு 100 ஆவது வருடத்திலும், முதலாவது பேசும்படம் காளிதாஸ் வெளிவந்து 75ஆவது வருடத்திலும் நின்று கொண்டு யாழ்ப்பாணம் எனும் ஒரு சிறிய யுத்தத்தால் குதறி எறியப்பட்ட பிராந்தியமொன்றின் இரண்டாவது சர்வதேச சினிமா விழாவினை நடாத்தவுள்ளதாக யாழ்.சர்வதேச சினிமா விழாக்குழு தலைவர் பாக்கியநாதன் அகிலன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சினிமா விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் ஸ்குயரில் நடைபெற்றது.

இதன்போது ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் சினிமாவின் இந்த நூற்றாண்டுப் பயணத்தில் தென்னிந்திய சினிமாபண்பாட்டுப் புலத்தின் வெவ்வேறு களங்களில் வெவ்வேறு சினிமாத் துறைகளில் ஈழத்தமிழர்களின் பங்கும் பணிகளும் கலந்து போயுள்ளன.

ஒரு தொழிற்சாலையாக தமிழ் சினிமா இந்த நூற்றாண்டுப் பயணத்தின் விளைவாக பெருவளர்ச்சி கண்டுள்ளது.

அதனூடாக தமிழில் ஒரு பெரிய வெகுசன சினிமாப் பண்பாட்டைக் கட்டியெழுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts:

«