இவ்வருடம் மத்திய தரைக் கடல் படகு விபத்துக்களில் 3800 அகதிகள் பலி: ஐ.நா

கடந்த வருடம் இவ்வாறு பலியான அகதிகள் எண்ணிக்கை 3771 ஆகும். கடந்த வருடம் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் இவ்வருடம் இதுவரை அகதிகளாக வந்தவர்களின் தொகை வெகுவாக வீழ்ச்சி அடைந்து 330 000 இற்கும் குறைவாகவே இருந்துள்ளது. மார்ச் மாதம் துருக்கி மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் கிரேக்கத் தீவுகளில் அகதிகள் வரும் தொகை மட்டுப் படுத்தப் பட்டது.

ஆனால் மிக ஆபத்தான பாதையாக லிபியாவுக்கும் இத்தாலிக்கும் இடைப்பட்ட கடற்பாதை அமைந்துள்ளது. இதில் பயணித்து வரும் ஒவ்வொரு 47 பேருக்கும் ஒருவர் உயிரிழந்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுக்கு ஆள்கடத்தி வரும் குழுக்களாலும், அகதிகள் பயணித்து வரும் படகுகள் தரம் குறைந்த அதிகளவு பேரைக் காவிக் கொண்டு வருவதாலும், மிக மோசமான காலநிலை காரணமாகவும் தான் அகதிகள் படகுகள் மூழ்கி விபத்தில் சிக்குகின்றன. இதனால் தான் பாரியளவு அகதிகள் தமது உயிரை நீத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«