Today’s Sri Lankan News 07-08-2013 இலங்கைச் செய்திகள் 07-08-2013 by Kalapam.com

பிரதான செய்திகள்

செய்தித் தளங்கள்

TamilWin

கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் மனைவி கணவருக்கு பதவியுயர்வை கோருகிறார்
Tue, 6 August 2013 23:54:29

விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட தமது கணவருக்கு இறந்த பின்னர் வழங்கப்படவேண்டிய பதவியுயர்வு வழங்கப்படவில்லை. அத்துடன் அதற்கான ஓயவூதிய கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என்று முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் டி ஜெயரட்ணத்தின் மனைவி சரளா தெரிவித்துள்ளார்.

வெலிவேரிய அசம்பாவிதத்தில் அரசியல் லாபம் வேண்டாம் – ரணில் – விசாரணை நடத்துமாறு கர்தினால் கோரிக்கை!
Tue, 6 August 2013 23:45:14

வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் அண்மையில் நடந்த அசம்பாவிதம் தொடர்பில் அரசியல் லாபத்தை கருதாது அதனை கடந்து பேச வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் விருப்பு வாக்கு எண்களை வெளியிட்டது தேர்தல் திணைக்களம்!- சூடு பிடிக்கிறது பிரசாரக் களம்!
Tue, 6 August 2013 16:14:49

மாகாண சபைத் தேர்தலுக்கான கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் விருப்பு எண்கள் சற்று முன்னர் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்! தனியார் வானொலி தயாரிப்பாளர் ஒருவர் பணி நீக்கம்!
Tue, 6 August 2013 16:04:10

இலங்கையின் வெலிவேரிய பகுதியில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து இலங்கையின் தனியார் வானொலி ஒன்றின்  நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை அடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

எமது மண்ணையும் எம்மையும் நாமே ஆள வேண்டும்!- கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சிவகரன்
Tue, 6 August 2013 15:34:31

எமது மண்ணையும் மக்களையும் நாமே ஆள வேண்டும் என வடமாகாண சபைக்கான மன்னார் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான வி. எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக உயர்மட்ட நாடாளுமன்ற குழு! அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படக் கூடாது!
Tue, 6 August 2013 14:59:12

2014ம் ஆண்டு அரசாங்கத்தை மாற்றுவதற்கான தேர்தல் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக முன் எடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான நாடாளுமன்ற குழுவொன்றை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளது.

தமிழ் ஊடகங்களே பொது பலசேனாவைப் பற்றி தவறாக கூறுகின்றன: கலகொட ஞானசார தேரர்
Tue, 6 August 2013 14:20:54

முஸ்லிம் மக்கள், பொது பலசேனா அமைப்பினை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு தமிழ் ஊடகங்களே காரணம் என அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஆடி அமாவாசை தினமான இன்று பிதிர்க்கடனுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்ட கீரிமலை தீர்த்தம்!
Tue, 6 August 2013 12:02:33

ஆடி அமாவாசை தினமான இன்று கீரிமலைத் தீர்த்தக் கேணியில் பிதிர்க்கடன் நிறைவேற்ற பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வடமாகாணத் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
Tue, 6 August 2013 11:44:17

வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த பிறகு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

வெலிவேரியாவில் பரிசோதனைகள் ஆரம்பம்- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு
Tue, 6 August 2013 11:18:25

வெலிவேரிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

PuthinapPalakai

ராஜீவைத் தாக்கியவரின் அடுத்த குறியும் தவறியது
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 14:52 GMT

இந்தத் தீர்ப்பையடுத்துக் கருத்து வெளியிட்ட மனுதாரரான, விஜித றோகண விஜயமுனி, இந்தியாவின் அழுத்தத்தின் பேரிலேயே வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

13வது திருத்தச் சட்டமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பித்தலாட்டமும்
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 08:18 GMT

இதே தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் சிறிலங்காவில் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் சில மீறப்பட்ட போது தமது கருத்துக்கள் எதனையும் முன்வைக்காது அமைதி காத்தன.

வாரிசுகளை தேர்தலில் களமிறக்கியுள்ள ஆளும்கட்சி அரசியல்வாதிகள்
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 07:28 GMT

இந்தியாவில் நேரு – காந்தி குடும்பம் பல தலைமுறைகளாக அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வருவதாகவும், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கூட்டணியின் தலைவியாக கூட ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க, சிறிலங்கா விமானப்படைகள் யாழ்ப்பாணத்தில் கூட்டுப் பயிற்சி
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 06:31 GMT

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படையும், சிறிலங்கா விமானப்படையும் இணைந்து, யாழ்.குடாநாட்டில், ‘பசுபிக் ஏஞ்சல் பயிற்சி‘ என்ற கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன. நேற்று ஆரம்பமான இந்தப் பயிற்சி வரும் 10ம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரானார் சுடர்ஒளி ஆசிரியர்
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 02:14 GMT

