ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் அதிபர் மனைவிக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் அதிபர் லௌரெண்ட் பாக்போவின் மனைவியார் ஸிமொன் பாக்போவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.


அவரது கணவர் லௌரெண்ட் பாக்போ ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஹோக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளார். தம்மை பதவி விலககோரி போராட்டம் புரிந்த மக்களில் சுமார் 3000 பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த இருவருடங்களுக்கு முன்னர் ஐவரிகோஸ்ட் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று பாக்போ அதிபரான போதும், அடுத்த ஐந்து மாதங்களில், இராணுவ புரட்சி மூலம் ஒட்டாராவினால் ஆட்சி கைப்பற்றப்பட்டது. இதையடுத்து பதுங்குகுழியில் ஒன்றில் பதுங்கியிருந்த போது பாக்போ அவரது மனைவியாருடன் கைது செய்யப்பட்டார். ஐவரி கோஸ்டின் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட காரணமானவர் எனும் குற்றச்சாட்டிலும்,  ஆயுதகடத்தல், சூறையாடுதல், பணமோசடி ஆகிய குற்றச்சாட்டிலும், பாக்போ மற்றும் அவரை ஆட்டிப்படைக்கும் அவரது மனைவியார் ஸிமொன் பாக்போ மீது ஐவரி கோஸ்ட் மக்கள் கடும் வெறுப்பை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *