இஸ்ரேல் நாட்டை புறக்கணித்த இலங்கை : ஏன் தெரியுமா?

இஸ்ரேல் ஜெருசலம் நகர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து யுனெஸ்கோ கொண்டு வந்த யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை அரசு வாக்களிக்காது தவிர்த்து கொண்டது.

26 நாடுகள் வாக்களிக்காது தவிர்த்து கொண்டதுடன் 24 நாடுகள் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தன.

வரலாற்று சிறப்புமிக்க ஜெருசலம் நகர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சட்டத்திற்கு உட்பட்ட தாக்குதல் அல்ல என யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் முன்னர் ஏற்படுத்திக்கொண்ட இணக்கத்தை மீறியுள்ளது எனவும் யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது.

அல்ஜீரியா, பிரேசில், சீனா, ஈரான், ரஷ்யா, தென் அமெரிக்க நாடுகள் உட்பட 24 நாடுகள் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தன.

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நீண்டகாலமாக சிறந்த ராஜதந்திர உறவுகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், யுனெஸ்கோவின் யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்காததன் மூலம் இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

Related Posts:

«