1996ம் ஆண்டு தொடக்கம், வீரகேசரி, தினக்குரல் நாளிதழ்களிலும், சக்தி தொலைக்காட்சியிலும், செய்தியாளராக பணிபுரிந்தவர். பின்னர் சுடரொளி நாளிதழின் ஆசிரியராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தைக் கைவிட்ட சிறிலங்கா காவல்துறை – மனைவி விசனம்
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 01:47 GMT

இவர் கல்கிசைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து 2005 ஏப்ரல் 20ம் நாள் கடத்தப்பட்டு, வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டு, கொல்லப்பட்டதாக கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நான்கு புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மட்ராஸ் கபே திரைப்படத்துக்கு இரகசியமாக முதலீடு செய்துள்ள ராஜபக்ச?
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 01:28 GMT

விடுதலைப் புலிகளுக்குள் ஊடுருவிய இந்திய உளவு அதிகாரி சாகசங்களைச் செய்யும் கதையைக் கொண்ட இந்தத் திரைப்படம், ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக தமிழ்நாட்டில் ஏற்கனவே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கொழும்பில் சீனத் துறைமுகம் – திறந்து வைத்தார் சிறிலங்கா அதிபர்
திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 08:39 GMT

500 மில்லியன் டொலர் செலவிலான இந்தத் திட்டம், 2006இல் ஆரம்பிக்கப்பட்டது. தெற்காசியாவிலேயே, மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக் கூடியதான, ஆழ்கடல் முனைய வசதி கொண்ட, ஒரே துறைமுகம் இதுவாகும்.

வெலிவெரிய தாக்குதல்: சிறிலங்காப் படையினரின் துப்பாக்கிகள் பறிமுதல்
திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 08:36 GMT

வெலிவெரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சிறிலங்காப் படையினரின் துப்பாக்கிகள் அனைத்தும், சிறிலங்கா காவல்துறை கொழும்பு குற்றப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுத்தது சிறிலங்கா – ரைம்ஸ் ஒவ் இந்தியா
திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 06:42 GMT

கொழும்பில் 500 மில்லியன் டொலர் செலவில் சீனா அமைத்துள்ள அனைத்துலக கொள்கலன் முனையம், இந்தியப் பெருங்கடலில் நுழைவதற்கான மாற்று கடற்பாதையைப் பெறும் சீனாவின் கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

Yarl

இலங்கையை நிச்சயம் நட்பு நாடாக ஏற்க முடியாது : முதலமைச்சர் ஜெயலலிதா
Tue, 06 Aug 2013 23:11:04 +0000

இலங்கையை நிச்சயம் நட்பு நாடாக ஏற்க முடியாது : முதலமைச்சர் ஜெயலலிதா
2013-08-06 13:40:39

 
 
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கையை நிச்சயம் ஒரு நட்பு நாடாக ஏற்க முடியாது என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 70 அப்பாவி மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டு ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளதை உங்களுக்கு நான் கடந்த 17.6.2013, 8.7.2013, 1.8.2013 மற்றும் 2.8.2013 ஆகிய நாட்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்து இருந்தேன்.இந்த விவகாரத்தில் தாங்களே நேரிடையாக தலையிட்டு தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன்.ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ந்து வாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி ராமேசுவரத்தில் மீன் பிடிக்க சென்ற 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி செயல்பட்டு சட்ட விரோதமாக கடத்தி சென்றுள்ளனர். இது கடந்த ஒரு மாதத்தில் நடந்துள்ள 3–வது கடத்தல் சம்பவமாகும்.கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது சிங்கள கடற்படையினர் அவர்களை சட்ட விரோதமாக கடத்தி சென்று விட்டனர். தலைமன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 4.8.2013 வரை காவலில் வைக்கப்பட்டனர்.அப்பாவி தமிழக மீனவர்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல், சிறை வைப்பு ஆகியவை குறித்து நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதி தெரிவித்து உள்ள போதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தாமல் உள்ளது.
மத்திய அரசின் இந்த உறுதியற்ற நடவடிக்கையால்தான் சிங்கள ராணுவம் துணிச்சல் கொண்டு தொடர்ந்து அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கடலோர மீனவ சமுதாயத்தினரிடம் பதட்டத்தையும், போராட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் மட்டுமின்றி மீனவர்கள் போர்வையில் வரும் சிங்கள வெறியாளர்களாலும் தாக்கப்படுகிறார்கள்.இதற்கு மத்திய அரசு தூதர்கள் அளவில் தலையிட்டு உறுதியான பதில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள இயலாது என்று தூதர் மூலம் கடுமையாக கண்டிக்க வேண்டும்.
கொழும்பில் உள்ள நமது நாட்டு தூதர் இதுபற்றி இலங்கை அரசிடம் பேச வேண்டும். அவர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று உறுதியான நடவடிக்கை எடுத்து இலங்கை சிறைகளில் உள்ள 90 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க செய்ய வேண்டும்.பாக்ஜலசந்தில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகிறார்கள். சமீபகாலமாக அங்கு மீன் பிடிக்க செல்பவர்களை சிங்கள ராணுவம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.ஆகையால் இலங்கை அரசுடன் தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடத்தி இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நீங்கள் விரைந்து தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதில் கூறி உள்ளார்.

