இலங்கையில் மருத்துவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்: அமைச்சர் விஜேதாச சாடல்

மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கையேற்க வேண்டும் என்று அரச மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிடும்போதே நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு மருத்துவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜேதாச,

நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் பெற்றோர் கடன்பட்டு உழைத்த பணத்தைக் கொண்டு மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அதனை அரசாங்கம் கையேற்க வேண்டும் என்ற கோரிக்கை முட்டாள்தனமானது.

இலங்கையில் உள்ள மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் மட்டும் மருத்துவர்களாக இருந்தால் போதுமானது. வேறு யாரும் மருத்துவர்களாகக் கூடாது என்ற குறுகிய மனப்பான்மையுடன் செயற்படுகின்றனர்.

அதன் வெளிப்பாடே இவ்வாறான வேண்டுகோள்களாகும் என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.

Related Posts:

«