ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா ஐசக் இலங்கை வருகை; சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வார்!

இவர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை தங்கியிருந்து, சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

அதன்பிரகாரம், ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினர்  வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராயவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினர்  அரசாங்க முக்கியஸ்தர்கள், அதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதனிடையே, ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினர்  தமது இலங்கை விஜயம் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்பிக்கவுள்ளனர். 

 

Related Posts:

«