உலகில் மன அழுத்தம் மிகவும் குறைந்த நாடு சிங்கப்பூர் : வாக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

உலகில் மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் மன அழுத்தம் இன்றி வாழும் சமூகம் எந்த நாட்டில் உள்ளது என்பதைக் கண்டு பிடிப்பதற்காக சுமார் 150 நாடுகள் பங்குபற்றிய புதிய வாக்கெடுப்பு ஒன்று நிகழ்த்தப் பட்டது.


இதில் சிங்கப்பூர் முதலிடத்துக்குத் தெரிவாகியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் கலாச்சார ரீதியாக முன்னிலையில் இருந்த ஜோர்ஜியா, லிதுவானியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சிங்கப்பூர் தெரிவாகியுள்ளது.

28 பாகை செல்சியஸ் இல் சுடுகின்ற வெயிலில் மக்கள் வாழ்கின்ற போதும் சிங்கப்பூரில் காணப்படும் மிகச் சிறியளவு வேலை வாய்ப்பில்லாதோர் வீதத்தாலும் அதிகளவான GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியாலுமே சிங்கப்பூர் முன்னணி வகித்துள்ளது. மேலும் உலகில் அதிகளவு நேரம் மக்கள் வேலை செய்யும் நாடாகவும் சிங்கப்பூர் விளங்குகின்றது.

மேலும் நாளாந்த நடவடிக்கைகள் மூலம் மன அழுத்தத்துக்கு ஆளாகும் சிங்கப்பூர் வாசிகளின் வீதம் 36% ஆகும். இதில் அதிகபட்சம் 60% வீதம் பிலிப்பைன்ஸ் வாசிகள் ஆவார்கள். சிங்கப்பூரில் 5.2 மில்லியன் மக்கள் ஒரு கிழமைக்கு 46.6 மணித்தியாலங்கள் வேலை செய்கின்றனர். இதேவேளை சிங்கப்பூர் வாசிகள் தமது தினசரி வாழ்க்கையில் எவ்வாறு தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள் என அறிவதற்கு அவர்களிடம் பின்வரும் கேள்விகள் கேட்கப்பட்டது.

‘நேற்றைய தினம் நன்கு ஓய்வெடுத்ததாக உணர்கின்றீர்களா?
‘நேற்றைய தினம் முழுவதும் அனைவருடனும் கௌரவமாக நடக்க முடிந்ததா?
‘நேற்றைய தினம் நன்கு சிரிக்கவோ புன்னகைக்கவோ உங்களால் முடிந்ததா?

இக்கேள்விகளுக்கு தான் செய்யும் வேலை பற்றிய பாகுபாடு இன்றி 90% வீத மக்கள் நேர்மறையாக ஆம் என பதிலளித்து அசத்தியுள்ளனர்.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *