ஊக்க மருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்!

ஊக்க மருந்து சர்ச்சையிக் சிக்கி தனது 7 டூர் த பிரான்ஸ் பட்டங்களையும் பறிகொடுத்த அமெரிக்க முன்னணி சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் முதன்முறையாக தனது தவற்றை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.


அமெரிக்காவின் ஒப்ரா வின்ஃபிரேயுடனான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று அவர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார். என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை. நான் இதுவரை மாபெரும் பொய்யொன்றை தொடர்ச்சியாக சொல்லி வந்தேன். நான் தான் தனிப்பட்ட வகையிலேயே இச்செயலை செய்ய முடிவெடுத்தேன். அவை எனது தவறுகள் தான். அதற்கான இப்போது மன்னிப்பு கேட்கவே இங்கு வந்துள்ளேன். 1999-2005 வரையிலான காலப்பகுதியில் விளையாடி கோப்பையை வென்ற அனைத்து சைக்கிள் போட்டிகளிலும், ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தேன். எனது வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம். இது ஒரு ஏமாற்று வேலை என அப்போது கருதவில்லை. உற்சாகத்துடன் போட்டிகளில் கலந்துகொள்ள என் தகுதியை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு செயற்பாடாகவே கருதினேன். நான் மாட்டிக்கொள்வேன் என ஒரு போதும் பயப்படவில்லை.

1990 களில் ஏற்பட்ட புற்றுநோயின் தீவிர தாக்கமே, எப்படியாவதும் இப்போட்டிகளில் வென்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்தை தந்தது. ஊக்கமருந்து பயன்படுத்தியமைக்கான விசாரணைகளில் தொடர்ந்து பங்கெடுக்க தயாராக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.


இவரது கருத்துக்களை வரவேற்றுள்ள அமெரிக்க ஊக்க மருந்துக்கு எதிரான ஏஜென்ஸி அமைப்பு, இதுநாள் வரை ஆர்ம்ஸ்ட்ரோங் தொடர்பில் நாமே ஏமாற்று வேலை செய்து வந்ததாக எழுந்த முரண்பாடான கருத்துக்களுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆர்ஸ்ட்ரோங் தைரியமாக முன்வந்து தனது தவற்றை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி என கூறியுள்ளது.

ஆர்ம்ஸ்ட்ரோங் தனக்கென ஒரு சிறிய ஆயுத குழு, ஊக்கமருந்து பயன்படுத்தும் முறை அறிந்த மருத்துவர் குழு, தனக்கென சில பணியாட்கள் என்பவர்கள நியமித்து வைத்திருந்து அவர்கள் உதவியுடன் சட்டவிரோத ஊக்கமருந்து கடத்தல்காரர்கள், விற்பனையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி இதுநாள் வரை ஊக்க மருந்து பயன்படுத்தி வந்திருந்ததாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அவரது அணியிலிருந்த சக வீரர்களுக்கும் ஊக்கமருந்து பயன்படுத்தும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தாராம்.

அதே போன்று மிக நுட்பமாகவும், யாரும் கண்டுபிடிக்க முடியாதபடியும், வெற்றிகரமாக ஊக்க மருந்து பயன்படுத்தும் செயற்திட்டம் ஒன்றை லான்ஸ் ஆம்ஸ்டிராங் செய்துவந்தார் என ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு எதிரான அமெரிக்க அமைப்பான யுஸாடா குற்றம் சாட்டியிருந்தது. எனினும் பல காலமாக இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துவந்த ஆம்ஸ்டிராங், இனி இவற்றை எதிர்த்து போராடப்போவதில்லை என கடந்த வருடம் அறிவித்திருந்ததை அடுத்து, 1998ம் ஆண்டு முதல் லான்ஸ் ஆம்ஸ்டிராங் பெற்ற அனைத்து பட்டங்களும் அவரிடமிருந்து பறிகப்படுவதாகவும், விளையாட்டு போட்டிகளிலிருந்து ஆயுட்கால தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த தசாப்தத்தில், உலகின் முதற்தர சைக்கிள் வீரர் எனும் பெருமையை பெற்றிருந்த ஆர்ம்ஸ்ட்ரோங் இதுநாள் வரை அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வந்தார். எனினும் தற்போது லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ரோங்கே தான் ஊக்க மருந்து பாவித்ததாக தெரிவிக்கின்ற போதும் அதை நம்ப முடியவில்லை அவரது ரசிகர்களுக்கு. ஆர்ம்ஸ்ட்ரோங் இவ்வாறு நடந்து கொள்வார் என தாம் எதிர்பார்க்கவே இல்லை என மனமுடைந்து விட்டனர். 

 

Related Posts:

«