உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டி 2012 : மலேசிய மாணவர்கள் சாம்பியன்ஸ்

வருடாவருடம் நடைபெரும் உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டியில் மலேசியா 12 பதக்கங்கள் பெற்று மூன்றாவது முறையாக சாதனை படைத்துள்ளது.


நவ 9 திகதி முதல் 11ம் திகதிவரை  மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடைபெற்ற ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டிகளில் மொத்தம் 30 நாடுகளிலிருந்து சுமார் 3000 பள்ளிமாணவக் குழுக்கள் பங்கு கொண்டன. ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய சிறிய ரோபோ மாடல்களை காட்சிப்படுத்தினர். இதில் மலேசிய மாணவர்கள் 2 தங்கம், 2 வெள்ளி 8 வெண்கல பதக்கங்கள் என 12 பதக்கங்களைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அதோடு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

ஆசியக்கண்டங்களிடையே நிகழ்த்தப்பட்ட இப்போட்டியில் மக்களுடன் இணையும் ரோபோக்கள் (robots Connecting people) எனும் 2012ற்கான கரும்பொருளுக்கு அமைய இரு பள்ளிகல் உருவாக்கிய ரோபக்களே தங்கம் வெற்றன.


19வயதிற்கு கீழ்பட்ட பள்ளி மாண குழுக்கள் தங்களின் முயற்சியால் மனிதர்களை போல் செயல்படும் ரோபோ மாடல்களை வடிமைத்து உருவாக்கவேண்டும். அதன் வடிவம் செயல்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மலேசியா முதன்முறையாக இப்போட்டியை நடாத்தியிருந்தது.

உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டி 2004ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. தொழிழ்நுட்பம் பெரும் வளர்ச்சி அடைந்துவரும் இக்காலத்தில் மாணவர்களிடையே அறிவியல், கணிதம்,  தொழிழ்நுட்பம் மற்றும் கிரேடிவிடி போன்ற திறன்களை ஊக்கப்படுத்தி அதனை மேலும் வளப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 2009ல் தென்கோரியாவில் நடைபெற்ற போட்டியிலும் 2010ல்  பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற போட்டியிலும் மலேசியா வென்றிருந்தது குறிப்பிடதக்கது.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *