ஐ.நா மனித உரிமைகள் பிரிவில் இருந்து ரஷ்யா வெளியேறுகின்றது

இந்த வாக்கெடுப்பில் 193 நாடுகள் கலந்து கொண்டன. மேலும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, குரோஷியா, கியூபா, எகிப்து,  ஹங்கேரி, ஈராக், ஜப்பான், ருவாண்டா, துனிசியா ஆகிய நாடுகள் வெற்றி பெற்று அடுத்த மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பிடிக்கவுள்ளன. கிழக்கு ஐரோப்பா சார்பில் போட்டியிட்ட குரோஷியா, ஹங்கேரி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில்  ஹங்கேரி 144 வாக்குகளையும் குரோஷியா 114 வாக்குகளையும் பெற்றன. ரஷ்யா 112 வாக்குகளையே பெற்றது. இதனால் அடுத்த வருடம் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இது சர்வதேசத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு சார்பாக அலெப்போவில் ரஷ்யா குண்டு மழை பெய்து வருவதாலேயே அது இம்முறை மனித உரிமைகள் அமைப்பில் இருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டுள்ளது. மேலும் சுமார் 87 மனித உரிமை  அமைப்புக்கள் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் ரஷ்யா இடம்பெறுவதை எதிர்த்து இருந்ததாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி இயக்குனர் அக்‌ஷயா குமார் தெரிவித்துள்ளார்.

 

Related Posts:

«