இலங்கையில் சமாதானம் வேண்டி ஜப்பானியர்கள் பாதயாத்திரை

ஜப்பான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பலர் இலங்கையில் சமாதானம் வேண்டி, சமாதான பாதயாத்திரையினை நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யாத்திரை பிக்கு யொக்கோட்சின் 33ஆவது ஆண்டு நினைவுநாள் வழிபாடுகளை முன்னிட்டு யாழ் சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது.

நாங்கள் பல நாடுகளையும், இனங்களையும் மற்றும் சமயங்களையும் சேர்ந்தவர்கள் என்றாலும் ஒவ்வொருவரையும் மதித்துப் போற்றி வணங்குகிறோம். இசைவோடும் ஒற்றுமையோடும் நாம் மீண்டும் சேர்ந்து வாழ்வோம்.

நாம் இணைந்து அழகான நீதியான வளமான உலகை நமக்கும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் காட்டுவோம். இலங்கையில் உண்மையான அமைதி ஏற்படவேண்டும். கடந்த காலத்தில் நீண்ட உள்நாட்டுப் போரில் பலியானவர்களை நாங்கள் வணங்கி வழிபடுகிறோம் எனும் எண்ணக்கருவினை மையப்படுத்தி நடைபெற்றுள்ளது.

அத்தோடு “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே – பகவத்கீதை, ”எல்லாப்புகழும் இறைவனுக்கே – குர்ஆன், ”உன்னைப் போல் உன் அயலானையும் நேசி – பைப்பிள், ”மானிடர் அகிம்சையை நோக்கி முன்னேற்ற வில்லையாகில் பேரழிவை நோக்கி விரைந்து ஓடுவர் – மகாத்மா காந்தி, போன்ற அற்புத வாக்கியங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி சர்வ சமய அமைதி பிராத்தனை நடைபெற்று இந்தியாவின் மதுரையில் சங்கரன் கோயில் அமைதி கோபுரத்திலிருந்து ஆரம்பமாகி இலங்கையின் சிவனொளிபாதமலை, கதிர்காமம், ஸ்ரீ தலதாமாளிகை, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் மற்றும் பல முக்கிய பகுதிகளினூடாக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சர்வ மதபாதயாத்திரைகள் மற்றும் சகல மத, மொழி நாடுகளைச் சேர்ந்தவர்ந்தவர்கள் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, நடத்துவது இலங்கையில் நிரந்தர சமாதான சூழல் உருவாக வேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டே என்பது முக்கிய அம்சமாகும்.

Related Posts:

«