இலங்கையில் மீண்டும் சுனாமி அபாயமா..?

இலங்கையில் சுனாமி ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தென்பகுதியான காலியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காலி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை சிறிய நில அதிர்வு ஒன்று ஏற்பட்டது. எனினும், இதன் காரணமாக சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இன்று அதிகாலை 05.30 மணியளவில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று உணரப்பட்டதாக அந்த நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts:

«