எல்லைப் பகுதியைப் பாதுகாக்க சொந்த ஹெலிகாப்டரை உருவாக்கிய ஈராக்கியர்

59 வயதாகும் ஹட்டிம் சல்மான் எனும் ஈராக்கிய குடிமகன் ஒருவர் 30 மில்லியன் ஈராக் டினார் செலவில் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றைத் தயாரித்துள்ளார்.


மேலும் இதற்குத் தான் வசிக்கும் மாகாணத்தின் பெயரைச் சேர்த்து டியாலா 1 எனப் பெயரிட்டுள்ளார். ஈராக்கின் பக்தாத் நகரில் இருந்து 60 மைல் வடக்கே 30 000 மக்கள் தொகையுடன் அமைந்துள்ள Muqdadiyah எனும் நகரிலேயே இந்த ஹெலிகாப்டர் உருவாக்கப் பட்டுள்ளது.

ஈராக்கின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க உதவும் எனக் கூறப்படும் இந்த ஹெலிகாப்டரை, பிரித்தானியாவின் அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இராணுவ ஹெலிகாப்டர்களுடன் ஒப்பிட்டு நக்கடித்துவருகின்றன சில செய்தி ஊடகங்கள்.

பிரிட்டனின் தரம்மிக்க இராணுவ தாக்குதல் ஹெலிகாப்டரான Apache, இன் பெறுமதி 20 மில்லியன் டாலர்கள். ஆனால் சல்மானின் டியாலா 1 ஹெலிகாப்டரின் பெறுமதி 15,00 யூரோக்கள் தான். Apache ஹெலிகாப்டர்களில் இணைக்கப்பட்டுள்ளது போன்று டியாலா 1 இல் ஆயுத கவசங்கள் கிடையாது. இதனால் வான்வெளியில் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கவோ அல்லது நிலத்தில் யுத்த டாங்கிகளை குறி வைத்துத் தாக்கவோ இதனால் முடியாது. மேலும் வானத்தில் பறக்கும் போது கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் என்ற எண்ணத்தில் டியாலா 1 இற்கு நீல நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது என அந்த ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


ஆனால் இதே போன்று ஒரு தனிநபர் தயாரித்த எந்தவொரு ஹெலிகாப்டரையாவது பிரித்தானியாவில் காண்பிக்க முடியுமா? யூடியூப்பில் தரவேற்றப்படும் எந்தவொரு தனிநபரின் ஹெலிகாப்டராவது இந்த வடிவத்தில் இருந்ததுண்டா? தன் நாட்டின் மீது தேசப்பற்றுள்ள ஒருவர் இந்த ஹெலிகாப்டர் தாக்குதலில் தோல்வி அடைந்தாலும் அந்நபரின் முயற்சி எப்போதோ எம்மை வெற்றி பெற்றுவிட்டது என குறித்த ஊடகங்களுக்கு பிரித்தானிய மக்களே காமண்ட் அடித்துவருகிறார்கள்.   ஈராக்கில் தனி ஒரு மனிதரால் தயாரிக்கப் பட்ட முதல் ஹெலிகாப்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

  • No Related Posts

«