Today’s Sri Lankan News 08-08-2013 இலங்கைச் செய்திகள் 08-08-2013 by Kalapam.com

பிரதான செய்திகள்

செய்தித் தளங்கள்

TamilWin

கனடாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்து திட்டமிட்டபடி நடைபெறும்
Wed, 7 August 2013 18:50:16

ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ம.அ. சுமந்திரன், நா. உ இருவரும் எதிர்வரும் ஓகஸ்ட் 11, 2013 (ஞாயிறு) அன்று ததேகூ (கனடா) ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறோம்.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் ஈ.பி.டி.பி
Wed, 7 August 2013 16:51:00

வடமாகாண சபைத் தேர்தலில் தேர்தல் விதி முறைகளை மீறும் வகையில் இலங்கை அரசின் பங்காளிகளான ஈ.பி.டி.பி யினர் மக்களை தூண்டி ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் பலிபூசை இடைநிறுத்தம்
Wed, 7 August 2013 16:48:01

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசையை இடைநிறுத்த கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

நோன்பு பெருநாள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்!- கொழும்பு பெரிய பள்ளிவாசல்
Wed, 7 August 2013 16:18:48

இஸ்லாமியர்களின் புனித ரமழான் பெருநாள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 9ம் திகதி கொண்டாடப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

மத்தள விமான நிலையத்தில் பழுதுபார்த்தல் பணிகள்!- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
Wed, 7 August 2013 15:58:40

ஜேர்மனின் உதவியுடன் பிராந்தியத்துக்கான விமான பழுது பார்த்தல் நிலையம் ஒன்றை மத்தளை விமான நிலையத்தில் அமைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று அறிவித்துள்ளது.

நவநீதம்பிள்ளை வடக்கிற்கு செல்ல வேண்டியதில்லை! வெலிவேரிய சென்றால் போதும்! கரு ஜயசூரிய
Wed, 7 August 2013 15:51:50

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

வெலிவேரிய சம்பவம் ஏனைய சிங்கள மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!- சுமந்திரன் எம்.பி.
Wed, 7 August 2013 15:39:12

அரசாங்கத்திற்கு எதிராக எவரும் கிளர்ந்தெழுந்தால் வெலிவேரியவில் இடம்பெற்றதே அவர்களுக்கும் நடக்கும் என்பதை வெளிப்படுத்தவே இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜப்பானிய இளவரசி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்!
Wed, 7 August 2013 15:00:15

ஜப்பானிய இளவரசர் தக்கமடோ மற்றும் இளவரசி தக்கமடோ ஆகியோர் மூத்த மகளான 27 வயதான இளவரசி சுகுக்கோ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பொதுநலவாய மாநாட்டை கொழும்பில் நடத்துவது குறித்து மருத்துவர் மனோகரன் அதிருப்தி!
Wed, 7 August 2013 14:18:02

இலங்கையில் நீதி மற்றும் நியாயத்தை நிறைவேற்றுவது தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் இருந்து வரும் வேளையில், பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை கொழும்பில் நடத்துவது குறித்து மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான சம்பூர் மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கையில் குறைபாடுகள் உள்ளன!- சம்பிக்க ரணவக்க
Wed, 7 August 2013 13:03:35

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சம்பூர் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கையில் குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் மின்வலு எரிசக்தி அமைச்சரும், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

PuthinapPalakai

நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் 1ம் நாள் கலைப்பு
புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 15:20 GMT

நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் முதலாம் நாளுடன் கலைக்கப்படுவதாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் அரசியலில் புதிய வாசல்களை திறப்பாரா நீதியரசர் விக்னேஸ்வரன்?
புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 08:13 GMT

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், முதலமைச்சராக பதவியேற்கும் விக்னேஸ்வரன் சாதி, மதம், பிராந்தியம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து வடக்கு மாகாண சபையை தன்னால் நிர்வகிக்க முடியும் என நம்புகிறார்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் – சீன அதிகாரிகளுடன் சிறிலங்கா அதிபர் ஆலோசனை
புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 01:48 GMT

அலரி மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பணியைப் பொறுப்பேற்றுள்ள சீன மேர்ச்சர்ன்ட் குழும நிறுவனத்தின் தலைவர் லீ ஜியாங்கொங் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றனர்.

வெலிவெரிய தாக்குதலுக்கு பிரித்தானியாவும் கவலை
புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 01:09 GMT

வெலிவெரியவில் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரித்தானியா, இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

வெலிவெரிய தாக்குதல்: அனைத்துலக விசாரணையைக் கோருகிறது ஐதேக
புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 00:49 GMT

இறுதிப்போரில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத ஐதேக, வெலிவெரிய தாக்குதல் குறித்து அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

ராஜீவைத் தாக்கியவரின் அடுத்த குறியும் தவறியது
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 14:52 GMT

இந்தத் தீர்ப்பையடுத்துக் கருத்து வெளியிட்ட மனுதாரரான, விஜித றோகண விஜயமுனி, இந்தியாவின் அழுத்தத்தின் பேரிலேயே வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

13வது திருத்தச் சட்டமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பித்தலாட்டமும்
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 08:18 GMT

இதே தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் சிறிலங்காவில் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் சில மீறப்பட்ட போது தமது கருத்துக்கள் எதனையும் முன்வைக்காது அமைதி காத்தன.

வாரிசுகளை தேர்தலில் களமிறக்கியுள்ள ஆளும்கட்சி அரசியல்வாதிகள்
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 07:28 GMT

இந்தியாவில் நேரு – காந்தி குடும்பம் பல தலைமுறைகளாக அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வருவதாகவும், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கூட்டணியின் தலைவியாக கூட ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க, சிறிலங்கா விமானப்படைகள் யாழ்ப்பாணத்தில் கூட்டுப் பயிற்சி
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 06:31 GMT

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படையும், சிறிலங்கா விமானப்படையும் இணைந்து, யாழ்.குடாநாட்டில், ‘பசுபிக் ஏஞ்சல் பயிற்சி‘ என்ற கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன. நேற்று ஆரம்பமான இந்தப் பயிற்சி வரும் 10ம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரானார் சுடர்ஒளி ஆசிரியர்
செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 02:14 GMT

1996ம் ஆண்டு தொடக்கம், வீரகேசரி, தினக்குரல் நாளிதழ்களிலும், சக்தி தொலைக்காட்சியிலும், செய்தியாளராக பணிபுரிந்தவர். பின்னர் சுடரொளி நாளிதழின் ஆசிரியராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Yarl

