இவ்வருட சீன பட்ஜெட் அறிக்கையில் இராணுவ ஒதுக்கீட்டுக்கு 12% வீத நிதி அதிகரிப்பு

சீனா தனது இராணுவத்தில் அதி நவீன ஆயுதங்கள் உட்பட இராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இவ்வருடம் அதிக கரிசணை காட்டியுள்ளது.


இதனால் கிழக்கு ஆசியாவின் ஜப்பான் மற்றும் சீனாவின் தென் கிழக்கு ஆசிய நட்பு நாடுகளுக்கு மத்தியில் யுத்தப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனப் பிரதமர் லீ கெகியாங்க் இவ்வருட பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்புக்கு (இராணுவ ஒதுக்கீடு) எந்தளவு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது என ஊடகங்களுக்கு சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் கடந்த வருடத்தை விட சீன இராணுவத்துக்கு 12.2% வீதம் அதிகமாக 808.2 பில்லியன் யுவான் ($131.6 பில்லியன் டாலர்) இவ்வருடம் ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த நிதி இராணுவத்தை நவீனப் படுத்துவதற்கும் சொந்த மண்ணிலும், கடலோர பாதுகாப்பு மற்றும் விமான எல்லைகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் படைகளை அதிகப் படுத்தவும் பயன்படவுள்ளது. இதேவேளை ஆசிய மண்ணில் இன்னொரு முக்கிய வல்லரசான இந்தியாவில் பாதுகாப்புக்காக சமீபத்தில் ஒதுக்கப் பட்டிருந்த தொகையை விட தற்போது சீனா அறிவித்துள்ள தொகையானது 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சென்ற மாதம் தாக்கல் செய்யப் பட்ட இடைக்கால பட்ஜெட்டில் $36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையே அந்நாட்டுப் பாதுகாப்புக்காக ஒதுக்கப் பட்டிருந்தது.

Related Posts:

«