ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்

கடந்த ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரிகளின் ஊழல் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்காமல் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரிகளின் ஊழல் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வரை ஜாதிக ஹெல உறுமய தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஊழலில் ஈடுப்படும் சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதே இல்லை என கண்டியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது ரணவக்க தெரிவித்துள்ளார்.

துஸ்பிரயோகங்களுக்கு எதிராக முகங் கொடுக்க வேண்டும், ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட புரட்சியை காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«