ருகுணு மஹா கதிர்காம தேவாலய ஆடிவேல் கொடியேற்றம்
Wed, 07 Aug 2013 21:44:54 +0000

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா 07ம் திகதி புதன்கிழமையன்று நடைபெறும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.  முருகப்பெருமான் அமர்ந்துள்ள ஆலயம் பெரும்பாலும் சிங்களமக்களால் பூஜைத்தட்டு வழங்கி ஆக்கிரமிக்கப்பட்டு வருவதையும் தெய்வானை அம்மன் ஆலய வளாகத்தில் தமிழ் மக்கள் பக்திபூர்வமாக வழிபட்டுவருவதையும் அவதானிக்கமுடிகிறது.முஸ்லிம் மக்கள் நேராகவே பள்ளிவாசலுக்கு செல்கிறார்கள்.
பூஜைத்தட்டு வழங்குவதற்கு காத்துநிற்கும் நீண்ட வரிசை நாளுக்குநாள் நீண்டுகொண்டு போகிறது.  கதிர்காமக்கந்தன் ஆலயம் தற்போது ருகுணு மஹா கதிர்காம தேவாலயம் என அழைக்கப்படுகிறது.   மூவின மக்களும் வழிபடும் புனித இடம் சங்கமமாகுமிடம் என அங்குள்ள ஒலிபரப்பு வர்ணனையாளர்கள் கூறுவது இதைத்தானோ என்று கருதவேண்டியுள்ளது.
வரலாற்றின் தொன்மை கூறுகின்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தை அங்கு காணலாமா ? என்பது அங்கு செல்பவர்களுக்கே தெரியும். இது ஒரு சுற்றுலா மையம் என்று அழைக்கப்பட நியாயமான காரணங்களுண்டு.  மாணிக்ககங்கையில் வழமைபோல் சாதாரண மட்டத்தில் நீருள்ளது. பாலத்தின் கீழுள்ள பகுதியில் மீன் கூட்டம் அலைமோதுகிறது.அதற்கு தீன் போட மக்கள் அருகிலுள்ள கடைகளில் பொரி வாங்கி போட்டு மகிழ்வதையும் காணக்கூடியதாயுள்ளது.யாசகர்களும் பரவலாக உள்ளனர்.
அங்குள்ள டமில் கலந்த சிங்கள அறிவித்தல்பலகை இன்னும் மாற்றப்பட்டதாகயில்லை.தமிழ்மொழி அமுலாக்கத்தின் செம்மை இதுதான் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
 
 
– See more at: http://www.thinakkathir.com/?p=51652#sthash.nCKzzbpG.dpuf

தமிழரசுக்கட்சியின் சிபார்சிலேயே நான் வேட்பாளர் ஆனேன்- வர்த்தகர் தம்பிராசா விளக்கம் –
Wed, 07 Aug 2013 21:42:39 +0000

தமிழரசுக்கட்சியின் சிபார்சிலேயே ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாக வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் தனக்கு இடம் கிடைத்ததாக வேட்பாளர் முத்தையாபிள்ளை தம்பிராசா தினக்கதிருக்கு தெரிவித்தார்.
சங்கரிக்கு 50 இலட்சம் கொடுத்து வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த தம்பிராசா என்ற தலைப்பில் தினக்கதிரில் வெளியான செய்தி தொடர்பாக தினக்கதிர் இணைய ஆசிரியரை தொடர்பு கொண்ட தம்பிராசா இந்த விளக்கத்தை தெரிவித்தார்.  வர்த்தகர் என்ற வகையில் தனக்கு அனைத்து கட்சிகள் அனைத்து தரப்புகளுடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பணம் உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் தம்பிராசா தெரிவித்தார்.
லண்டனில் இருக்கும் தமிழரசுக்கட்சியை சேர்ந்த ஜ.தி.சம்பந்தன் உட்பட பலர் தன்னை சிபார்சு செய்யதாகவும் ஆனால் தமிழரசுக்கட்சி ஊடாக வேட்பாளராக வருவதில் சில நெருக்கடி இருந்ததால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் ஊடாக ஆனந்தசங்கரி தன்னை வேட்பாளராக்கினார் என்றும் அவர் தெரிவித்தார்.
புளொட் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரின் விருப்பத்தின் அடிப்படையில் தான் வேட்பாளராக முன்வந்ததாகவும், தனியே ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிபார்சில் வேட்பாளராகினேன் என சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் யாழ்ப்பாணத்திலும் பல கோடி சொத்துக்களை கொண்ட தான் பணம் சேகரிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும் தான் பிறந்த காரைநகருக்கும் வடமாகாண மக்களுக்கும் சேவையாற்றுவதற்கும், அந்த மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்குமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தான் போட்டியிட முன்வந்ததாக தம்பிராசா தெரிவித்தார்.
தம்பி கொம்னிக்கேசன், லயன் எயர் ஆகியவற்றின் ஊடாக பல முக்கிய பிரமுகர்களின் நட்பையும் தான் பெற்றிருப்பதாக தம்பிராசா தெரிவித்தார்
 http://www.thinakkathir.com/?p=51660#sthash.NirdfLVo.dpuf

கிளிநொச்சியில் மீறப்படும் தேர்தல் விதிமுறைகள்!
Wed, 07 Aug 2013 21:35:08 +0000

 
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச தரப்பினரால் தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முறைப்பாட்டினை செய்துள்ளார். 
இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலிருந்து அழைக்கப்பட்ட கிராம சேவையாளர்களிற்கு மதிய விருந்து வழங்கிய அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் வடமாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள தமது தரப்பு வேட்பாளர்கள் கரங்களைப் பலப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் எழுப்பியுள்ளாராம். 
அவ்வேளை ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வேட்பாளர்களான அன்பழகன் மற்றும் தவநாதனென பலரும் அங்கு சமூகமளித்திருந்ததாக கூறப்படுகின்றது. 
அதே வேளை மூத்த அரச அதிகாரிகள் சிலர் அங்கு பிரச்சார பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடமை நேரத்தில் அரச அதிகாரிகளை தேர்தல் பணிகளிற்கு துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பாக தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ள சிறீதரன் அதன் பிரதிகளை தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளான பவ்ரல் மற்றும் கபே ஆகியவற்றிற்கும் அனுப்பியுள்ளார். 
இதேவேளை கண்டாவளை புளியம்பொக்கணையில் அரச சமூர்த்தி வங்கிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில்  தமிழ் விழா என்ற பெயரில் அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு அரசியல் பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண ஆளுநர் எந்தவொரு பாடசாலை நிகழ்விலும் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பிய போதிலும் அரச தரப்பினர் அதனை பொருட்படுத்துவதே இல்லையென கூறப்படுகின்றது.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94983/language/ta-IN/article.aspx

கிழக்கில் புதிய சிங்கள மாவட்டமாக சேருவில அமைக்க திட்டம்!
Wed, 07 Aug 2013 21:19:21 +0000

 
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் புதிதாக சிங்கள மாவட்டம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேருவில மாவட்டம் என்ற பெயரிலான இந்த மாவட்டம் திருகோணமலை மாவட்டத்துக்கு மேலதிகமாக அமைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மாவட்டத்துக்காக அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டு 500 ஏக்கர் வரையான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இறக்கண்டி முதல் குச்சவெளி வரையிலான கடலோர காணிகள் இதில் உள்ளடங்குகின்றன. இந்த நிலையில் தற்போது மூதூரில் இருந்து கிண்ணியா வரையான மேலும் 300 ஏக்கர் காணிப்பரப்பு இந்த புதிய மாவட்டத்துக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்கின்ற போதும் இவ்வாறான காணி சுவீகரிப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தின் இந்த சேருநுவர என்று அழைக்கப்படும் இந்த பிரிவு தனி சிங்கள மக்களையம் முஸ்லீம் மக்களையம் கொண்ட பகுதியாக காணப்படுகின்றது.
அல்லைக்கந்தளாய் வீதியால் சென்று கிளிவெட்டி மூதூர் இறங்கு துறைவரையும் மறுபக்ககத்தில் வெருகல் ஊடாக மட்டக்களப்பு வீதியும் காணப்படும் இந்த பகுதியில் அதிகளவான சிங்கள குடும்பங்களும் முஸ்லீம் குடும்பங்களும் குடியேற்றப்பட்டுள்ள நிலையில் மூதூர்,சம்பூர் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் இன்றும் தங்கள் வாழ்இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிக கொட்டில்களில் இன்றும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
http://www.sankathi24.com/news/32139/64//d,fullart.aspx

ஈழத்தமிழர்களின் அரசியலில் புதிய வாசல்களை திறப்பாரா நீதியரசர் விக்னேஸ்வரன்?
Wed, 07 Aug 2013 21:08:02 +0000

ஈழத்தமிழர்களின் அரசியலில் புதிய வாசல்களை திறப்பாரா நீதியரசர் விக்னேஸ்வரன்?
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 08:13 GMT ] [ நித்தியபாரதி ]
 

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், முதலமைச்சராக பதவியேற்கும் விக்னேஸ்வரன் சாதி, மதம், பிராந்தியம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து வடக்கு மாகாண சபையை தன்னால் நிர்வகிக்க முடியும் என நம்புகிறார்.
இவ்வாறு கொழும்பை தனமாகக்கொண்ட The Island ஆங்கில ஊடகத்தில் Gnana Moonesinghe எழுதியுள்ள விவரண கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
சிறிலங்காவில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர், மக்களின் நீண்ட காலக் காத்திருப்பின் பின்னர் தற்போது வடக்கு மாகாண வாழ் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை மாகாண சபைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சுதந்திரமானதும் நேர்மையானதுமான மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளருக்கு வர்த்தமானி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நடைபெறுகின்ற தேர்தல்களில் மிகவும் வேறுபட்ட இயங்கு நிலையுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல்கள் வழமையாக மேற்கொள்ளப்படும் முறைமைக்கு அப்பால் எதிர்பார்க்கப்படாத விதத்தில் நடாத்தப்படவுள்ளதானது ஆச்சரியத்தை உண்டுபண்ணியுள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை நிறுத்தியதானது தேர்தலில் அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அநாகரிமான, குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலர் அரசாங்க உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படும் தற்போதைய காலத்தில்” விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து வருகின்றனர். குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படும் அதேவேளையில், இவை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் விசாரணை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் சிலர் முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட போதிலும், அரசாங்கத்தில் அங்கம் வகித்த பின்னர் குற்றவியல் என்ற வரையறைக்குள் சமூக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான ஒரு சிக்கலான சூழ்நிலையில், ஜனநாயக ஆட்சி நிலவும் சிறிலங்காவில் மக்கள் நிர்வாகப் பணிகளை ஆற்றுவதற்காக பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படுவது மிகமுக்கியமான ஒன்றாகும்.
வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் எதிர்கால நலன்கருதி பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தான் வழங்கிய நேர்காணல்களில் வாக்குறுதி அளித்தவாறு மக்களின் எதிர்கால நலனை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் நிறைவேற்றினால் வடக்கு மாகாண சபையானது சிறிலங்காவில் உள்ள ஏனைய மாகாணங்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
விக்னேஸ்வரன் மிகவும் ஆணித்தரமாகத் தனது கருத்துக்களை முன்வைக்கின்ற ஒருவர் என்பதாலும், தனது மனதில் படுவதை எவ்வித அச்சமுமின்றி பேசுகின்ற ஒருவர் என்பதாலும், நீதித்துறையில் சேவையாற்றும் போது உண்மையுடன் பணிபுரிந்த ஒருவர் என்பதாலும் இவர் தற்போது முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தன்னாட்சி மற்றும் தற்போதும் கடந்த காலங்களிலும் பேசப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விக்னேஸ்வரன் எவ்வாறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்துமாறு ஊடகவியலாளர் ஒருவர் இவரிடம் வினவியபோது, “இவை எல்லாம் அரசியல்வாதிகளுக்கு உரியவை. நான் ஒரு அரசியல்வாதி அல்ல. பாதிக்கப்பட்டுள்ள, துன்பப்படுகின்ற மக்களுக்கு சேவையாற்றுவதில் நான் விருப்பங் கொண்டுள்ளேன்” என விக்னேஸ்வரன் பதிலளித்தார்.
இவரது இந்தக் கூற்றானது விக்னேஸ்வரன், துன்பப்படுகின்ற மக்களின் உடனடித் தேவைகளை முதலில் முதன்மைப்படுத்துவதாகவும், ஆனால் ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணாது காலம் கனியும் போது அதனைச் செயற்படுத்தலாம் என்பதையே கருதவைக்கிறது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்கள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடமையாற்றிய, வாழ்ந்த விக்னேஸ்வரன் பல்வேறு இயங்கு நிலை மாற்றங்களைக் கொண்ட சூழல்களுக்குள், பாரபட்சப்படுத்தப்பட்ட பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் எவ்வாறு பணியாற்றுவது என்பது தொடர்பில் தொழில் சார் தகைமையைக் கொண்டிருக்க முடியும்.
இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களில் இரு தரப்பும் திறந்த மனதுடன், விட்டுக்கொடுப்புடன், புதிய அணுகுமுறைகளுடன் பேசத் தவறியுள்ளனர். இவ்விரு சாராரும் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசும் போது முரண்பாடான நிலைப்பாட்டைத் தவிர்த்து பேச்சுக்களை மேற்கொள்ளும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.
“நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் தீர்மானமானது நாட்டில் முரண்பாடுகளைக் களைந்து முன்னேறுவதற்கான சாத்தியத்தை வழங்குகிறது” என யூலை 17 டெய்லி மிறர் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்ததானது இன்று உணர்வைத் தொடுகின்ற ஒரு முக்கிய செய்தியாகக் காணப்படுகிறது.
நாட்டில் கொள்கை வகுப்பில் ஈடுபடுபவர்களுக்கும் வடக்கில் வாழும் மக்களுக்கும் இடையில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். ஆனால் இரு தரப்பு நம்பிக்கை என்பது போருக்குப் பின்னான சூழலிலும் இதற்கு முன்னரும் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. சிறிலங்காவை ஆட்சி செய்தவர்கள் வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்களுடன் சுமூகமான நம்பிக்கையில் அடிப்படையில் உறவைக் கட்டியெழுப்பி பிரச்சினையைத் தீர்க்காததால் பிரபாகரன் தோற்றம் பெற்றார். பிரபாகரன் முதலில் ஒரு தலைவராகவும் பின்னர் சிறிலங்கா அரச எதிர்ப்பின் சின்னமாகவும் மாறினார்.
மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் ஊடாக பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் நிலவும் முரண்பாடுகளும், விரோதங்களும் குறைவதற்கான வழிவகுக்கப்படும். இவ்வாறு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். இதன்மூலம் நாட்டில் பிறிதொரு கலவரம் ஏற்படலாம்.
“வன்முறைகளைத் தவிர்த்து புரிந்துணர்வின் அடிப்படையில் ஒன்றுபடும் அதேவேளையில் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமனதுடன் ஆதரவை வழங்குவதே நாட்டில் சமாதானம் ஏற்படுவதற்கான ஒரு சிறந்த வழியாக இருக்கும்” என விக்னேஸ்வரன் தெரிவித்த கூற்றை அரசாங்கமும் மக்களும் முன்னுதாரணமாக எடுத்து செயற்பட வேண்டும்.
தீர்க்கப்படாத சில பிரச்சினைகளுக்கு வரையப்பட்ட பொறிமுறை ஒன்றின் ஊடாக தீர்வை முன்வைக்க வேண்டும் என்கின்ற நடைமுறை அணுகுமுறையின் பிரகாரம் விக்னேஸ்வரன் பணியாற்ற விரும்புகின்றார் என்பது போல் தென்படுகிறது. சிறிலங்காவில் போர் நடக்கின்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் காணாமற் போன மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் போதியளவு தகவல்கள் வழங்கப்படவில்லை என்பது மிகப் பெரும் பிரச்சினையாகக் காணப்படுகிறது.
தான் முதலமைச்சராக பதவியேற்றால், இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைத் திறந்து வைப்பேன் என்பதில் விக்னேஸ்வரன் நம்பிக்கையாக உள்ளார். நீதித்துறையில் முன்னர் பணியாற்றியதனைப் பயன்படுத்தி சட்டமா அதிபரைச் சந்தித்து, இவ்வாறு காணாமற் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் சந்திப்புக்களை மேற்கொண்டு தீர்வொன்றை எட்டுவதற்கான சாத்தியம் இருக்கலாம் என விக்னேஸ்வரன் கருதுகிறார்.
இவற்றுக்குத் தீர்வு காண்பதில் சட்டமா அதிபர் தனக்கு உதவலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் நம்பிக்கை கொள்கிறார். இதுதவிர, காணாமற் போன அல்லது இறந்தவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கான நிறுவனம் ஒன்றை உருவாக்கி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் எனவும் விக்னேஸ்வரன் கருதுகிறார். காணாமற் போன மற்றும் தடுப்பிலுள்ளவர்கள் தொடர்பில், ஆரம்பத்தில் 50 அல்லது 100 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டால் அது மிகப்பெரிய சேவையாக இருக்கும்.
நாட்டில் போர் முடிவடைந்து அமைதி நிலவும் காலப்பகுதியில், மிகப் பெரியளவில் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருப்பது மற்றும் பொது மக்களின் செயற்பாடுகளில் இராணுவத்தினர் குறுக்கிடுவது தவிர்க்கப்பட வேண்டும். சிறிலங்காவில் போர் முடிவடைந்த பின்னரும் இராணுவத்தின் பெரியளவில் கடமையில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பில் ஏனைய பலரைப் போலவே விக்னேஸ்வரனும் தனது எதிர்க்கருத்தை முன்வைத்துள்ளார்.
20 இராணுவப் படைப் பிரிவுகளில் வடக்கில் 10-15 படைப்பிரிவுகள் நிலைகொண்டுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தில் கடமையாற்றிய ஒருவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதானது நாட்டில் சமாதானத்தை ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது.
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் பொது அமைப்புக்களுடன் இணைந்து சேவையாற்றுபவர் என அங்கீகரிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப் பேராசிரியரும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கடமையாற்றிய பேராசிரியர் சாவித்திரி குணசேகர போன்ற ஒருவர் வடக்கு மாகாண சபையின் ஆளுநராக நியமிக்கப்படுவது தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தானது குறுகிய பேரினவாத மனப்போக்கைக் கொண்ட ஒருவர் இராணுவத்தைச் சேர்ந்தவர் வடக்கு மாகாண ஆளுநர் பதிவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இவர் எவ்வித மாற்றுக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. சமாதான காலத்தில் இராணுவ மனநிலையுள்ளவர்கள் நிர்வாகத்தில் பணியாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது விக்னேஸ்வரனின் கருத்தாக உள்ளது.
“நல்லதொரு புரிந்துணர்வுடன் குழுவாக இணைந்து பணியாற்றக் கூடியவர்களை வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும்” என கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் விக்னேஸ்வரன் அறிவுரை வழங்கியிருந்தார். அரசியல் விவகாரங்களுக்கு அப்பால், கல்விசார் செயற்பாடுகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றில் பரந்த நோக்குடன் சிந்திக்கின்ற செயற்படக்கூடியவர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.
“போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் ஜனநாயக ரீதியாகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஒன்றாக வடக்கு மாகாண சபை காணப்படுகிறது. இதனால் வடக்கு மாகாண சபை எவ்வாறான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியுமோ அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு மிகவும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்” எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், முதலமைச்சராக பதவியேற்கும் விக்னேஸ்வரன் சாதி, மதம், பிராந்தியம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து வடக்கு மாகாண சபையை தன்னால் நிர்வகிக்க முடியும் என நம்புகிறார். வடக்கு மாகாண நிர்வாகத்தை அரசியல் மயப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் விக்னேஸ்வரன் தெளிவாக விளக்கியுள்ளார்.
இருப்பினும் தொழில் வாய்ப்புக்களும் நியமனங்களும் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறான செயற்பாடுகள் சமாதானத்தையும் அமைதியையும் உருவாக்குவதற்கான காரணிகளாக காணப்படுகின்றன. முதலமைச்சராக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டால், நிர்வாகத்தைக் கொண்டு செல்வதில் போட்டிநிலை ஏற்படாது. இதன்மூலம் ஒரு பொறிமுறைக்குள் பணியாற்றுவதுடன், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வடக்கு மாகாண சபை வழிகாட்டியாக இருக்கும்.
இதன் மூலம் நாட்டில் அமைதி ஏற்பட்டு, நாட்டில் செழுமை ஏற்பட்டு மக்கள் மகிழ்வாக வாழமுடியும். மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் வசதிவாய்ப்புக்களுடன் அமைதியுடன், சமாதானமாக வாழ்வதற்கான அறிவுபூர்வமான தீர்வுகள் எட்டப்படும். கல்வி அறிவுடையவர்கள் நிர்வாகத்தை நடாத்தும் போது பாதிக்கப்பட்ட சமூகம் செழுமையுடன் கூடிய சிறந்த வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.
http://www.puthinappalakai.com/view.php?20130807108818

