ஐ.நா. பிரதிநிதியை சந்தித்த சிவில் சமூகத்தினர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பினது சிறுபான்மையினர் பிரச்சினைகளை ஆராயும் விசேட பிரதிநிதி இஸாக் றீட்டாவுடன் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்பின் தலைவர்கள் திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை(15) சந்தித்தனர்.

நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ஸ்தாபகர் தர்மலிங்கம் கணேஷ் தலைமையிலேயே மேற்படி சந்திப்பினை மேற்கொண்டு கலந்துரையாடலினை நடத்தினர்.

இச்சந்திப்பின் போது பல்லாண்டுகளாக மிகவும் நலிந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை பெறுவதில் உள்ள நிலைப்பாடுகளை மேற்படி சந்திப்பின் போது விளக்கி கூறினர்.

கிழக்கு மாகாண சமூக உரிமைக்கான அமைப்பின் பிரதிநிதிகளான கே.எஸ்.கண்ணன், கே.கதிரவேல் ஆகியோருடன் வடமாகாண சமூக உரிமைக்கான அமைப்பின் பிரதிநிதிகளான இரா.சுப்ரமணியம், பெரியண்ணன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related Posts:

«