ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: வெங்கைய நாயுடு

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.


மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுத் தொடர்பாக ஆலோசித்து வருவதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து கர்நாடக அரசு இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.

கர்நாடக அனைத்துக்கட்சி எம்பிக்கள், எம்எல் ஏக்களுடன் இன்று டெல்லியில் உள்ள  கர்நாடக பவனில் அம்மாநில முதல்வர் சித்தாராமையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் வெங்கைய நாயுடுவும் கலந்துக்கொண்டார். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெங்கைய நாயுடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும், ஊடங்களில் வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts:

«