http://srilanka.thaalamnews.com/news-40563-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-40563

 

நாம் கொடுத்த சவப்பெட்டி: ஈபிடிபி – சாவு வீட்டில் கட்சி மோதல்
Tue, 06 Aug 2013 22:16:11 +0000

நாம் கொடுத்த சவப்பெட்டி: ஈபிடிபி – சாவு வீட்டில் கட்சி மோதல்
Comment

கிளிநொச்சியில் சாவு வீடு ஒன்றில் நாம் வாங்கிக் கொடுத்த சவப்பெட்டி என்று ஈபிடிபியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்த் தசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது மைத்துனர் கடந்த சில நாட்களின் முன்பு காலமானார். இச்செய்தியை அறிந்த ஈ.பிடி.பியைச் சேர்ந்தவர்கள் சவப்பெட்டி வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இறந்தவர் தமிழ்த் தசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருக்கு மாமன் என்ற பொழுதும் அவர் தமது கட்சி ஆதரவாளர் என்றும் அதனால் தாம் அவருக்கு சவப்பெட்டி வாங்கிக் கொடுத்தாகவும் தெரிவித்தனர்.
சாவு வீட்டுக்கு வந்த ஈபிடிபியினர் காலமாகியவரின் உடல் வைக்கப்பட்டிப்பது தாம் வாங்கிக் கொடுத்த சவப்பெட்டியில்தான் என்று பெருமையாகவும் பிரதேச சபை உறுப்பினரின் காதுக்கு எட்டவும் பேசினர்.
இதனால் கோபமடைந்த தமிழ்த் தசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ஈபிடிபியினருடன் முரண்பட்டார். இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையிலான வாக்குவாதம் இறுதியில் மோதலில் முடிந்தது. -GTN-
 
http://www.newstamil.com/2159

 

இன்று திருக்கோவில் ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவத்தில் லட்சம் பக்தர்கள் –
Tue, 06 Aug 2013 21:15:30 +0000

வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்  இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.  கடந்த 20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலய திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெற்று நேற்று தீர்த்தத்துடன் நிறைவுக்குவந்தது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் திருவிழா பிரதமகுரு சிவஸ்ரீ பாலகுமார் குருக்கள் கிரியைகளை நடாத்திவைத்தார்.
ஆலய தலைவர் சு.சுரேஸ் செயலாளர் அ.செல்வராஜா வண்ணக்கர் வ.ஜெயந்தன் பொருளாளர் இ.லோகிதராஜா பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் உள்ளிட்ட ஆலய நிருவாகிகள் மற்றும் பக்த கோடிகள் கலந்து சிறப்பித்தனர்.
பிதிர்க்கடன் செலுத்தும் பக்தர்கள் லட்சத்தைத் தாண்டியிருந்தது.
– See more at: http://www.thinakkathir.com/?p=51640#sthash.NAGGm0DK.dpuf

சந்நியாசிமலை உச்சியிலிருந்த வேலுக்கு முன்னால் புத்தர் !
Tue, 06 Aug 2013 21:13:14 +0000

பாணமையிலிருந்து 5 மைல் பயணித்ததும் சந்நியாசிமலை வருகிறது.  வள்ளியம்மனை மணந்து கதிர்காமத்தில் வாழ்ந்த முருகனைத் திருப்பி அழைப்பதற்காக கொங்கோட்டியார் சந்நியாசியார் கலாயாணகிரி ஆகிய மூவரையும் தெய்வானையம்மன் கதிர்காமத்திற்கு அனுப்பினார் என்றும்
பாணமையிலிருந்து வந்த சந்நியாசியார்  மேற்படி இடத்தில் அடங்கினார் என்றும் கொங்கோட்டியர் புத்தலையிலிருந்து 4 மைல்களுக்கு அப்பாலுள்ள மடத்தில் அடங்கினார்.கல்யாணகிரியார் மட்டும் கதிர்காமம் சென்றார் என்பது வரலாறு .
உன்னரசுக்கிரி என்பது திருக்கோவிலின் தென்பாலுள்ள உகந்தைமலைக்கும் பாலர்நகைநாடு (பாணமை) என்ற பண்டைய துறைமுகத்திற்குமிடையே இருந்திருக்கின்றது. அதனாலும் வேறு சான்றுகளாலும் தற்காலம் சன்னாசிமலை  என்ற பெயருடன் வழங்கப்படுகின்றது என மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.
சந்நியாசிமலை பாணமைக்கும் உகந்தைக்கும் இடையே அமைந்துள்ளது.
அங்கு  யாத்திரை செல்வோர் புத்திர பாக்கியம் இல்லாதோர் இருப்பின் சந்நியாசியையும் தமது கோரிக்கையையும் நினைந்து இம்மலையில் கல் தூக்கி வைப்பர் என்றும் தமது கோரிக்கை நிறைவேறின் அடுத்த பயணத்தின்போது பொங்கலிட்டு ஏற்றிய கல்லை இறக்கிவைப்பர் என்றும் கூறுவர்.
உகந்தைமலை முருகனிடம் செல்வோர் இவ்விடத்தில் இறங்கி வழிபட்டு;ச் செல்வது தொன்றுதொட்டு வழமையாகிறது.  தற்போது அம்மலையிலுள்ள வேலுக்கு முன்னால் புத்தர்சிலை வைக்கப்பட்ட சிறு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. வீதியால் பயணிப்போருக்கு வேல் தெரியாது. புத்தர் சிலையே தெரியும்.
உகந்தை மற்றுமொரு கதிர்காமமாக மாற்றப்படும் முஸ்தீபுகள் எடுக்கப்பட்டுவரும் இந்நிலையில் இந்நிகழ்வு கட்டியம் கூறுவதுபோல் உள்ளதல்லவா?
 