சிறீலங்காவின் முப்படையினரே அதிகளவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றார்கள்!
Wed, 07 Aug 2013 14:24:37 +0000

முப்படையைச் சேர்ந்தவர்களே இன்று அதிகளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் இடம்பெற்று வரும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் அதிகளவில் பொலிஸாரும் படையினருமே தொடர்புபட்டிருக்கின்றனர்.கொள்ளைக் கூட்டத்தில் முப்படையைச் சேர்ந்த ஒருவரேனும் இருக்கின்றார். கொலை செய்தால் தூதுவர் பதவி கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.குடிக்க சுத்தமான நீரைக் கேட்டால் அரசாங்கம் அவர்களை தேசத்துரோகிகள் என்கிறது. குற்றவாளிகளே இன்று உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
எங்களது கடவுச் சீட்டில் ஜனநாயகக் குடியரசு என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை இன்று நாட்டில் இருக்கின்றதா?குடிநீர் கேட்டவர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.இந்த சகல படுகொலைகளுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.sankathi24.com/news/32130/64//d,fullart.aspx

மாகாண சபையும் மலையகமும் – மலையக சமூக ஆய்வு மையம்
Wed, 07 Aug 2013 14:00:54 +0000

 
இன்னுமொரு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆயத்தப்ப பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மலையக மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணமும் தேர்தல் திருவிழாவை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கின்றது.
 
இந் நிலையிலேயே மாகாண சபைகளின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய அவதானத்தை செலுத்த வேண்டியுள்ளது. அடிப்படையில் மாகாண சபைகளின் உருவாக்கமானது இனங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை. மாறாக பிரதேச அடிப்படையிலேயே அமைக்கப்படடது.
 
ஆங்கிலேயர் உருவாக்கிய மாகாணங்களில் எல்லைகளே மாகாண சபைகளின் நில எல்லைகளாக கொள்ளப்பட்டது. இதனால் எந்த மாகாணத்திலும் மலையக மக்கள் செறிவாக இல்லை. அவர்கள் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் சிதறி வாழ்கின்றனர்.
 
அரசியல் யாப்பின்படி மாகாண சபைகளுக்கு சுயாதீனமான இருப்பு கிடையாது. மத்திய அரசில் தங்கியிருக்கும் நிலையே உள்ளது. சட்டரீதியாக வழங்கப்பட்ட அதிகாரங்களில் பலவற்றை சட்டங்கள் மூலமும் (திவிநெகும), சுற்றறிக்கைகள் மூலமும், கொள்கை உருவாக்கம் என்பதன் ஊடகவும் மீள பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள அதிகாரங்கள் கூட மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையிடம் வழங்கப்படாமல் ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரிடமே வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மாகாண சபைகள் மலையக மக்களுக்க பெரிதாக பயன்படும் என கூறுவதற்கில்லை. மலையகத்தை தளமாகக் கொண்டதும், மாகாண சபைகளின் முறைகளை அங்கீகரிக்கின்ற எந்தவொரு அரசியல்அமைப்பும், நிறுவனமும் கட்சிகளும் கூட இரண்டு பண்புகளை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
 
1) மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை பேசுபொருளாக்கின்ற ஒரு களமாக மாற்றுதல் வேண்டும்.
 
2) மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக இருத்தல் வேண்டும். அவர்கள் மத்தியில் உயிரியல், பௌதீக அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடி ஒன்றாக இருத்தல் வேண்டும்
 
ஆனால் இதுவரைகால மாகாண சபை அனுபத்தில் இந்த இரண்டு விடயங்களும் நடைபெறவில்லை. அபிவிருத்தி பற்றிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என காரணம் கூறலாம். ஆனால் பெரும்பாலான மலையக கட்சிகள் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்றன. இந்த நெருக்கத்தை பயன்படுத்தியும் இவர்களால் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை என்றால் அரசாங்கத்துடன் இணைந்திருப்பது எதற்காக? 
 
மாகாண சபை என்பது ஒர் அரசியல் களம். ஆனால் மலையக மக்களுடைய விவகாரங்களை பேசு பொருளாக்கும் ஒரு களமாகவும் மாகாண சபைகளை பயன்படுத்த இவர்களால் முடியவில்லை. அது பற்றிய அரசியல் அறிவின்மையும், அரசாங்கத்துடன் இணைந்திருக்கம் நிலையுமே இதற்கு காரணம்.
 
இன்று மாகாண சபைகள் மலையக தமிழ் மக்களை கைவிட்டுள்ளது. மாகாண சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மலையக பிரதிநிதிகள் சந்தர்ப்பங்களை உருவாக்கவும் இல்லை. தானாக வந்த சந்தர்ப்பங்களை மலையக மக்களுக்காக பயன்படுத்த முயற்சிக்கவும் இல்லை. மறுபுறத்தில் அரசாங்கத்தை சார்ந்து (தங்கி வாழ்தல்) தான் இருத்தல் வேண்டும் என்ற போக்கு இவர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் கிடைத்த சந்தர்ப்பங்களையும் குறைந்த பட்ச அதிகாரங்களையும் கூட தங்களையும் தாங்கள் சார்ந்த கட்சிகளையும் வளப்படுத்த மாத்திரமே பயன்படுத்தினர்.
 
