Today’s Sri Lankan News 09-08-2013 இலங்கைச் செய்திகள் 09-08-2013 by Kalapam.com

பிரதான செய்திகள்

செய்தித் தளங்கள்

TamilWin

கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிட ஏராளமான பொது மக்கள்!
Thu, 8 August 2013 23:56:41

அண்மையில் கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இறங்குதுறை மற்றும் களஞ்சிய சாலைகள் என்பவற்றை காண்பதற்காக ஏராளமான பொது மக்கள் அங்கு செய்வதாக துறைமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

வெலிவேரிய அசம்பாவிதத்தில் பலியான ஒரு பிள்ளையின் தந்தையின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
Thu, 8 August 2013 23:50:23

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, காயமடைந்திருந்து சிகிச்சை பயனில்லாமல் மரணமான ஒரு பிள்ளையின் தந்தையான நிலந்த புஸ்குமாரவின் இறுதி கிரியைகள் நேற்று மாலை நடைபெற்றன.

யாழில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி தரமான நிலையில் உள்ளன: ஜி.எ.சந்திரசிறி – பிள்ளைகள் கல்வியை எதிர்காலத்தில் சிறந்த முறையில் அடைய வேண்டும்: எஸ்.சத்தியசீலன்
Thu, 8 August 2013 14:52:20

யாழ்ப்பாணத்தில் கைவினைப் பொருட்கள் உற்பத்தில் தரமான நிலையில் வளர்ச்சியடைந்துள்ளதென வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்தார்.

யாழில் தரமற்ற சிற்றூர்திகளால் பயணிகள் பாதிப்பு – யாழில் மழை பொய்த்ததால் விவசாயிகள் பாதிப்பு – மாணவர்களுக்கு சிறந்த பயன் தரும் திறந்த பாடசாலைக் கல்வித் திட்டம்
Thu, 8 August 2013 14:32:33

பருத்தித்துறைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகின்ற சிற்றூர்திகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் தாம் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

யாழில் வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு – சாவகச்சேரி வடக்கில் திருடர்களின் கைவரிசை
Thu, 8 August 2013 14:00:56

வடக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேடபாளர்களுக்கு யாழில் பாதுகாப்பு இல்லை என தேர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் நாகபாம்புச் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுகின்ற மதிமுகராசா விஜயகாந் தெரிவித்தார்.

இராஜதுரை எம்.பி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகல்
Thu, 8 August 2013 13:47:01

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பெருமாள் ராஜதுரை, இ.தொ.கா.விலிருந்து இராஜினாமா செய்து கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக வயோதிபர்கள் இறப்பதாக தகவல்
Thu, 8 August 2013 13:18:19

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக வயோதிப பருவத்தில் இருப்பவர்கள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாண சபைத் தேர்தல் வெற்றி முழு நாட்டுக்கும் கிடைக்கும் அரசியல் வெற்றி!- மைத்திரிபால சிறிசேன
Thu, 8 August 2013 12:39:20

சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற தெளிவான அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொம்பனித் தெரு காணி வழக்கு!- ஆஜராகுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நீதிமன்றம் உத்தரவு
Thu, 8 August 2013 11:59:44

இந்தியாவின் டாடா நிறுவனத்திற்கு வழங்குவதற்காக கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக தமக்கு போதுமான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்று பிரதேசவாசிகள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தேர்தல் விதிகளுக்கு முரணாக ஈபிடிபி பா.உ. சந்திரகுமார் பிரசார நடவடிக்கை! கூட்டமைப்பு முறைப்பாடு
Thu, 8 August 2013 11:26:50

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசசார்பு ஈ.பி.டி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தேர்தல் விதிகளுக்கு முரணாக அரசாங்கள் ஊழியர்களைக் கொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கையிலும், வேட்பாளர் அறிமுக நிகழ்வினையும் நடத்தியமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

PuthinapPalakai

வன்னியில் 1900 அஞ்சல் வாக்குகளை மோசடி செய்யும் படையினரின் முயற்சி முறியடிப்பு
வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 13:42 GMT

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், முன்பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்ட 2500இற்கும் அதிகமானோரை, சிறிலங்கா அரசாங்கம் சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துள்ளது.

