இலங்கையில் 2 இலட்சம் கஞ்சா பாவனையாளர்கள்; 50,000 ஹெரோயின் பாவனையாளர்கள்!

போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக புலனாய்வுப் பிரிவு ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அது வெற்றிகரமாக செயற்பட்டுவருகிறது. இந் நிலையில் சர்வதேச புலனாய்வுப் பிரிவு ஒன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

ஆசியா மற்றும் பசுபிக் வலய நாடுகளின் போதைப் பொருள் தொடர்பிலான சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் 40வது மாநாடு “HONLEA” நடைபெறுகின்றபோது, சர்வதேச புலனாய்வுப் பிரிவு ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்ணாண்டோ  குறிப்பிட்டுள்ளார்.

 ஆசியா மற்றும் பசுபிக் வலய நாடுகளின் போதைப் பொருள் தொடர்பிலான சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களின் 40வது மாநாடு “HONLEA” தொடர்பில் தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசியா மற்றும் பசுபிக் வலய நாடுகளின் போதைப் பொருள் தொடர்பிலான சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களின் 40வது மாநாடு “HONLEA” எதிர்வரும் 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

Related Posts:

«