உலக பேட்மிண்டன் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறினார் சாய்னா நேவால்

உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கணை சாய்னா நேவால் மறுபடியும்  2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 


கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக இந்த இடத்துக்கு முன்னேறியிருந்தார். ஒலிம்பிக்கில் வெண்கல பதக்க வென்றதிலிருந்து உலக தரவரிசையில் 5வது இடத்தை தக்கவைத்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தற்போது மூன்றாவது தடவையாக 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதால் சாய்னாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புதிய தரவரிசையிலேயே சாய்னா இப்புதிய இடத்தை பிடித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன வீராங்கணை லீ சுயெருய் முதலாவது இடத்தை பிடித்துள்ளார். புதிய தரவரிசை குறித்து சாய்னா கருத்து தெரிவிக்கையில், ‘நான் என்னால் முடிந்த மிகச்சிறந்ததை வழங்குகிறேன். எனினும் முதலிரு இடங்களை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்திருப்பது கடினமாகும். பேட்மிண்டன் உடல் தகுதியை கருத்தில் கொண்டு விளையாடும் போட்டி. நான் இதே போன்று ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும்’ என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்திய பேட்மிண்டன் வீரர்கள் வரிசையில் காஷ்யப் 10ம் இடத்திற்கும், வளரும் மற்றுமொரு நட்சத்திர வீராங்கணை பி.வி.சிந்து 16வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுகொடுத்த  முதலாவது இந்திய வீராங்கணை சாய்னா நேவால் தான். இவருக்கு 22 வயதே ஆகிறது என்பது மற்றுமொரு பெருமை.

Related Posts:

«