ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நிதியாண்டு வருமானம் 105 கோடி ரூபாய்!

கடந்த 2007ம் ஆண்டு ஏர் லைன்ஸ் விமான சேவை நிறுவனம், ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்துடன் இணைந்தது. இணைந்தது முதலே ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நஷ்டமே தொடர்ந்து வந்தது என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 636 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிய வருகிறது.

இந்நிலையில் 2015-16ம் நிதியாண்டில் 105 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளதாக ஏர் இந்திய அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கு காரணம் என்று பார்க்கையில்,  எரி பொருள் விலை குறைந்ததும், அதிக பயணிகள் பயணிதத்தும்தான் என்று கூறியுள்ள ஏர் இந்தியா நிறுவனம், இந்த நிதியாண்டில் இதுவரை 18 லட்சம் பயணிகள் ஏர் இந்தியா விமான சேவையை பயன்படுத்தி உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

 

Related Posts:

«