இலங்கையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள மற்றுமொரு அமெரிக்க அதிகாரி!


அமெரிக்க ராஜாங்க செயலத்தின் தென்னாசிய மத்திய ஆசிய விடயங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை உதவிச்செயலாளர் வில்லியம் பில் இ.டொட், இன்று இலங்கையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அடுல் கெசாப்பின் தவவல்படி வில்லியம் டொட், இலங்கையில் அரசாங்கத்தலைவர்கள், சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் பசுபிக் கட்டளையின் ஒருவாரக்கால மருத்துவ உதவி திட்டத்தின்போது யாழ்ப்பாணத்தில் 4000 பேர் வரை நன்மை பெற்றனர். அத்துடன், 1100 மாணவர்கள் கல்விகற்கும் ஆறு பாடசாலைகள் புனரமைக்கப்பட்டன.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சுகாதார நிலை மேம்பாடு, பாடசாலைகளின் மேம்பாடுகளை மாத்திரம், அமரிக்காவின் பசுபிக் கட்டளைப்படையினர் ஊக்குவிக்கவில்லை. அமெரிக்க – இலங்கை உறவையும் பலப்படுத்தியுள்ளதாக அடுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts:

«