மக்களை காப்பாற்ற முயன்ற அருட்சகோதரியை துப்பாக்கியால் மிரட்டிய சிறிலங்கா படையினர் – பங்குத்தந்தை
வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 07:36 GMT

பொதுமக்களைப் பாதுகாக்க முயன்ற ஒரு அருட்சகோதரி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டார். பொதுமக்களைத் தாக்கி, இழிவான வார்த்தைகளால் மதகுருமாரை திட்டி அவமதித்த இராணுவத்தினரின் செயலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

சிறிலங்காவில் அங்கர், மலிபன், டயமன்ட் பால்மா விற்பனைக்குத் தடை
வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 01:13 GMT

நியுசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும், அங்கர், மலிபன், டயமன்ட் பால்மா வகைகளை, விற்பனை செய்யக் கூடாது என்று அறிவித்துள்ள சிறிலங்கா அரசாங்கம், பால்மா தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடைசெய்துள்ளது.

அழைப்பிதழுடன் டெல்லி செல்கிறார் பீரிஸ் – ஏற்பாரா மன்மோகன்சிங்?
வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 00:44 GMT

கொமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்சிங் பற்கேற்பதா இல்லையா என்பது, ஐ.நா.மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா பயணத்தை அடுத்து அளிக்கவுள்ள அறிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களிலேயே தங்கியுள்ளது.

சிறிலங்கா தூதுவரை சவுத் புளொக்கிற்கு அழைத்துக் கண்டித்தது இந்தியா
வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 00:37 GMT

இதையடுத்தே, சிறிலங்கா தூதுவர் சவுத் புளொக்கிற்கு அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹாவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று இந்திய அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் 1ம் நாள் கலைப்பு
புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 15:20 GMT

நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் முதலாம் நாளுடன் கலைக்கப்படுவதாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் அரசியலில் புதிய வாசல்களை திறப்பாரா நீதியரசர் விக்னேஸ்வரன்?
புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 08:13 GMT

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், முதலமைச்சராக பதவியேற்கும் விக்னேஸ்வரன் சாதி, மதம், பிராந்தியம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து வடக்கு மாகாண சபையை தன்னால் நிர்வகிக்க முடியும் என நம்புகிறார்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் – சீன அதிகாரிகளுடன் சிறிலங்கா அதிபர் ஆலோசனை
புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 01:48 GMT

அலரி மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பணியைப் பொறுப்பேற்றுள்ள சீன மேர்ச்சர்ன்ட் குழும நிறுவனத்தின் தலைவர் லீ ஜியாங்கொங் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றனர்.

வெலிவெரிய தாக்குதலுக்கு பிரித்தானியாவும் கவலை
புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 01:09 GMT

வெலிவெரியவில் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரித்தானியா, இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

வெலிவெரிய தாக்குதல்: அனைத்துலக விசாரணையைக் கோருகிறது ஐதேக
புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 00:49 GMT

இறுதிப்போரில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத ஐதேக, வெலிவெரிய தாக்குதல் குறித்து அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

Yarl

மத்திய கிழக்கில் சித்திரவதைக்குள்ளான மேலுமொரு பெண் வைத்தியசாலையில். வீடியோஇணைப்பில்.
Thu, 08 Aug 2013 23:16:29 +0000

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் அராபியர்களால் சொல்லொணாத் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு சித்திரவதைக்குள்ளானவர்கள் ஒருவரேனும் வாராந்தம் இலங்கைக்கு வந்தவண்ணமே உள்ளனர். இந்த வரிசையில் நேற்று முந்தினம் மாத்தளை மடவள பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் மிகவும் சித்திர வதைக்குள்ளான நிலையில் இலங்கை திரும்பி மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண், தன்னை அடித்து துன்புறுத்திய எஜமானர்கள் தனது தலைமுடியை வெட்டியதாகவும் பல நாட்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு கூட அனுமதிக்க வில்லை என்றும் குறிப்பிடுகின்றார். 
அத்துடன் தனக்கான ஊதியத்தை 2 மாதங்களாகியும் வழங்காத நிலையில் ஊதியம் கேட்டபோது இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கின்றார். 
[youtube http://www.youtube.com/watch?v=FDOnfuAXts0?html5=1&fs=1&w=640&h=390]
http://www.ilankainet.com/2013/08/blog-post_5008.html
 

புங்குடுதீவில் கரையொதுங்கிய 7 சடலங்களும் வெலிவேரியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடயவை – லங்கா ஈ நியூஸ்
Thu, 08 Aug 2013 23:03:43 +0000

கடந்த இரு தினங்களாக யாழ் தீவகமான புங்குடுதீவுக் கரையில் ஒதுங்கிய 7 ஆண்களின் சடலங்களும் வெலிவேரியாவில் கோத்தாபாயவின் நேரடி உத்தரவின்பேரில் கொல்லப்பட்ட சிங்கள ஆண்களினுடயவை என்று சிங்கள இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் படங்களுடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. 
 