 
– See more at: http://www.thinakkathir.com/?p=51629#sthash.QRFcEsma.dpuf

நவுறு தீவில் உள்ளவர்களுடன் தொடர்பு துண்டிப்பு: மட்டக்களப்பு உறவினர்கள்
Tue, 06 Aug 2013 20:31:52 +0000

நவுறுவில் அண்மையில் நடந்த கலவரத்தில் தஞ்சக் கோரிக்கையாளர் தங்குமிடம் தீக்கிரையாகியது.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களில் சிலரது குடும்பங்களுக்குமிடையிலான தொடர்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய புகலிட கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் தங்கியிருந்த முகாமில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னரே அங்கு தங்கியிருந்தவர்களினால் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது.
 
ஏற்கனவே நவுறு தீவில் தங்கியிருந்த நாட்களில் தினமும் தொலைபேசியில் தங்களுடன் தொடர்பில் இருந்த தனது சகோதரர்கள் இருவரும் இறுதியாக ஜூலை 23ம் திகதி தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னர் தொடர்புகள் இல்லை என மட்டக்களப்பபு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிபிசி தமிழோசைக்கு கூறினார்.
தனது சகோதரர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும், இரு சகோதரர்களினதும் புகலிட கோரிக்கை மனு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து விட்ட நிலையில் அது தொடர்பான முடிவை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கடைசியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தங்களை நவுறு தீவிலுள்ள வேறு முகாமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் அங்கு தொலைபேசி வசதிகள் இருந்தால்தான தொடர்பு கொள்ள முடியும் என்றும் சகோதரர்கள் தெரிவித்திருந்ததாக அப்பெண் குறிப்பிட்டார்.
ஆனால் இதுவரை தொடர்பு இல்லை என்றும், அவர் கவலை வெளியிட்டார்.
 
53 வயதான தாயொருவர் , தனது மகன் நவுறுதீவில் சென்ற ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தினமும் இரு தடவைக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வார் என்றும் ஆனால் இப்போது தொடர்புகள் இல்லாத இல்லை என்றும் கூறுகிறார். இதனால் உளரீதியாக தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/08/130806_battinauru.shtml

சூட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடாத்த இராணுவத்தினரை அனுமதிக்ககூடாது
Tue, 06 Aug 2013 20:30:26 +0000

வெலிவேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடாத்த இராணுவத்தினரை அனுமதிக்ககூடாது என்று அனைத்துலக மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
குடிநீருக்கு போராட்டம் நடத்தியவர்கள் மீது படையினர் கடந்த வியாழக்கிழமையன்று தாக்குதல் நடத்தியபோது அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.பலர் காயமடைந்தனர்.இதனையடுத்து உரிய விசாரணைகளை நடத்துவதற்காக இராணுவத்தினர் விசாரணை பிரிவு ஒன்றை அமைத்துள்ள நிலையில், இதனை கண்டித்துள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பொலி ட்ரெஸ்கொட், தமது தவறுகள் தொடர்பில் இராணுவம் விசாரணை செய்வது என்பது முற்றிலும் தவறான விடயம் என்று குறிப்பிட்டுள்ளார்.எனவே இந்த விசாரணைகள் பக்கசார்பற்ற வகையில் நடத்தப்படவேண்டும் என்று ட்ரெஸ்கொட் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடு, சட்டரீதியாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தாம் செய்த தவறுக்காக படையினரே விசாரணை நடத்துவது மீண்டும் அந்த மக்கள் மீது பலப்பிரயோகத்தை மேற்கொள்வதற்கு சமனான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
.http://irruppu.com/?p=33201

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்
Tue, 06 Aug 2013 20:23:07 +0000

இராமாயண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.தீர்த்தம், தலம், விருட்சம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்டு பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் மாமாங்யேஸ்வரர் ஆலயம் தானாக தோன்றியதன் காரணமாக சுயம்பு ஆலயமாகவும் போற்றப்பட்டுவருகின்றது.
இராவணேஸ்வரனால் வழிபட்ட ஆலயமாகவும் இராவணன் அனுமானின் வாலில் கொழுத்திய தீயை அணைத்த இடமாகவும் ஆலயம் சிறப்பு பெற்றது.
இராம பிரானின் தண்டாயுதத்தால் உருவான தீர்த்தக்கேணியே மாமாங்கர் ஆலய தீர்த்தக்கேணியென கர்ண பரம்பரைக்கதைகள் கூறுகின்றன.
இத்தனை சிறப்புகளைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இந்த தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த தீர்த்த உற்சவத்தில் விசேடமாக பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வு சிறப்பு பெறுகின்றது.தாய்,தந்தையர்களை இழந்தவர்கள் அவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிதிர்கடன் செலுத்துதல் இந்த தீர்த்தத்தின் சிறப்பாகும்.
இதேவேளை ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் கீரிமலை தீர்த்தக்கேணியில் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்தவர்கள் பிதிர்கடன் நிறைவேற்றுவதற்கு கீரிமலை திர்த்தக்கரையில் கூடியமை குறிப்பிடத்தக்கது

http://irruppu.com/?p=33195

இலங்கை அரசியல் அமைப்பின் ஓட்டைகளினூடு தனி ஈழம் அமைப்பார் விக்னேஸ்வரன் : விமல் வீரவன்ச
Tue, 06 Aug 2013 20:21:07 +0000

 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர்  வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்கினேஸ்வரன் இலங்கை அரசியலமைப்பில் காணப்படும் ஓட்டைகள் ஊடாக தமிழ் ஈழம் அமைப்பார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 
அரசியலுக்குள் நுழைந்தமையால் அவர் நல்ல நீதிபதியாக இருந்திருக்க முடியாது.
நீதிபதியாக இருந்தவர் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறி வாழவேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் நீதிமன்றில் வழங்கிய தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களால் பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள் என்றும் விமர்வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். 
அவ்வாறு வெளிநாடுகளில் சென்று குடியேறாமல் அரசியலுக்குள் நுழையும் நீதிபதி உண்மையானவராக இருக்க முடியாது என கருத்து தெரிவித்த அவர் அவ்வாறு ஒருவர் அரசியலுக்குள் பிரவேசிப்பாரெனின் அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகளை நன்கு அறிந்து அதன் ஊடாக தனி ஈழம் அமைத்து விடுவர் எனவும் எச்சரிக்கை விடுத்தார். 
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சி.வி.விக்னேஸ்வரனை பயன்படுத்தி இலங்கை அரசியல் அமைப்பில் காணப்படும் ஓட்டைகளின் ஊடே தமது இலக்கை அடைய முற்படுகின்றனர் என்றும் தெரிவித்த விமர்வீரவனச்  நாட்டு மக்கள் ஒருபோதும் இதற்கு துணைபோகக் கூடாது எனவும் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94933/language/ta-IN/article.aspx

தற்பாதுகாப்பு அடிப்படையிலேயே படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் – நிமால் சிறிபால டி சில்வா
Tue, 06 Aug 2013 20:17:50 +0000

 
தற்பாதுகாப்பு அடிப்படையினலேயே படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வெலிவேரியவில் பாதுகாப்புப் படையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெலிவேரியவில் கடந்த 1ம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றில் விசேட உரையாற்றியுள்ளார்.
இந்த உரைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
படையினரின் கோரிக்கைகயை ஏற்றுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறிச் சென்ற போதிலும், சிலர் அந்த இடத்திலேயே தொடர்ந்தும் இருந்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமப்வம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நோக்கத்திற்காக தேவாலயத்திற்குள் சென்றவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94942/language/ta-IN/article.aspx

பிதிர்க்கடனுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்ட கீரிமலை தீர்த்தக்கடல்
Tue, 06 Aug 2013 20:14:50 +0000

 
ஆடி அமாவாசை தினமான இன்று கீரிமலைத் தீர்த்தக்கடலில் பிதிர்க்கடன் நிறைவேற்ற பெருமளவான பக்கதர்கள் கலந்து கொண்டனர். இப்பகுதியை சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களும் இதனைப் பயன்படுத்தி தமது ஊருக்குச் சென்றதுடன் தீர்த்தக் கடலிலும் நீராடியுள்ளனர். 
கடந்த இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படாமல் உள்ளது வலிகாமம் வடக்கு. தமது நிலத்தில் மீள்குடியேற்றுமாறு தொடர்ந்து கோரிவரும் இப்பிரதேச மக்கள் பல்வேறு இடங்களில் இன்னமும் அகதிகளாக வாழ்கின்றனர். 
இப்பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை நகுலேஸ்வர் ஆலயத்தின் தீர்த்தக் கேணியில் ஆண்டுதோறும் முன்னோர்களுக்காக தீர்த்தமாடி பிதிர்கடன் செலுத்துவது வழக்கம். 
இந்நிலையில் இந்த ஆண்டும் ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பெருமளவான பக்கத்தர்கள் கலந்து கொண்டு பிதிர்க்கடன் நிறைவேற்றினர்.  
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இங்கு வந்த இப்பிரதேச மக்கள் தமது ஊரைப் பார்த்து பெருமூச்செறிந்தனர். எப்பொழுது தம்மை தமது சொந்த நிலத்தில் வசிக்க விடுவார்கள் என்றும் நினைத்து தீர்த்தமாடி கீரிமலை ஆலயத்தை வணங்கியதாத் தெரிவிக்கின்றனர்.
தமது முன்னோர்கள் பலர் ஊரைக்குத் திரும்பக் காத்திருந்தனர் என்றும் அவர்கள் இறுதிவரை தமது சொந்த நிலத்தை பார்க்காமலே இறந்துபோனதாகவும் இவ்வாறான துயரங்களுக்கு எப்பொழுது முடிவு என்றும் கேள்வி எழுப்புகின்றனர். 
பிதிர்க்கடனை நிறைவேற்றும் ஒரு இடமாக மாத்திரம் தமது வாழ்விடம் மாறிவிட்டதாகவும் மிகவும் துயரத்துடன் தெரிவிக்கும் மக்கள் தமது ஊரை மீண்டும் பாக்காமலே இறந்த தமது முன்னோர்களுக்கு கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்துவது மிகவும் வருத்தம் தரும் விடயம் என்று தெரிவிக்கின்றனர். 
இப்பிரதேசத்தை சேர்ந்த தமக்கு மாத்திரம் பிதிர்க்கடன் செலுத்தும் நாள் ஒன்று மட்டுமே அனுமதிக்கப்படடுவதாகத் தெரிவிக்கும் மக்கள் சுற்றுலாப்பிரயாணிகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சென்று வரமுடியும் எனவும் சுட்டிக்காட்டினர்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94932/language/ta-IN/article.aspx

TamilMirror

ஐ.தே.க ஆலோசனை குழுவை நியமித்தது
Tue, 06 Aug 2013 20:58:53 GMT

கட்சி, கட்சியின் செயற்குழு மற்றும் கட்சியின் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பிரதான எதிர்க்கட்சியான…

மேலும் வாசிக்க…

பிரான்ஸ் பெண்ணை ஏமாற்றியவருக்கு சிறை
Tue, 06 Aug 2013 20:10:26 GMT

பிரான்ஸ் நாட்டு பெண் சுற்றுலாப்பயணியொருவரை மிரட்டி அவரிடமிருந்து 3000 ரூபாவை பெற்றுக்கொண்ட இலங்கை…

மேலும் வாசிக்க…

'பால் மா விவகாரத்தை ஆராய குழு அமைக்கவும்'
Tue, 06 Aug 2013 20:03:06 GMT

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவில் டீசிடீ இருப்பது பற்றிய பிரச்சினையை ஆராய விசேட குழுவொன்றை…

மேலும் வாசிக்க…

வடக்கு அதிவேகப் நெடுஞ்சாலை பணிகளைத் துரிதப்படுத்தவும்: ராஜபக்ஷ
Tue, 06 Aug 2013 15:51:45 GMT

வடக்கு அதிவேகப் நெடுஞ்சாலை பணிகளைத் துரித்தப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்…

மேலும் வாசிக்க…

பேலியகொடை நகர சபை உறுப்பினர் கைது
Tue, 06 Aug 2013 15:38:52 GMT

பேலியகொடை நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள்…

மேலும் வாசிக்க…

நஷ்டஈடு வழங்கப்படும்: ஜனாதிபதி
Tue, 06 Aug 2013 13:10:18 GMT

வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்று ஜனாதிபதி…

மேலும் வாசிக்க…

கண்டியில் இருதய சத்திரசிகிச்சை இடைநிறுத்தம்
Tue, 06 Aug 2013 12:15:40 GMT

கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவிருந்த சகல இருதய சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்…

மேலும் வாசிக்க…

இராணுவத்தை அனுமதிக்க வேண்டாம்: மன்னிப்புச்சபை
Tue, 06 Aug 2013 11:22:14 GMT

வெலிவேரிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இராணுவத்தை அனுமதிக்கவேண்டாமென சர்வதேச…

மேலும் வாசிக்க…

வெலிவேரிய சம்பவம்; சுயாதீன விசாரணை கோருகிறார் ரணில்
Tue, 06 Aug 2013 10:29:57 GMT

வெலிவேரிய, ரதுபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த…

மேலும் வாசிக்க…

'மெட்ராஸ் கஃபே'வுக்கு ஜனாதிபதி மஹிந்த முதலிடவில்லை: ஆப்ரகாம்
Tue, 06 Aug 2013 08:18:45 GMT

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான 'மெட்ராஸ் கஃபே' திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி…

மேலும் வாசிக்க…

90 மீனவர்களையும் மீட்கவும்: பிரதமருக்கு ஜெயா மீண்டும் கடிதம்
Tue, 06 Aug 2013 07:41:56 GMT

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள்…

மேலும் வாசிக்க…

சுயாதீனமாக செயற்பட ஷிரால் அறிவிப்பு
Tue, 06 Aug 2013 07:34:50 GMT

ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷிரால் லக்திலக சுயாதீன உறுப்பினராக இன்றையதினத்திலிருந்து…

மேலும் வாசிக்க…

மனைவி கொலை; கணவனுக்கு மரண தண்டனை
Tue, 06 Aug 2013 07:06:58 GMT

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் குற்றவாளியாக காணப்பட்ட நிலையில்,  கேகாலை மேல் நீதிமன்றம் அவருக்கு இன்று மரண…

மேலும் வாசிக்க…

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு மகஜர்
Tue, 06 Aug 2013 06:38:03 GMT

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக தோன்றியுள்ள தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து …

மேலும் வாசிக்க…

வலல்லாவிட பிரதேச சபை தலைவருக்கு பிணை
Tue, 06 Aug 2013 05:45:52 GMT

இலஞ்சம் பெற்றதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த வலல்லாவிட பிரதேச சபையின் தலைவர், கொழும்பு…

மேலும் வாசிக்க…

விபத்தில் அறுவர் காயம்
Tue, 06 Aug 2013 05:40:23 GMT

மத்துகம, பன்னிட்டிய பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்….

மேலும் வாசிக்க…

ஆடி அமாவாசை…
Tue, 06 Aug 2013 04:30:24 GMT

நாடளாவிய ரீதியில் இந்துக்களால் இன்று செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிக்கப்பட்டு…

மேலும் வாசிக்க…

நூரி கொலை வழக்கின் சந்தேகநபரை விலைக்கு வாங்க முயற்சி: சி.ஐ.டி
Mon, 05 Aug 2013 21:31:18 GMT

தெரணியகலை நூரி தோட்ட முகமையாளர்  நிஹால் பெரேரா கொலைத்தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் …

மேலும் வாசிக்க…

கதிர்காமரின் மகனின் மனு; பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ்
Mon, 05 Aug 2013 20:28:52 GMT

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு தொடர்பில்…

மேலும் வாசிக்க…

கண்காணிப்பாளர்களை நியமிப்பது குறித்து பொதுநலவாய அதிகாரிகள் ஆராய்வு
Mon, 05 Aug 2013 20:23:32 GMT

நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தல்களின் போது தமது கண்காணிப்பாளர்களை நியமிப்பது குறித்தும் கள நிலவரங்…

மேலும் வாசிக்க…

CanadaMirror

அமெரிக்காவில் பலரின் இதயங்களை கவர்ந்த இரண்டு வயது பாலகன் (வீடியோ இணைப்பு)
Tue, 06 Aug 2013 12:57:11 +0000

அமெரிக்காவில் குருதிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சில வாரங்களில் உயிர் இழக்கப் போகும் 2 வயது ஆண் குழந்தை தனது பெற்றோரின் திருமணத்தில் மணமகனின் தோழனாக கலந்து கொண்டமை அனைவரது நெஞ்சையும் உருக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஷோன் ஸ்டீவன்சன், கிறிஸ்டீன் ஸ்விடோர்ஸ்கீ. காதலர்களான அவர்களுக்கு லோகன் ஸ்டீவன்சன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. லோகன் குருதிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அதற்காக அவனுக்கு பல்வேறு சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது.

அல்கொய்தா மிரட்டல் எதிரொலி: ஏமனில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்கா உத்தரவு
Tue, 06 Aug 2013 12:46:27 +0000

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மேற்கத்திய நாடுகளின் தூதரங்களின் மீது, குறிப்பாக அமெரிக்க தூதரங்களின் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக சர்வதேச போலீஸ் வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த எச்சரிக்கையை உறுதிபடுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் தப்பியோடி உள்ளனர். இதனையடுத்து, ஏமனில் உள்ள துணை தூதரகத்தை நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மூடுவதாக அமெரிக்கா அறிவித்தது. இதேபோல், பிரிட்டைன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் ஏமனில் உள்ள தங்களின் துணைதூதரகங்களை நேற்று

கள்ளக் காதலியின் 2 மாத குழந்தையை ‘ஆன்லைனில்’ 100 டாலருக்கு விற்க முயன்ற காதலன் கைது
Tue, 06 Aug 2013 12:42:33 +0000

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பால் மார்குவெஸ்(23) என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் ஆன் லைன் மூலம் ஓர் இளம் பெண்ணுக்கு அறிமுகம் ஆனார். கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்த அந்த பெண்ணுடன் பால் மார்குவெஸ் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு ஒரே வீட்டில் சந்தோஷமாக வசித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கள்ளக் காதலிக்கு பழைய கணவன் மூலம் கருத்தரித்த குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை பிறந்தவுடன் தன்னுடனான அன்பையும், நெருக்கத்தையும் காதலி குறைத்துக் கொண்டதாக

அமெரிக்காவில் நகரசபை கூட்டத்தில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம நபர்
Tue, 06 Aug 2013 12:39:15 +0000

அமெரிக்காவின் பென் சில்வேனியா மகாணத்தில் வட கிழக்கில் ரோஸ் டவுன் ஷிப் உள்ளது. நேற்று இரவு 7.30 மணியளவில் இங்குள்ள நகரசபை அலுவலகத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்மநபர் நகரசபை அலுவலகத்தின் காம்பவுண்டு சுவர் வெளியே இருந்து துப்பாக்கியால் சுட்டான். பின்னர், முன்னேறி அலுவலகத்துக்குள் புகுந்த அவன் கூட்டம் நடைபெற்ற அரங்குக்குள் புகுந்தான். அதை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இச்சம் பவத்தில் ஒரு பெண் உள்பட

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனத்தை வாங்கிய அமேசான்.காம் ஆன்லைன் வர்த்தக நிறுனத்தின் தலைவர்
Tue, 06 Aug 2013 12:36:19 +0000

அமெரிக்காவில் பிறந்த ஜெப் பிசோஸ் என்று அழைக்கப்படும் ஜெப்ரி பிரிஸ்டன், அமேசான்.காம் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுனத்தின் தலைவரும், முக்கிய தலைமை நிர்வாகியும் ஆவார். புத்தக விற்பனையில் தொடங்கிய இந்த நிறுவனம், இவரது வழிகாட்டுதலில் நாளடைவில் பல தயாரிப்புகளின் ஆன்லைன் விற்பனையில் உலகளவில் பெரிய சில்லறை விற்பனை நிறுவனமாக மாறியுள்ளது. இவர் தற்போது அமெரிக்காவின் முக்கியத்துவம் நிறைந்த வெளியீடுகளில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தை 80 ஆண்டுகளாக அதனை நடத்திவந்த கிரஹாம் குடும்பத்தினரிடமிருந்து 250 மில்லியன் டாலருக்கு

மேலும் பார்க்க →

Latest News

News by Domains

LankaSri

Court refused to cancel the NPC election
Tue, 6 August 2013 15:22:40

The court of appeal refused to cancel the Northern Provincial Council election. Sinhala Jathika Peramuna filed petition on demanding to cancel the northern poll.

Shirani Tilakawardene sworn in as the deputy chief justice
Tue, 6 August 2013 15:20:19

Justice Shirani Tilakawardene sworn in as the deputy chief justice, in front of President Mahinda Rajapaksa at Temple Trees today.

Experiment commenced at Weliweriya
Tue, 6 August 2013 15:16:27

Geological Survey and Mines Bureau commence their first stage of experiment on contaminated water supply at Weliweriya area today.

DMK urge central government to boycott commonwealth summit
Tue, 6 August 2013 10:10:29

India should boycott Commonwealth heads meeting at Colombo if not DMK will resign from central government, DMK spokesman Ilankovan warned.

Attorney General's approval for Sampur Project
Tue, 6 August 2013 10:07:35

Indian Media reported today that the proposed Sampur Coal Power plant in Trincomalee was given approval by the Attorney General’s Office.

UNP Demand international probe on Waliweriya incident
Tue, 6 August 2013 10:02:59

The UNP demands an international probe into the Weliweriya shooting incident.

US military personals visits Jaffna
Tue, 6 August 2013 08:32:51

US Military troop visits Jaffna peninsula to take part in the medical camp organized by SriLanka Air Force.

Met.Department warns on inclement weather condition
Tue, 6 August 2013 07:51:34

Metrology department warms on strong winds from 70km/h at Puttlam, Pottuwil, Colombo and Galle coastal areas.

Attorney General approves Sampur project
Tue, 6 August 2013 07:49:49

The Attorney General’s office has approved the proposed 500 mw thermal power plant at Sampur, Trincomalee, to be built by India in consultation with the Ceylon Electricity Board, an Indian media report said today.

The TNA must be explicit about the dangers posed by the forthcoming NPC Election
Tue, 6 August 2013 06:05:45

Having accepted that the Thirteenth Amendment cannot fulfil the legitimate aspirations of the Tamil people, the Tamil National Alliance (TNA) has nevertheless decided to participate in the forthcoming election for the new Northern Provincial Council.

See Even More →

Related Posts:

  • No Related Posts

«