ஒடிசாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி; 40 பேர் படுகாயம்

கட்டாக்: ஒடிசாவில் பயணிகள் பஸ் ஒன்று பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் இருந்து அத்மல்லிக்கு 45-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் துகுடா அருகே பாலத்தின் வழியாக சென்றுகொண்டிருக்கும் போது எதிரே பைக் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த பைக் மீது மோதல் இருப்பதற்காக பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.

5 killed, 40 injured in bus mishap in Odisha's Angul

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பாலத்தை உடைத்துக் கொண்டு 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கள் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/l0br4TRNgeA/5-killed-40-injured-bus-mishap-odisha-s-angul-265719.html

Related Posts:

«