இவ்வாறு கரையொதுங்கிய சடலங்களில்  இரண்டைத்தவிர மீதியானவை முழு நிர்வாணமாக இருந்தன என்றும், எவற்றிலுமே துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படவில்லை என்று தெரிவிக்கும் அந்த இணையச் செய்தி, இவை அனைத்திலுமே முள்ளந்தண்டுப்பகுதியில் பாரிய காயம் காணப்படுவதாகவும், சிலவற்றில் நெடுந்தூரம் இழுத்துவந்ததற்கான அடையாளமாக கால்களில் தோலுரிந்து காயம் காணப்படுவதாகவும் கூறுகிறது. 
மேலும் சில சடலங்களில் கால்ப் பெருவிரல்கள் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறும் இச்செய்தி, 7 சடலங்களில் இரண்டு ரகசியமாக யாழ் போதனா வைத்தியசாலை பிணவறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகிறது.
 
அண்மையில் தமிழ் ஆண்கள் எவரும் காணாமல்ப் போகவோ அல்லது அரசால் கொல்லப்பட்டோ இருக்கவில்லை என்பதாலும், கொல்லப்பட்டவர்களது முகங்களின் தோற்றத்தை வைத்தும் இவை சிங்களவர்கள்தான் என்றும் அது கூறுகிறது. 
 
வெலிவேரியாவில் தனது கொலைப்படையினரால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதையின் பின்னர் கொல்லப்பட்ட இவர்கள் யாழ்ப்பாணத்தில் புதைகப்பட்டதன் காரணம் சிங்களவர்களுக்குச் சந்தேகம் வராமல் இருப்பதற்காகத்தான் என்றும் இது கூறுகிறது. 
http://lankaenews.com/English/news.php?id=13800

தமிழர் காணிகளை பணத்திற்காக சிங்களத்திற்கு தாரைவார்க்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
Thu, 08 Aug 2013 22:58:38 +0000

முத்தையா காணி திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் வினாயகபுரம் 35 ஏக்கர் நிலத்தை தமிழ் அரசியல்வாதிகளின் உதவியுடன் அபகரிப்புக்கு எதிராக திருக்கோவில் பிரதேச சபை நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதாக அதன் தவிசாளர் தெரிவிக்கின்றார்.
 
காணி உரிமையாளர்கள் 1978 ஆண்டு அவுஸ்ரேலியா சென்றுவிட்டார்கள். நீண்ட காலத்திற்கு கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருக்கு அதன் உரிமைகள் கைமாற்றம் (pழறநச ழக யவவழசநெல வழங்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இவ்வாறு கைமாற்றம் செய்யப்பட்ட காணி, காணியில்லாத அப்பகுதி தமிழ் மக்களுக்கு ஒரு பகுதி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பேரழிவினால் சிலர் இறந்து விட்டார்கள். அத்துடன், அக்காணிக்கான உரிமைப் பத்திரமும் அழிவடைந்துள்ளது. 
 
பின்னார் நிதர்சன் இவருக்குத்தான் (pழறநச ழக pழறநச ழக யவவழசநெல)  பவர் ஒவ் அற்றோனி வழங்கப்பட்டள்ளது. இவர், அரச மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிவர் இவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் நேரு, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரிடம் அழைத்துச் சென்று, இவர் மரமுந்திரிகை செய்கை பண்ணப் போகிறார். இதனால் ஒரு சிலருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும், எனவே இந்த காணியினுடாக அமைக்கப்பட்டுள்ள வீதியை அகற்றிக் தருமாறு எழுத்துமான என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த வீதியானது, சுனாமி தாக்கத்தின் பின்னர், அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தற்காலியமாக அமைக்கப்பட்டது. இவ்வாறு சட்டரீதியற்ற முறையில் அமைக்கப்பட்ட இவ்வீதியை அகற்ற அனுமதி வழங்கியுள்ளார்.
 
எனினும், இந்த காணியை விற்னை செய்யவா? எனவும் தவிசாளர் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் இதனை மறுத்துள்ளார்கள்.
 
