இஸ்ரேல் – ஹமாஸ் : யுத்தநிறுத்தத்திற்கு இணக்கம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் துருப்புக்கள் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது.


இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருந்த காஸா – இஸ்ரேல் யுத்தம் இன்று மாலை சர்வதேச நேரப்படி 19.00 மணிக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடன் அமெரிக்காவும், காசாவுடன் எகிப்தும் பேசியதன் பயனாக, இரு நாடுகளும் யுத்தநிறுத்தத்திற்கு இணங்கியுள்ளன. இதையடுத்து எகிப்து வெளிவிவகார அமைச்சர் கமெல் அமெர் யுத்தநிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.  யுத்தநிறுத்தம் மூலமாக பாலஸ்தீனத்திற்கு இன்னுமொரு வாய்ப்பை தாம் கொடுத்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு அறிவித்துள்ளார்.

எனினும் இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில், பஸ்ஸில் குண்டுவெடித்ததில், மூவர் படுகாயமடைந்திருந்தனர்.  மேலும் காசா மீது 8வது நாளாக இஸ்ரேலின் வான்வெளித்தாக்குதல் நடைபெற்றதில் பலர் உயிரிழந்தனர். இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த வாரம் புதன்கிழமை தொடங்கிய மோதல்களில் இன்றுவரை 150 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் 7 சிறார்களும் அடங்குவர்.

காஸாவில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்திருக்கும், ஹமாஸ் கிளர்ச்சிக்குழுவின் மூத்த தலைவர் ஒருவரை இஸ்ரேலிய ராக்கெட்டுக்கள் படுகொலை செய்ததை அடுத்து,  மோதல் தொடங்கியிருந்தது.

இவற்றையும் காண்க :

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *