ஏ-9 வீதியில் விபத்து: இந்திய பிரஜை கைது- பிரித்தானிய பெண்ணின் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

ஆசிரியை பயணித்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏ9 வீதியின் வவுனியா – தாண்டிக்குளம் பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தை ஒட்டியவர், வடக்கு ரெயில் பாதை நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய பிரஜை என பொலிஸார் கூறினர்.

அந்த இந்திய பிரஜை வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

காலியில் பிரித்தானிய பெண்ணின் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

காலி, ஹபராதுவ தல்பே பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய பெண்ணுக்கு சொந்தமான பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய பெண்ணுக்கு சொந்தமான 2 லட்சத்து 90 ஆயிரத்து 690 ரூபா பெறுமதியான பொருட்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.

கடந்த 22 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளதாக குறித்த பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிளேக்பெரி செல்போன், கமெரா, கைக்கடிகாரம், சில தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts:

«