ஐரோப்பாவில் மிகவும் பிரபல்யம் பெறும் இலங்கை!

இலங்கையில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான படகுகளுக்கு ஐரோப்பாவில் அதிக அளவிலான கோரிக்கை உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தயாரிக்கப்படும் படகுகள் மிகவும் தரமான நிலையில் உள்ளமையினால் கடந்த வருடத்தில் மாத்திரம் படகு உற்பத்தி மூலம் 80 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, பங்களாதேஷ், மாலைத்தீவு போன்ற ஆசிய நாடுகளிலும் இந்த படகிற்கான கோரிக்கை அதிகமாக காணப்படுகின்றது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட படகுகளில் தாக்குதல் படகுகள், சுற்றுலா பயணங்களுக்காக பயன்படுத்தப்படும் படகுகள், பாதுகாப்பு படகுகள் மற்றும் கடற்பாதுகாப்பு படகளுக்கே அதிக கோரிக்கை உள்ளது.

அத்துடன் இந்த வருட இறுதியில் படகு உற்பத்தியின் மூலம் 100 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts:

«