உலகம் சிறுவர்களுக்கு நிலவைக் காட்டியது – இலங்கையோ தலையை துண்டித்தது


1948ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை பல்வேறு வழிகளில் தீண்டி யுத்தம் என்னும் வலையை உருவாக்கி விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்றிவிட்டது.

பின்னர் விடுதலைப் புலிகளை அழித்தொழிப்போம் என்று தென்னிலங்கையில் சபதம் எடுத்துவந்து வடக்கிலும் கிழக்கிலும் யுத்தகொடூரத்தை நிகழ்தத்தியது.

அவ்வாறான சூழலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ்ச் சிறுவர்கள் திட்டமிட்ட வகையில் அழித்தொழிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களை கொன்று அழிப்பதன் மூலம் இனச் சுத்திகரிப்பை மேற்கொள்வதோடு, இளம் தலைமுறையினரை தீண்டி, அவர்களை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையவைத்தது.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்களில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் சிக்கிய அதிகமான சிறுவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

ஏதுமே அறியாத மழலைச் சிறுவர்கள் அகதியாக்கப்பட்டு, போகும் திசை எதுவெனப் புரியாது சென்ற போதும் தான் விளையாட்டு பொம்மையை கைவிட்டுச்செல்ல மறுத்துள்ளனர்.

பின்னர் வகைதொகையின்றி சிறுவர்களை கொன்றொழித்து அவர்களின் விளையாட்டுப் பொருட்களுடன் அவர்களையும் ஒன்றாகவே புதைத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக தற்பொழுது முள்ளிவாய்க்களில் ஆய்வு செய்யுமிடத்தில் சிறுவர்களின் மண்டை ஓட்டுச் சிதரல்கள் ஆங்கங்கே காணப்படுகின்றது.

அதுமட்டுமல்ல சிறுவர்களின் உடைமைகள், விளையாட்டு பொருட்கள் என்ன பல்வேறுபட்ட சிறுவர்களின் கனவுப்பொக்கிஷங்கள் அங்கே எரிந்தும், சிதைந்தும், புதைந்தும் காணப்படுகின்றன.

உலகம் சிறுவர்களுக்கு நிலவைக்காட்டி சோறூட்டியபோது, 2009ஆம் ஆண்டு இலங்கையில் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டமையே இன்றைய ஆய்வின் நிதர்சனம்.

Related Posts:

«