என்னா ஸ்டம்பிங் பாஸ்… மொஹாலியில் மிரட்டிய டோணி! #indvsnz

மொஹாலி: கேப்டன் டோணி இன்று மொஹாலியில் நியூசிலாந்து மிரட்டி விட்டார். விக்கெட் கீப்பிங்கில் கலக்கிய டோணி, பீல்டிங் வியூகத்திலும் அசத்தி விட்டார். டோணியின் சிறப்பான வியூகங்களுக்கு உடனடியாக டிவிட்டரில் பாராட்டுக்கள் மழையென பொழிந்து விட்டன.

உலகின் மிகச் சிறந்த, அதி வேகமான விக்கெட் கீப்பர்களில் முக்கியமானவர் டோணி. 444 போட்டிகளில் 151 ஸ்டம்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ளவர் டோணி.

Twitter hails 'lightening quick' MS Dhoni behind wickets in 3rd ODI

இன்று அவர் ஒரு ஸ்டம்பிங்கில் அத்தனை பேரையும் அசத்தி விட்டார். மொஹாலியில் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் அமித் மிஸ்ரா வீசிய பந்தை லூக் ராஞ்சி அடித்தபோது, அவரைத் தாண்டி வந்த பந்தை அதி வேகமாகப் பிடித்து அதே வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார் டோணி. இந்த மின்னல் வேகத்தைப் பார்த்து ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.

டோணியின் ஹெலிகாப்டர் ஷாட்டைப் பார்த்து மகிழ்ந்த. ரசிகர்களுக்கு இன்று லைட்னிங் ஸ்டம்பிங்கை தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

விக்கெட் கீப்பிங்கில் மட்டுமல்ல கேப்டன்ஷிப்பிலும் இன்று அசத்தினார் டோணி. பீல்டிங் வியூகம் வகுப்பதிலும், பவுலர்களை மாற்றுவதிலும் அவர் ஆட்டம் முழுக்க அசத்தினார். குறிப்பாக கேதார் ஜாதவை அவர் பயன்படுத்திய விதம் அசரடிப்பதாக இருந்தது. அவரது பீல்டிங் வியூகத்திற்கு நல்ல பலனும் கிடைத்தது. வேகமாக போய்க் கொண்டிருந்த நியூசிலாந்தை மட்டுப்படுத்தியதில் டோணியின் வியூகத்திற்கும் முக்கிய பங்கு உண்டு.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/PSgIvWNvJgo/twitter-hails-lightening-quick-ms-dhoni-behind-wickets-3rd-odi-265539.html

Related Posts:

«