உசைன் போல்ட்டும் மின்னலும் : பிரபலமாகும் புதிய புகைப்படம்

உலகின் மிக வேகமான மனிதர் என தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் உசைன் போல்ட். மாஸ்கோவில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 9.77 நொடிகளில் ஓடி தனது ஆளுமையை மீண்டும் நிரூபித்துள்ளார் அவர்.


 இரு ஆண்டுகளுக்கு முன்னர்  இதே போட்டியின் இறுதி ஓட்டத்தில் அவசரப்பட்டு ஓடத்தொடங்கியதால் தகுதி நீக்கம் செய்யபட்ட அவர் பின்னர் கடந்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உசைன் போல்ட் மின்னல் வேக ஓட்ட வீரர் எனும் அடைமொழிக்கு ஏற்ப அவர் தனது சாதனையை பதிவு செய்த போது நிஜமாகவே மின்னல் வெட்டிய தருணத்தை புகைப்படக் காரர் ஒருவர் மிக அழகாக பதிவு செய்துள்ளார். தற்போது இப்புகைப்படமும் மிகப்பிரபலமாகிவிட்டது.

Related Posts:

«