இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் பயணமாக இந்தியா வருகை!

இன்று டெல்லி வந்துள்ள ரணில் விக்ரமசிங்க, நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளார். இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் நாடுகளின் மாநாட்டை இலங்கை புறக்கணிதத்து. இந்த நிலையில், இலங்கை பிரதமரின் வருகையும், பிரதமருடனான அவரது சந்திப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறதது. 

 நாளை மாலை குடியரசு தலைவரை சந்திக்க உள்ள ரணில் விக்ரமசிங்க, வியாழன் அன்று இலங்கை திரும்புகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Posts:

«