இந்த காணி கடற்கரையோரமாக உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 150பேர் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதற்காக தற்காலிய கொட்டகைகளை அமைத்துள்ளனர். 
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் முகவராக செயற்பட்டு, காணி சிங்களவர்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிங்களவர் இலண்டனில் வசித்துவருபவர்;. சந்திரகாந்தனும் இலண்டனில் வசிப்பவர். 
 
அதன்பின்னர், காணியை கொள்வனவு செய்த சிங்க இனத்தைச் சேர்ந்தவர், சுற்றிவர வேலி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
 
இதனால், மீன்பிடியில் ஈடுபட்டவர்களையும் வெளியேறுமாறு தெரிவித்து சுற்றுவேலியை அமைந்துள்ளான். இதனை உடனடியாக தடுக்குமாறு கோரி இந்த மீனவர்கள் திருக்கோவில் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதையடுத்து, இதனை தடுப்பதற்காக இடைகால தடை உத்தரவை பெற நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
இது தொடர்பாக திருக்கோவில் தவிசாளர் புவிராஜ் தெரிவிக்கையில், நான் பதவி ஏற்று குறுகிய காலத்தில் என்னை ஏமாற்றும் நடவடிக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
 
எவ்வாறாயினும், நகர அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் எனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் எடுத்துள்ளேன் என்றார்.
 
இவ்வாறு, அம்பாறை மாவட்டத்தில் தமிழர்க்குச் சொந்தமான நூற்றக் கணக்கான ஏக்கர் காணிகளில் இன்னும் மீள்குடியேறமுடியாத நிலையில், சிலர் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துவருவர்களின் காணிகளை, ஊர்க்கு நன்மை செய்வதாக தெரிவித்துக் கொண்டு நேரு சந்திரகாந்தனைப் போன்றவர்களைப் போல சிலர் இவ்வாறு தமிழர்க்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
http://www.sankathi24.com/news/32172/64//d,fullart.aspx

அறுகம்பை உல்லாச புரியில் பிரசித்தி பெற்ற உணவகமொன்று தீக்கிரை
Thu, 08 Aug 2013 22:56:39 +0000

பொத்துவில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட அறுகம்பை உல்லாச புரியில் பிரசித்தி பெற்ற உணவகமொன்று நேற்று தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
உல்லை அறுகம்பையில் உல்லாச விடுதியும் உணவகமும் நடத்திவரும் முஹம்மது சாஜஹான் என்பவரின் வை நொட் எனும் உணவகம் இனந்தெரியாத விஷமிகளால் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.உணவகத்தின் கூரை மற்றும் உணவகத்தின் பல முக்கிய தளபாடங்களும் சம்பவத்தில் அழிந்துள்ளன.
பொத்துவில் குற்றத்தடுப்பு பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.sankathi24.com/news/32174/64//d,fullart.aspx
 

சிறீலங்காவில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன!
Thu, 08 Aug 2013 22:54:55 +0000

சிறீலங்காவில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களை கட்டுப்படுத்த நீதித்துறையை வலுப்படுத்த வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்படுகிறது.சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் 30 ஆண்டுகள் பழமையானவை என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாட்சியங்கள் தொடர்பான சட்டங்களும் ஒரு நூற்றாண்டு பழமையானது என பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.உத்தேச சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே நாட்டின் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
http://www.sankathi24.com/news/32175/64//d,fullart.aspx

வவுனியாவில் மூன்று சிறுவர்களைக் காணவில்லை!
Thu, 08 Aug 2013 22:53:54 +0000

வவுனியாவில் மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது வேவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் காணாமல் போயிருக்கின்றமை தொடர்பில் வவுனியா காவல் நிலையத்தில் பெற்றோர்களால் முறைப்படு செய்யப்படடுள்ளன. வவுனியா கல்மடு பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பூ. சதீஸ் என்ற சிறுவனைக் காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இச்சிறுவன் தினமும் ஆலயம் ஒன்றிற்கு பூசையினை மேற்கொள்ள சென்று வரும் நிலையிலேயே கடந்த 5ம் திகதி சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. இதேவேளை 13 வயதான சு. தில்சான் 9 வயதான நா. டிலக்கசன் முதலாக மூன்று சிறுவர்களைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன இச்சிறுவர்களை இராணுவத்தினரும் காவல்துறையினரும் மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் தேடுவதாகத் தெரிவிக்கின்றனர். அண்மைய காலங்களில் வவுனியாவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதுடன் இந்த ஆண்டு மார்ச்ச மாதமும் மூன்று சிறுவர்கள் காணாமல் போய் மீட்கப்பட்டிருந்தனர். கடந்த பல ஆண்டுகளாக சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.sankathi24.com/news/32176/64//d,fullart.aspx
 

