இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச பொலிஸ் மாநாடு

சர்வதேச பொலிஸ் மாநாடு எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இலங்கையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் 40 உயர் பொலிஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம், ஊழல் மோசடி தவிர்ப்பு, குற்றச் செயல்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

Related Posts:

«