இலங்கை வரும் இந்திய குழு! எட்கா குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுடனான பொருளாதார உடன்படிக்கையான எட்கா தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய உயர் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.

எதிர்வரும் 9ஆம் திகதி இந்தக்குழுவினர் இலங்கை வரவுள்ளனர். இந்த உடன்படிக்கை இந்த வருட இறுதியில் கைச்சாத்திடப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்திய அதிகாரிகளின் விஜயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது

இவர்களின் விஜயம் ஜூலை 20ஆம் திகதியன்று இடம்பெறவிருந்தபோதும் இலங்கை அதிகாரிகளின் வேலைப்பளு காரணமாக பிற்போட்டப்பட்டது.

இந்தநிலையில் இந்தியக்குழுவுக்கு அந்த நாட்டின் வணிக்கத்துறை அமைச்சின் இணை செயலாளர் புபீந்தர் பஹாலா தலைமை தாங்கவுள்ளார்.

இந்த சந்திப்பை அடுத்து இரண்டாவது சந்திப்பு இந்தியாவில் இடம்பெறும். மூன்றாவதும் இறுதியுமான சந்திப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளது.

Related Posts:

«