இன்று மலையகத்தில் தொழிற்சங்க அரசியல் ஆதிக்கம் பெற்ற கட்சி அரசியல் மேலெழுந்துள்ளதால் இனத்துவம் சார்ந்த அரசியல் என்பது வளர்ச்சி பெறவில்லை. அதேவேளை தொழிலாளர்களின் உரிமைகளும் வென்றெடுக்கக் படவில்லை. 
 
இச் சந்தர்ப்பத்தில் வாக்களிக்கம்போது சில விடயங்களை கவனத்தில் எடுத்தல் வேண்டும். மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை பேசுபொருளாக்குகின்ற களமாகவும், அதனை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாகவும் மாகாண சபையில் பணிகளை முன்னெடுத்து மலையக மக்களின் சுதந்திர சுகவாழ்வுக்கு சுயாதீனமாக தீர்மானம் எடுக்கக்கூடியவர்களுக்கே தங்கள் வாக்குகளை அளித்தல் வேண்டும். இந்த விடயத்தில் அவர்களை அடையளம் காண வேண்டியது முக்கயமாகும்.
 
தேளிவான இலக்கு, வலுவான கொள்கைகள், முறையான வேலைத் திட்டங்கள் என்பவற்றை கொண்டிருப்பவர்களையே தேர்ந்தெடுத்தல் வேண்டும் மலையக மக்களின் அரசியல் இலக்கு என்பது மலையக மக்கள் தங்களுடைய விவகாரங்களை தாங்களே பார்க்கக்கூடிய வகையில் அதிகாரங்களை பெற்றுக் கொள்வதாகும். முலையக மக்கள் ஒரு தேசிய இனம், மலையகம் அவர்களது தாயகம், மலையக மக்களுக்கென மொழி, கலாசாரம், பொருளாதாரம் உண்டு என்பதனை தங்களது அரசியல் கொள்கைகளாக கொண்டிருப்பவர்களாலேயே இந்த இலக்கினை அiடையாலம்.
 
மலையக மக்களின் கூட்டிருப்பை பாதுகாப்பதற்கும், கூட்டு உரிமையை பேணுவதற்கும் இந்த கொள்கை நிலைப்பாடு அவசியமானதாகும். மலையக மக்களுடைய நிலம் பறிக்கப்படுகின்றது. அவர்களின் வாழ்வுக்கு ஆதரமான பேரம் பேசும் பலத்தை தருகின்ற பெருந்தோட்டத்துறை பொருளாதாரம் பலவீனப்படுத்தப்படுகின்றது. அவர்களுடைய மொழி, கலாசாரம் புறக்கணிக்கப்படுகின்றது. இவை தொடர்ந்து இடம்பெறுமாயின் மலையக மக்களின் கூட்டிருப்பு, கூட்டு அடையாளம் என்பன சிதைவடையும். 
 
இக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும். மலையக மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை வெளியில் கொண்டுவருதல், மலையக மக்களின் இருப்புக்கு அச்றுத்தலாக இருக்கும் விடயங்களை எதிhத்துப் போராடுதல், மலையக மக்களின் மேன் நிலையாக்கத்திற்கான நடைவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பவையே இவ் வேலைத்திட்டங்களாகும். இதனை முன்னெடுப்பதற்கு தயாரானவர்களையே மக்கள் தெரிவு செய்து அனுப்புதல் வேண்டும். 
 
மாகாண சபைகள் மலையக மக்களுக்கு பயன்படக்கூடிய ஒன்றாக மாற்ற வேண்டுமானால் மலையக மக்கள் செறிந்து வாழும் மாகாண சபைகளுக்கள் மலையக மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தல் வேண்டும். அதுவரை மலையக பிரதிநிதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் ஊடாக மலையக மக்களின் விவகாரங்களை கையாளக்கூடிய பொறி முறை ஒன்றை உருவாக்குமாறு அழுத்தல் கொடுத்தல் அவசியம்.
 
மலையக அரசியலை அரசியல்வாதிகளிடம் மட்டும் கையளித்து விட்டு மலையக மக்கள் வாழாவிருக்க முடியாது. வலிமையான மலையக சிவில் சமூகத்தை உருவாக்கி மலையக அரசியல் சக்திகளுக்க அழுத்தம் கொடுக்கும் வழிமுறையை நாம் கண்டாக வேண்டும். மேலும் துரத்தப்படுகின்ற மலைகய மக்களுக்கு நிலையான அரசியல் களத்தை கட்டியெழுப்புகின்ற களமாக மாகாண சபைகளை பயன்படுத்துவோமாக.
 
மலையக மக்கள் வெறுமனே வாக்கு இயந்திரங்கள் அல்ல. இந்த நாட்டின் குடிமக்கள். இவர்கள் அரசியல் சமத்துவம் உள்ள இன்னுமொரு பிரிவினர் என்பதை உறுதி செய்ய இத் தேர்தல் களத்தை பயன்படுத்துவோம்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94973/language/ta-IN/article.aspx

வெலிவேரிய சம்பவம் குறித்து நவனீதம்பிள்ளை கேள்வி எழுப்பக் கூடும் – கரு ஜயசூரிய
Wed, 07 Aug 2013 13:59:42 +0000

 
வெலிவேரிய சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கேள்வி எழுப்பக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு விஜயம் செய்யாது வெலிவேரியவிற்கு விஜயம் செய்யக் கூடுமென குறிப்பிட்டுள்ளார். வெலிவேரியவில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவம் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளை கட்டுப்படுத்தக் கூடிய பல வழிகள் இருந்தும் அவற்றை தவிர்த்து படையினர் நேரடியாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கண்ணீர்ப் புகைக் குண்டு, நீர்த்தாரைப் பிரயோகம் போன்ற பல்வேறு வழிகள் இருந்தும் படையினர் அவற்றைப் பின்பற்றத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த சம்பவமானது பொதுநலவாய நாடுகள் தலைகள் அமர்வுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையில் படையினர் செயற்பட்டுள்ளதாகவும், இது படையினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94977/language/ta-IN/article.aspx

வாஸ் குணவர்தனவின் புதல்வர் கைது
Wed, 07 Aug 2013 13:58:13 +0000

 
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் ரவிந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கடத்திக் கொலை செய்த குற்றத்திற்காக இவ்வாறு ரவிந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பி;ட்டியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சியாமை கொலை செய்த குற்றத்திற்காக, ரவிந்துவின் தந்தை வாஸ் குணவர்தனவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ரவிந்துவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாஸ் குணவர்தனவை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94976/language/ta-IN/article.aspx

