உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: ஒரே நாளில் 62 ரவுடிகள் கைது!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அக்டோபர் 17 மற்றும் 19ம் திகதிகளில் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்ய எஸ்பி தர்மராஜன் உத்தரவிட்டிருந்தார் இதனையடுத்து போலீஸார் ரவுடிகள்  பட்டியல்களை தயார் செய்தனர் பின்னர் இவர்களில் தேர்தல் தகராறில் ஈடுபட்டவர்களின் முழு விவரங்களை சேகரித்தனர் தற்போது தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதனையடுத்து கனனியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீஸார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஒரேநாளில் 62 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

எஸ்பி உத்தரவின் பேரில் போலீஸார் நாகர்கோவில் தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்.டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதியில் அந்தந்த பகுதி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது தலைமறைவாக இருந்த ரவுடிகளை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தனர் நாகர்கோவில் சப்டிவிசனில் 17ரவுடிகளும் தக்கலை சப்டிவிசனில் 12 ரவுடிகளும், கன்னியாகுமரி சப்டிவிசனில் 8 ரவுடிகளும் . குளச்சல் சப்டிவிசனில் 25 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் . கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 62ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் ரவுடிகள் கலக்கமடைந்துள்ளனர் இதனால் குமரி மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வெளிமாவட்டங்களுக்கு தப்பி சென்றுவிட்டனர் அவர்களை கைது செய்யவும் போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்..

 

Related Posts:

«