கிழக்கில் படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கை அதிகரிப்பு!
Thu, 08 Aug 2013 22:52:29 +0000

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் காவல்துறையினர் படையினர் மற்றும் கடற் படையினர் ஆகியோர் இணைந்த ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.
மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களில் இந்த ரோந்து நடவடிக்கைள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் தொடர்பில் அவதானிப்பதற்காகவே இந்த ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரையோரங்களிலுள்ள விடுதிகளில் தங்குபவர்கள் நடமாடுபவர்கள் வெளிப் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து கடற்கரை ஓரங்களில் காணப்படுபவர்கள் தொடர்பில் ரோந்து செல்லும் பாதுகாப்பு படையினர் அவதானம் செலுத்தி வருகின்றனர்.
அண்மை காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.sankathi24.com/news/32177/64//d,fullart.aspx

சிறிலங்காவில் ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி – நிரோன் பாதுக்க
Thu, 08 Aug 2013 22:50:24 +0000

சிறிலங்காவில் ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியே இடம்பெறுகின்றது என்று மேல் மாகாண சபை உறுப்பினரான நிரோன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ஹிட்லரைப் போன்றே ஆட்சி செய்து வருகின்றார். ஹிட்லர் அன்று நீதி கேட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு வதைத்துத் துன்புறுத்தியதைப் போன்றே மகிந்த தண்ணீர் கேட்ட மக்களை இரணுவத்தைக் கொண்டு அடக்கியுள்ளார். இராணுவம் வெற்றியடைய வேண்டும் என்று போதி பூஜை செய்து பிரித் ஓதி சமய வழிபாடுகளில் ஈடுபட்ட மக்களை அதே இராணுவமே சுட்டுக்கொன்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இராஜகிரியவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நிரோன் பாதுக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் இடம்பெறும் போது நாம் மௌனமாக இருந்தோம். சிலாபம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொலைகள் இடம்பெற்றபோதும் நாம் சிங்கள பௌத்தர்கள் என அமைதியாக இருந்தோம்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறும் போது அதற்கும் மௌனமாக இருந்தோம். முஸ்லிம்களுக்கு எதிராக அநீதிகள் இடம்பெறும் போது அது முஸ்லிம்களுக்கு என்றோம். எக்னெலிகொட மற்றும் லசந்த விக்கிரமதுங்க ஆகியோருக்கு எதிராக இடம்பெற்றபோது அவர்கள் பத்திரிகையாளர்கள் அரசுக்கு எதிராக எழுதியமையால் அவ்வாறு இடம்பெற்றது என்றோம்.
இந்தவகையில் வெலிவேரிய மக்கள் குடிநீர் கேட்டு வீதியில் இறங்கி அரசிடம் தீர்வு கேட்டதற்கு இராணுவத்தை பாவித்து அரசாங்கம் அம் மக்களை சுட்டுக் கொன்றுள்ளது. மாவிலாறு வெற்றி குறித்துப் பேசிய சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இன்று எங்கே போய்விட்டனர். இராணுவத்திற்காக போதி பூஜை மற்றும் பிரித் ஓதி சமய வழிபாடுகளில் ஈடுபட்ட மக்களுக்கே அந்த இராணுவம் எதிராக செயற்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.sankathi24.com/news/32178/64//d,fullart.aspx

வேலணையில் கரையொதுங்கிய சடலங்களை அடையாளம் காண உதவுமாறு யாழ் வைத்தியசாலை கேரிக்கை
Thu, 08 Aug 2013 22:49:03 +0000

ஊர்காவற்றுறைப் காவல்துறையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு இன்றுவரை  அடையாளம் காணப்படாத இரு பெண்களின் சடலங்களையும் அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்தியாசாலைப் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.ஸ்ரீபவானந்தராசா நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
சிறுமியின் சடலம் ஒன்றும் பெண்ணொருவரின் சடலமும் கடந்த ஜீலை மாதம் 31 ஆம் திகதி மேற்படி காவல்துறையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் யாழ்.தீவகம் வேலணையிலுள்ள கடற்கரைகளில் கரையொதுங்கிய சடலங்களே மேற்படி இரண்டு சடலங்களுமாகும்.
இவர்கள் யார், இவர்கள் எங்கே சென்றபோது உயிரிழந்தார்கள் என்ற எந்தவொரு விபரங்களும் தெரியவரவில்லை. அவுஸ்திரேலியாவுக்குச் சென்றபோது கடலில் ஏற்பட்ட படகு விபத்தில் இவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று சிலர் கருத்துக்களை முன்வைத்தாலும் அது சந்தேகத்திதற்குரியதாகவே நோக்கப்படுகின்றது.
ஏனெனில், அவுஸ்திரேலியாவுக்கு சென்ற படகு எதுவும் அண்மையில் சிறிலங்காவை அண்மித்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகவில்லை. மேலும்,  அவுஸ்திரேலியாவுக்கு அண்மையில் சர்வதேசக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியவர்களின் சடலங்களாயின் அவை கடல் நீரோடு அடிக்கப்பட்டு வேலணைக் கடற்பிரதேசத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லையென்று நம்பப்படுகின்றது. இதனால் மேற்படி சடலங்கள் யாருடையவை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
http://www.sankathi24.com/news/32179/64//d,fullart.aspx

வடக்கு கிழக்கு காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் -TNA
Thu, 08 Aug 2013 21:52:47 +0000

 
 
வடக்கு கிழக்கு காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் புதல்வரது காணிகள் உள்ளிட்ட காணிகளை அரசாங்கம் சுவீகரித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சம்பூரில் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் கிழக்கு மக்களுக்கு வாக்குறுதி அளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95030/language/ta-IN/article.aspx

TamilMirror

ரூ.50 திருடியவருக்கு சிறை
Thu, 08 Aug 2013 21:13:59 GMT

பெண் வழக்குரைஞரிடமிருந்து 50 ரூபாவை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு 10 வருடத்துக்கு ஒத்திவைத்த…

மேலும் வாசிக்க…

இரு மொழிகளில் ஆறுமாதங்களுக்குள் அடையாள அட்டை
Thu, 08 Aug 2013 20:34:45 GMT

தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் ஆறு மாதங்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்…

மேலும் வாசிக்க…

நீதவான் கூறாதது இணையத்தில்; அறிக்கை கோரியது நீதிமன்றம்
Thu, 08 Aug 2013 20:15:24 GMT

தான் அன்று உத்தரவிடாதவற்றை கூறி மக்களை தவறாக வழிநடத்தியது யாரென்பதனை தேடியறிந்து அறிக்கையிடுமாறு கம்பஹா பிரதான…

மேலும் வாசிக்க…

நான்காவது குழுவும் பப்புவாவுக்கு அனுப்பிவைப்பு: ஆஸி
Thu, 08 Aug 2013 19:53:50 GMT

புதிய பிராந்திய குடியேற்ற ஏற்பாட்டுக்கமைய புகலிட கோரிக்கையாளர்கள் 39 பேர் அடங்கிய நான்காவது குழுவினரும் பப்புவா நியூகினியா…

மேலும் வாசிக்க…

சனி முதல் விண்கற்கள் பொழியும்
Thu, 08 Aug 2013 12:51:18 GMT

எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை முதல் இலங்கையில் விண்கற்களின் பொழிவினை அவதானிக்கலாம் என தொழில்நுட்ப, ஆராய்ச்சி…

மேலும் வாசிக்க…

'பொன்ரேறா' விளம்பரங்களை தடுக்குமாறு இடைக்கால தடை
Thu, 08 Aug 2013 12:19:59 GMT

தமது உற்பத்திகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என பொன்ரேறா பிராண்ட்ஸ் லங்கா லிமிட்டெட், மக்களை ஏமாற்றும் வகையில்…

மேலும் வாசிக்க…

'அரசில் ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதியே சக்தி வாய்ந்தவர்'
Thu, 08 Aug 2013 10:22:28 GMT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த முஸ்லிம் அரசியல்வாதியாக…

மேலும் வாசிக்க…

நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
Thu, 08 Aug 2013 09:33:18 GMT

வடக்கில் உள்ள காணிப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்மொழிந்த…

மேலும் வாசிக்க…

நோன்பு பெருநாள்: கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவுக்கு எதிராக நடவடிக்கை
Thu, 08 Aug 2013 08:00:12 GMT

கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஜம்இ…

மேலும் வாசிக்க…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; இருவர் பலி
Thu, 08 Aug 2013 07:56:42 GMT

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், மூவர்….

மேலும் வாசிக்க…

போதையில் வாகனம் செலுத்திய தேரருக்கு சிறை
Thu, 08 Aug 2013 07:45:35 GMT

'அம்மாவா பெண், மனைவியா பெண், தங்கையா பெண், அக்காவா பெண்'என்று உரத்த குரலில் பாடலை பாடியபோது…

மேலும் வாசிக்க…

நளின் எம்.பியாக சத்தியப் பிரமாணம்
Thu, 08 Aug 2013 07:45:07 GMT

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நளின் பண்டார இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்…

மேலும் வாசிக்க…

அந்த முப்பது நாட்கள்…
Thu, 08 Aug 2013 06:32:08 GMT

அன்று வெள்ளிக்கிழமை… வெள்ளிக்கிழமை என்றால் உங்களுக்கு தெரியும் முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை நிறை…ஓர் அனுபவ பகிர்வு
மேலும் வாசிக்க…

வெலிவேரிய சம்பவம்; நூறு இராணுவத்தினரிடம் விசாரணை
Thu, 08 Aug 2013 06:29:59 GMT

வெலிவேரிய, ரத்துபஸ்வெல துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் இராணுவத்தின் நூறு பேரிடம் வாக்குமூலம்…

மேலும் வாசிக்க…

ரவிந்துவை சி.ஐ.டி விசாரிக்க அனுமதி
Thu, 08 Aug 2013 06:17:31 GMT

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவிந்து குணவர்தனவை குற்றப்புலனாய்…

மேலும் வாசிக்க…

தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா
Thu, 08 Aug 2013 05:43:04 GMT

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், தங்கைக்கு பதிலாக பரீட்சைக்குத் தோற்றிய…

மேலும் வாசிக்க…

மெலிபனில் டீ.சீ.டீ இல்லை: நிறுவனம் அறிவிப்பு
Thu, 08 Aug 2013 05:21:23 GMT

மெலிபன் பால்மாவில் டீ.சீ.டீ என்றழைக்கப்படும் டய்சைனைட் டயமைட் எனும் நச்சு இரசாயனம் இல்லை என்று அவுஸ்தி…

மேலும் வாசிக்க…

நோன்பு பெருநாள் தொழுகை
Thu, 08 Aug 2013 03:56:23 GMT

கிண்ணியா, பேருவளை, கல்முனை, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களில்…

மேலும் வாசிக்க…

சில இடங்களில் இன்று நோன்பு பெருநாள்
Thu, 08 Aug 2013 02:36:14 GMT

கிண்ணியா, பேருவளை, ஏறாவூர், கல்முனை உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களில் ஒரு தொகையினர் புனித…

மேலும் வாசிக்க…

தாயகம் என்ற கோட்பாடு இல்லை: அரசாங்கம்
Wed, 07 Aug 2013 20:36:55 GMT

காலனித்துவ காலத்திலிருந்து தாயகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மாகாணங்களின் எல்லைகள் …

மேலும் வாசிக்க…

CanadaMirror

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுகாதார அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்ட போலி வைத்தியரின் பல் மருத்துவமனை
Thu, 08 Aug 2013 12:39:09 +0000

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் போலி பல் மருத்துவர் ஒருவர் நடத்தி வந்த மருத்துவமனை சுகாதார அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டது. மேலும் போலி டாக்டர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்துவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த மருத்துவமனைக்கு வந்த ஒரு பெண் கொடுத்த தகவலின் பேரில் இந்த மருத்துவமனையை திடீரென சோதனை செய்த சுகாதார அதிகாரிகள், இங்கு சிகிச்சை கொடுக்கும் டாக்டர் தகுந்த கல்வியறிவு இல்லாமல் போலியாக மருத்துவமனை நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர் சுத்தப்படுத்தப்படாத

கனடாவில் மலையில் ஏறிய 71 வயது வீரர் ஒருவர் தவறி விழுந்ததால் பரிதாபமாக மரணம்
Thu, 08 Aug 2013 12:33:07 +0000

கனடாவில் உள்ள Calgary பகுதியின் Mount Victoria near Lake Louise in Banff National Park அருகில் உள்ள மலையில் ஏறிய மலையேறும் வீரர் ஒருவர் தவறி விழுந்ததால் பரிதாபமாக பலியானார். அவருக்கு வயது 71 கனடாவின் புதன்கிழமை காலை 6.53 மணியளவில் 71 வயது நபர் ஒருவர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதத்தில் 150 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயமுற்ற அவரை மருத்துவமனைக்கு

டொரண்டோவில் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து
Thu, 08 Aug 2013 12:25:44 +0000

டொரண்டோவின் கிழக்கு பகுதியில் உள்ள Cabbagetown என்ற நகரில் புதன்கிழமை காலை வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிய விபத்தில் பலத்த காயத்துடன் அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். Cabbagetown நகரில் உள்ள Parliament streets என்ற இடத்தில் இந்த சம்பவம் காலை 6.30 மணிக்கு நடந்துள்ளதாக அப்பகுதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள்

ஸ்நோடனுக்கு தஞ்சம் அளித்ததற்கு எதிர்ப்பு காரணமாக புதினை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்த ஒபாமா
Thu, 08 Aug 2013 12:17:59 +0000

உலக நாடுகளை தொலைபேசி, இணையதளம், இமெயில் என பல நவீன வழிகளில் அமெரிக்கா வேவு பார்ப்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவர் ஸ்நோடன். முன்னாள் உளவுத்துறை ஊழியரான ஸ்நோடனை கைது செய்து தண்டிக்க அமெரிக்கா முனைப்புடன் உள்ளது. ஆனால் அவருக்கு ரஷியா தற்காலிக அடைக்கலம் கொடுத்து, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஷியாவுடன் குற்றவாளிகளை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு உடன்படிக்கை

யாழ்.தேவியின் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த பயணம் வெற்றி
Wed, 07 Aug 2013 20:16:07 +0000

வடக்கிற்கான ரயில் தடம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது. கிளிநொச்சி, அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில், அறிவியல் நகர் வரை வந்தடைந்தது. இது இவ்வாறிருக்க, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாங்குளம்,

மேலும் பார்க்க →

Latest News

News by Domains

LankaSri

Adjurnedment Motion on land acquisition by Sampathan at the parliament today
Thu, 8 August 2013 16:44:05

The Tamil National Alliance (TNA) today urged the government to abandon the acquisition of land in the north and east in the adjournment Motion moved by R. Sampanthan TNA Leader.

Government says "KP is also a citizen of this country"
Thu, 8 August 2013 16:39:31

Ravi Karunanayake accused the government of treating KP like a king while the soldiers who fought the LTTE are not given the same treatment.

93 army weapons used in the Weliweriya incident taken into police custody
Thu, 8 August 2013 16:29:01

The funeral of Nilantha Pushpakumara who died of injuries he received at the Weliweriya incident was held at his family burial ground at Kurunduwatta Gampola this afternoon.

Parliament sitting suspended
Thu, 8 August 2013 15:23:48

Parliament sittings were suspended a short while ago after the government opposed the adjournment debate proposed by TNA leader R. Sampanthan regarding the land issue in the north.

MP Rajadurai resigns from CWC
Thu, 8 August 2013 14:14:14

Nuwara Eliya District Ceylon Workers’ Congress (CWC) Parliamentarian P. Rajadurai has resigned from the party and expected to hand over his resignation letter on Saturday, sources said.

Provincial Council election victory belongs to entire nation: Maithripala Sirisena
Thu, 8 August 2013 14:09:18

General Secretary of the SriLanka Freedom Party and the Minister Maithripala Sirisena urge to hold free and fair election in the country.

Youth arrested under prevention of terrorist act released
Thu, 8 August 2013 13:38:25

Today Jaffna High Court release youth arrested under the prevention of Terrorist act.

Don't acquire Kadirgamar's property – BASL
Thu, 8 August 2013 13:04:50

A team of representatives from the Bar Association of Sri Lanka (BASL) met Land and Land Development Minister, Janaka Bandara Tennakoon, last morning (7), and made a request not to acquire the land in Jaffna belonging to former Minister of Foreign Affairs, Lakshman Kadirgamar, and allow the ownership of the land to remain with his son, Jebaratnam Christian Kadirgamar.

Two killed in Southern expressway
Thu, 8 August 2013 12:09:55

Two persons have been killed in a motor accident along the Southern Expressway in the Walipenna area this afternoon.

Postal voting for PC polls on Sept. 9-10
Thu, 8 August 2013 12:07:53

Postal voting for the North, Central and North Western Provincial Council elections will take place on September 9 and 10, the Elections Secretariat said today.

See Even More →

Related Posts:

  • No Related Posts

«