சங்கபோதியை அழித்த கோத்தாவைப்போன்று தற்போதும் ஒரு கோத்தாவா ? : விக்கிரமபாகு
Wed, 07 Aug 2013 13:02:35 +0000

அக்கால மன்னன் சிறி சங்கபோதியை அழிப்பதற்கு கோத்தா செயற்பட்டதைப் போன்று இன்று மஹிந்த அரசை அழிக்க ஒரு கோத்தா செயற்படுகின்றாரா என்று எண்ணத் தோன்றுகின்றது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிவேரிய சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புச் செயலர் உள்ளார். ஏனெனில் இச்சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமே.
எனவே இதற்கு பொறுப்புக் கூறாது பாதுகாப்புச் செயலர் உள்ளமையானது அக்காலத்தில் சங்கபோதி மன்னனை அழிக்க கோத்தா செயற்பட்டதைப் போன்று தற்காலத்திலும் ஒரு கோத்தா உள்ளாரா என எண்ணத் தோன்றுகின்றது.
ஐ. நா. செயலர் நவநீதம்பிள்ளை இலங்கை வரவுள்ள நிலையில் இவ்வாறான செற்பாட்டின் மூலம் அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது.
சிங்கள் பௌத்தத்தை பாவித்து மக்களை கொலை செய்வதற்கு கூட இந்த அரசாங்கம் துணிந்து விட்டது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சிந்தித்து இந்த பாஸிச ஆட்சிக்கு எதிராக போராட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://goldtamil.com/?p=5267

TamilMirror

தாயகம் என்ற கோட்பாட்டு இல்லை: அரசாங்கம்
Wed, 07 Aug 2013 20:36:55 GMT

காலனித்துவ காலத்திலிருந்து தாயகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மாகாணங்களின் எல்லைகள் …

மேலும் வாசிக்க…

சுடுமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டது யார்: சுஜீவ கேள்வி
Wed, 07 Aug 2013 20:25:48 GMT

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு அவர்கள் மீது ஆகவும் குறைந்த பலத்தை பயன்படுத்தவேண்டிய நிலையில்…

மேலும் வாசிக்க…

பொதுநலவாய வணிக அரங்கத்தில் சீனா பங்கேற்கும்
Wed, 07 Aug 2013 19:59:02 GMT

பொதுநலவாய மாநாடு நடைபெறும் அதேசமயம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய வணிக அரங்கத்தில்…

மேலும் வாசிக்க…

கதிர்காம திருத்தலத்தின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்
Wed, 07 Aug 2013 17:46:15 GMT

கதிர்காம திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இன்று புதன்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பாகியுள்ளது. ….

மேலும் வாசிக்க…

தயாசிரியை நானே தேசிய அரசியலுக்கு கொண்டுவந்தேன்: ரணில்
Wed, 07 Aug 2013 15:55:55 GMT

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தனக்கும், கட்சிக்கும் எதிராகவும் முன்வைத்த குற்றச்சா…

மேலும் வாசிக்க…

பிறை தென்படவில்லை; வெள்ளி பெருநாள்
Wed, 07 Aug 2013 15:47:49 GMT

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்தில் இன்று புதன்கிழமை தென்பட்டவில்லை

மேலும் வாசிக்க…

நவிப்பிள்ளை வடக்கிற்கு செல்லவேண்டியதில்லை: கரு
Wed, 07 Aug 2013 14:47:48 GMT

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம்…

மேலும் வாசிக்க…

ஜப்பான் இளவரசி இலங்கைக்கு விஜயம்
Wed, 07 Aug 2013 12:58:25 GMT

ஜப்பான் இளவரசி சுகுகோ எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக …

மேலும் வாசிக்க…

2013 இல் எயிட்ஸ் நோயாளிகள் 16 பேர் உயிரிழப்பு
Wed, 07 Aug 2013 11:23:02 GMT

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்கான நிலையில் 4,100 பேர் வாழ்வதாகவும் அதில் 100 பேர் 15 வயதிற்கும் குறைந்தவர்கள்…

மேலும் வாசிக்க…

வாஸின் மகனுக்கு 72 மணிநேரம் தடுப்புக்காவல்
Wed, 07 Aug 2013 10:25:33 GMT

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவிந்து குணவர்தனவை 72 மணிநேரம் தடுத்து…

மேலும் வாசிக்க…

'வெலிவேரியாவிலேயே இப்படி என்றால் வன்னியில் எப்படி?: மனோ
Wed, 07 Aug 2013 10:05:19 GMT

 'வெலிவேரியா  ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை….

மேலும் வாசிக்க…

மோதலில் 4 மாணவர்கள் காயம்
Wed, 07 Aug 2013 09:30:29 GMT

மோதல் சம்பவமொன்றில் காயமடைந்த 4 மாணவர்கள் பதவியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

மேலும் வாசிக்க…

பேலியகொடை நகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்
Wed, 07 Aug 2013 09:08:50 GMT

பேலியகொடை நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஷாமில சந்தரூனை எதிர்வரும் 16 ஆம்…

மேலும் வாசிக்க…

வெலிவேரிய: “முன்னை இட்ட தீ”
Wed, 07 Aug 2013 08:42:43 GMT

வெலிவேரியவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், உள்ளூரில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் அரசாங்கத்துக்கு எதிரான கண்டன அலைகளை…

மேலும் வாசிக்க…

மார்பகங்களுக்குள் போதைப்பொருள்; குடுராணி கைது
Wed, 07 Aug 2013 07:56:05 GMT

மார்பகங்களுகளுக்குள் மறைத்து போதைப்பொருட்களை கடத்திய 'குடுராணி' என்றழைக்கப்படும் 29 வயதான…

மேலும் வாசிக்க…

வெலிவேரிய சம்பவம்; 90 துப்பாக்கிகளும் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைப்பு
Wed, 07 Aug 2013 07:48:14 GMT

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது இராணுவம் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 90 துப்பாக்கிகளை அரச…

மேலும் வாசிக்க…

தமிழக "இஸ்லாமியர் வாக்குகள்" தி.மு.க.விற்கா, அ.தி.மு.க.விற்காக?
Wed, 07 Aug 2013 07:05:37 GMT

அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் "இப்தார் விருந்து" கொண்டாட்டத்தில் தீவிரமாக இருக்கின்றன. அதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு…

மேலும் வாசிக்க…

வெலிவேரிய தாக்குதல்; பிரித்தானியா கரிசனை
Wed, 07 Aug 2013 06:47:57 GMT

வெலிவேரியவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கரிசனை செலுத்துவதாக பிரித்தா…

மேலும் வாசிக்க…

வாஸின் மகன் கைது
Wed, 07 Aug 2013 02:57:39 GMT

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ள…

மேலும் வாசிக்க…

ஐ.தே.க ஆலோசனை குழுவை நியமித்தது
Tue, 06 Aug 2013 20:58:53 GMT

கட்சி, கட்சியின் செயற்குழு மற்றும் கட்சியின் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பிரதான எதிர்க்கட்சியான…

மேலும் வாசிக்க…

CanadaMirror

யாழ்.தேவியின் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த பயணம் வெற்றி
Wed, 07 Aug 2013 20:16:07 +0000

வடக்கிற்கான ரயில் தடம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது. கிளிநொச்சி, அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில், அறிவியல் நகர் வரை வந்தடைந்தது. இது இவ்வாறிருக்க, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாங்குளம்,

கனடாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்து திட்டமிட்டபடி நடைபெறும்
Wed, 07 Aug 2013 19:11:35 +0000

ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ம.அ. சுமந்திரன், நா. உ இருவரும் எதிர்வரும் ஓகஸ்ட் 11, 2013 (ஞாயிறு) அன்று ததேகூ (கனடா) ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறோம். கனடாவுக்கான இவர்களது பயண ஒழுங்குகள் நிறைவு செய்யப்பட்டுவிட்டது. எதிர்வரும் ஓகஸ்ட் 9 (வெள்ளி) ரொறன்ரோ வரும் இவர்கள் அடுத்த நாள் (சனிக்கிழமை) இங்குள்ள மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஊர்ச்சங்க சார்பாளர்கள் போன்றோரைச் சந்திக்கிறார்கள். பின்னர் ஓகஸ்ட் 11 (ஞாயிறு)

GO ரயில் வண்டி Cables வெட்டப்பட்டுள்ளது. நாசவேலை காரணமென GO அதிகாரிகள் சந்தேகம்
Wed, 07 Aug 2013 13:16:59 +0000

செவ்வாய் கிழமை இரவு பிக்கரிங் பகுதியில் GO  Station கேபிள்கள் வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது நாசவேலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இதன் காரணமாக திருத்த வேலைகள் இடம்பெறுவதால் திருத்த வேலைகள் பூர்த்தியாகும் வரை Lakeshore East line GO  போக்குவரத்து தாமதமாகலாமென அதிகாரிகள் கூறியுள்ளனர். பொலிசார் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அறிவிப்புக்குறி  முறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில் பெட்டிகள் பாதுகாப்பான அளவு இடை வெளியில் வைத்திருக்கப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தென்மேற்கு ஒட்டாவா பகுதியில் குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி மரணம்
Wed, 07 Aug 2013 13:03:14 +0000

தென்மேற்கு ஒட்டாவா பகுதியில் Elgin என்ற இடத்தில் அருகில் 53 வயது நபர் ஒருவர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியானவரின் பெயர் Joseph Higgins என்றும் அவர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.. சென்ற சனிக்கிழமை இரவு அவர் தனது மகளுடன் குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது திடீரென தோன்றிய மின்னல் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகளுக்கு எவ்வித

கனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் முயல்களும், வாத்துக்களும் திருட்டு
Wed, 07 Aug 2013 12:50:45 +0000

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் சனிக்கிழமை இரவு சில முயல்களும், வாத்துக்களும் திருடப்பட்டு இருப்பதாக Zoo காவலாளி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது இந்த ஒரு மாதத்திலேயே நடைபெறும் இரண்டாவது திருட்டு சம்பவம் ஆகும். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Nanaimo 4-H club barn in Beban Park என்ற மிருகக்காட்சி சாலையில் பலவகையான அரியவகை உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றது. அதில் சில வாத்துக்களும், முயல்களும் சனிக்கிழமை இரவு திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த

மேலும் பார்க்க →

Latest News

News by Domains

LankaSri

Weliweriya killinges: Who answers the public through parliament: CPA – Cardinal condemns the killing and attack on the Church
Wed, 7 August 2013 17:21:19

The Centre for Policy Alternatives (CPA) notes with the greatest alarm and anxiety the distressing events that transpired at Weliweriya in the Gampaha District of the Western Province last Thursday, 1st August 2013.

Navi Pillay do not want to visit North !Visit Weliweriya: Karu Jayasuriya
Wed, 7 August 2013 17:14:08

UNP MP Karu Jayasuriya says that the propaganda taken by the LTTE sympathizing Tamil diaspora that Sri Lanka Army is a genocidal military force, has gained wings after the military intervention in Weliweriya.

The Chief Minister’s post is for five years, not for six months: Dayasiri
Wed, 7 August 2013 17:11:44

“The belief of many is that I will be going to the parliament after a period of six months. That is incorrect as the Chief Minister’s post is for a period of five long years.” This was disclosed by the new candidate of the Wyamba PC election Dayasiri Jayasekara.

Lankan Muslims to celebrate Ramadan on Friday
Wed, 7 August 2013 17:08:42

Since the new moon has not been sighted, Muslims in Sri Lanka will celebrate the Ramadan festival on Friday (August 9), the Colombo Grand Mosque stated.

The funeral of student Ravishan Perera held
Wed, 7 August 2013 16:27:48

The funeral of student Ravishan Perera who injured during the Weliweriya incident and died later was held at the Weliweriya Roman Catholic Public Cemetery today.

No government helicopters for election campaign
Wed, 7 August 2013 16:22:48

The use of helicopters and aircraft at the public expense for election campaigns has been prohibited.

Dr.Manoharan expresses concern over hoisting Commonwealth summit in SriLanka
Wed, 7 August 2013 15:55:45

Doctor Kasipillai Manoharan express concern over hoisting commonwealth heads meeting in SriLanka where country fail to prove law and order in this country.

Japanese princess to visit Lanka
Wed, 7 August 2013 15:51:53

Princess Tsuguko,the eldest daughter of Japanese Prince Takamado (27) will arrive in Sri Lanka on August 19 for four day visit.

Animal sacrifice of the Chilaw Munneshwaram Kovil temporarily halted
Wed, 7 August 2013 15:32:39

The management of the Chilaw Munneshwaram Sri Bhadrakhali Kovil has decided to temporarily halt its annual animal sacrifice.

Kelaniya prepared for Mervyn's referendum
Wed, 7 August 2013 15:29:44

11 UPFA members of the Kelaniya Pradeshiya Sabha including its Chairman Prasanna Ranaweera said that they were ready to face the leadership ballot proposed by Minister Mervyn Silva last Monday.

See Even More →

Related Posts:

  • No Related Posts

«