இலங்கை மீனவர்கள் 52 பேரும், இந்திய மீனவர்கள் 51 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர்

இலங்கை- இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 103 மீனவர்கள் இன்று வியாழக்கிழமை வடக்கின் காங்கேசன்துறையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் வைத்து இரு நாட்டு கடற்படையினராலும் பரிமாறப்பட்டனர்.


இதன்பிரகாரம் இந்திய சிறைகளிலிருந்த 52 இலங்கை மீனவர்களும், இலங்கைச் சிறைகளிலிருந்த 51 இந்திய மீனவர்களுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளிலுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும், அவர்களது படகுகளும் இன்றுமுதல் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன  நேற்று புதன்கிழமை அறிவிந்திருந்த நிலையிலேயே, மீனவர் பரிமாற்றம் இன்று ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் மீனவர் பரிமாற்றம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

«