இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்த ஆப்கான் அதிபர் இந்தியா வருகை!

Monday, 12 November 2012 06:29

இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்தும் நோக்கில் ஆப்கன் அதிபர் ஹமீத் ஹர்சாய் இந்தியா வந்துள்ளார்.


நான்கு நாள் சுற்றுப்பயணமாக  இந்தியா வந்துள்ள ஹமீத் ஹர்சாய், முதலில் மும்பை சென்றார். இன்று டெல்லி வந்திருக்கும் அவரை வெளியுறவுத் துறை  இணை அமைச்சர் அஹமத், வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மதாய் ஆகியோர் வரவேற்றனர்.

காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ஆகியவர்களை சந்தித்து ஆப்கானில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஹமீத் ஹர்சாயியை  உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசியுள்ள அவர் ஆப்கானிஸ்தான் இந்திய முதலீடுகள் அதிகம் வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மேலும் பொருளாதார உறவுகள் முதலீடுகள் மூலமே வலுப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இன்றைய தினம் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜையும் ஹமீத் ஹர்சாய் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *